Type Here to Get Search Results !

TNPSC 27th DECEMBER 2022 CURRENT AFFAIRS TAMIL PDF TNPSC SHOUTERS

  

இ-ஸ்போர்ட்ஸ்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

  • ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 77வது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இ-ஸ்போர்ட்ஸ் எனப்படும் மின்னணு விளையாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கினார். 
  • போட்டி விளையாட்டுகளில் இ-ஸ்போர்ட்சை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசின் விளையாட்டு துறை மற்றும் மின்னணு, தொழில்நுட்ப துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை ஆன்லைன் விளையாட்டாகவே இ ஸ்போர்ட்ஸ் கருதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 
  • ஆனால், இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல் மற்றும் மன திறன்களைப் பயன்படுத்தி மெய்நிகர், மின்னணு சூழலில் பங்கேற்கும் போட்டி விளையாட்டு என்று இ-ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் கூறி வந்தனர். 
  • சர்வதேச ஒலிம்பிக் சங்கமும் இ-ஸ்போர்ட்சை பிரபலப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தம்

  • தமிழ்நாட்டின் மூன்று நகரங்களில்  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, கழிவு நீர் அகற்றுதல் மற்றும் குடிநீர் விநியோக முறைகளை உருவாக்குவதற்காக மத்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் ரூ.1,040 கோடி கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 
  • தமிழ்நாடு நகர்ப்புற முதலீட்டு திட்டத்திற்கான மூன்றாவது தொகுப்பு கடன் ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் ரஜித் குமார் மிஸ்ரா  இந்தியா சார்பிலும், ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் இவ்வங்கியின் இந்திய அலுவலகப் பொறுப்பு அதிகாரி ஹோ யூன் யோங்கும்  கையத்திட்டனர்.
  • தமிழ்நாட்டில் தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த 10 நகரங்களில் குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றுதல் ஆகியவற்றின் கட்டமைப்புக்காக 2018ல் ஆசிய வளர்ச்சி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பல தொகுப்பு நிதி வசதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • இதில் மூன்றாவது மற்றும் கடைசி தொகுப்பாக இந்த ஒப்பந்தம் கையழுத்தாகியுள்ளது. இந்தத் தொகுப்பில் கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
  • இந்த நிதி உதவி மூலம் கோயம்புத்தூரில் 59 கிலோமீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் சேகரிப்புக்  குழாய்களுடன் பம்ப்பிங் மற்றும் மேலேற்று நிலையங்கள் அமைக்கப்படும். 
  • கழிவுநீர் வெளியேற்றும் இடத்திற்கு கொண்டு செல்ல 14 கிலோமீட்டர் தூரத்திற்குக்  கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும்.  தூத்துக்குடியில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மழை நீர் வடிகால் முறைகள் அமைக்கப்படும்.
  • வருவாய் இல்லாத குடிநீர் விநியோகத்தைக் குறைக்கும் வகையில் மீட்டர் பொருத்தப்பட்ட புதிய 115 குடியிருப்புப் பகுதிகளில் 1,63,958 வீடுகளுக்குக் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக 813 கிலோ மீட்டர் தூரத்திற்குக் குழாய்கள் அமைப்பதற்கான திட்டத்திற்கு இது உதவும்.
  • கழிவுநீர் சேகரிப்பு முறை, தண்ணீர் சேமிப்பு, சுகாதாரம்,  துப்புரவு மற்றும் சுகாதாரம், தூய்மை ஆகியவை  ஆகியவற்றின் பயன்கள் குறித்து விளக்குவதற்காக கோயம்புத்தூரிலும் மதுரையிலும் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel