உச்சநீதிமன்ற வரலாற்றில் 3வது முறையாக பெண் நீதிபதிகள் கொண்ட தனி அமர்வு அமைப்பு
- உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமைத்தார்.
- இந்த 3 பெண் நீதிபதிகள் மட்டுமே கொண்ட அமர்வு அமைக்கப்படுவது மூன்றாவது முறையாகும். இந்த நீதிபதிகள் அமர்வு முன் திருமண தகராறு மற்றும் ஜாமீன் மனு உள்ளிட்ட 32 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
- இதற்கு முன், 2013 மற்றும் 2018ல், பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வு இருந்தது. 2013ல் நீதிபதிகள் கியான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் பெஞ்சில் இருந்தனர்.
- 2018 இல், நீதிபதிகள் ஆர். பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் பெண் நீதிபதிகள் மட்டுமே அடங்கிய அமர்வில் உறுப்பினர்களாக இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் தேவை. ஆனால் தற்போது 27 நீதிபதிகள் உள்ளனர்.
- உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பேலா எம். திரிவேதி, நீதிபதி பி.வி. நாகரத்னா ஆகிய மூன்று பெண் நீதிபதிகள் உள்ளனர். அவர்களுள், 2027 இல், நீதிபதி பி.வி. நாகரத்னா 'நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி' என்ற பெருமையை அடைவார்.
‘சிறுதானியங்கள்- திறன் ஊட்டச்சத்து உணவு’ மாநாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
- புதுதில்லியில் நாளை (டிசம்பர் 5, 2022) நடைபெற உள்ள ‘சிறுதானியங்கள்- திறன் ஊட்டச்சத்து உணவு’ என்ற மாநாட்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவிருக்கிறார்.
- வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடா) வாயிலாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், சிறுதானியங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
- ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு- 2023’ நிகழ்வின் முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும்.
- வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் பெருவாரியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
- இந்திய சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களின் கண்காட்சியும், வர்த்தக அளவிலான கூட்டமும் நடைபெறும்.
- ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐசி) 189வது கூட்டம் அதன் தலைமையகத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
- இந்த நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் திரு ராமேஸ்வர் தெலி கலந்து கொண்டார்.
- நிகழ்ச்சியில், திரு பூபேந்தர் யாதவ் இஎஸ்ஐயின் மாதாந்திர டிஜிட்டல் இதழான ‘ இஎஸ்ஐ சமாச்சார்’ முதல் இதழை வெளியிட்டார்.
- 2021-22 ஆம் ஆண்டிற்கான கணக்குகள் மற்றும் சிஏஜி அறிக்கை மற்றும் 2021-22 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை மற்றும் அதன் பகுப்பாய்வு ஆகியவை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- இது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்.