TAMIL
- இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடு. இந்திய கடற்கரையின் நீளம் 7517 கி.மீ. இதனால் கடலோர பாதுகாப்பு முக்கியமானது.
- நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதில் முப்படைகளில் ஒன்றான கப்பல்படை முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்தியா பாக்., இடையே 1971 டிச., 4ல் நடந்த போரில் 'ஆப்பரேஷன் டிரைடன்ட்' பெயரில் இந்திய கப்பல்படை பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இதை நினைவுபடுத்தும் விதமாக டிச. 4ல் தேசிய கப்பல்படை தினம் கொண்டாடப்படுகிறது.
- நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதில், முப்படைகளுள் ஒன்றான கப்பற்படை, முக்கிய பங்கு வகுக்கிறது. உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையாகவும் திகழ்கிறது. 1947 முதல் செயல்படுகிறது.
- இந்திய கடற்படையில், 60 ஆயிரம் மேற்பட்ட வீரர்கள் பணிபுரிகின்றனர். 1971ல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின் போது, பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி மீது இந்திய கடற்படை தாக்குதலை நடத்தியது.
- "ஆப்பரேஷன் டிரைடன்ட்' என்ற பெயரில் டிச., 4ம் தேதி தொடங்கப்பட்ட இந்த போரில் இந்திய கடற்படை சிறப்பாக செயல்பட்டது. இதன் விளைவாக வெற்றியும் பெற்றது.
- இதனை நினைவுபடுத்தும் விதமாக இந்திய கடற்படை சார்பில் ஆண்டுதோறும் டிச.,4ம் தேதி இந்திய கடற்படை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மும்பை, விசாகபட்டிணம், கொச்சி, போர்ட் பிளேர் என கடற்படை 4 மண்டலங்களாக செயல்படுகிறது.
- இத்தினத்தை முன்னிட்டு கடற்படை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு துறையில் வீரத்துடன் போரிட்டு, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு "பரம் வீர் சக்ரா', "மகா வீர் சக்ரா' மற்றும் "வீர் சக்ரா' ஆகிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.
- கடற்படையில் இளைஞர்கள் அதிகளவில் சேர முன்வர வேண்டும். இதற்கான முயற்சிகளில் கடற்படை ஈடுபட வேண்டும். மேலும் கடலோர பாதுகாப்பை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்திய கடல் எல்லைகளை கண்காணித்து, எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாத்தல்.
- கடல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாத்து, கடல் வணிகம் சிறப்பாக நடைபெற உதவுதல்.
- ராணுவத்தின் மற்ற பிரிவுகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி பணிகளில் ஈடுபடுதல்.
- பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுதல்.
- சுதந்திரத்துக்குப் பின், முதன்முதலாக இந்திய கடற்படை, 1961ல் கோவாவில் "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில், போர்ச்சுகீசிய படைக்கு எதிராக போரிட்டது. 461 ஆண்டுகளாக போர்ச்சுகள் ஆதிக்கத்தில் இருந்த கோவா மீட்கப்பட்டது.
- 1965ல் பாகிஸ்தானுக்கு எதிரான போர்.
- 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போர்.
- India is a peninsular country surrounded by sea on three sides. The length of Indian coastline is 7517 km. Thus, coastal defense is important. Navy, one of the three armed forces, plays an important role in protecting the country from enemies.
- In the war between India and Pakistan on December 4, 1971, in the name of 'Operation Trident', the Indian Navy attacked Pakistan's port city of Karachi and succeeded. As a reminder of this, National Navy Day is celebrated on the Dec 4th.
- Navy, one of the three armed forces, plays an important role in protecting the country from enemies. It is also the fifth largest navy in the world. Operating since 1947. There are more than 60,000 soldiers serving in the Indian Navy.
- During the 1971 war between India and Pakistan, the Indian Navy attacked the Pakistani port city of Karachi. The Indian Navy performed well in this battle which was started on 4th December under the name of "Operation Trident". As a reminder of this, the Indian Navy observes the Indian Navy Day on 4th December every year. Mumbai, Visakhapatnam, Kochi, Port Blair Navy operates in 4 zones.
- Various programs are being conducted by the Navy on this occasion. "Param Veer Chakra', "Maha Veer Chakra' and "Veer Chakra' are awarded to the soldiers who have fought bravely and sacrificed their lives in the defense sector.
- More and more youth should come forward to join the Navy. Navy should be involved in this effort. Also appropriate steps should be taken to increase coastal security. should take.
- To guard Indian sea borders and protect the country and people from enemies.
- Protecting from pirates and facilitating maritime trade.
- Engage in war and peace operations in collaboration with other branches of the military.
- Involvement in rescue operations during calamities.
- After independence, the first Indian Navy fought against the Portuguese forces in Goa in 1961 in the name of "Operation Vijay". Goa, which had been dominated by the Portuguese for 461 years, was recovered.
- 1965 war against Pakistan.
- 1971 war against Pakistan.