Type Here to Get Search Results !

மக்கள் ஐ.டி / MAKKAL ID


TAMIL
  • தமிழக அரசின் சேவைகளை பயனாளிகளுக்கு விரைவாக, எளிதாக வழங்கும் நோக்கில், பொதுமக்களுக்கு பிரத்யேக அடையாள எண்ணுடன் கூடிய 'மக்கள் ஐ.டி.' வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது. 
  • தேசிய அளவிலான ஆதார் அட்டை போல, தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது, பாலினம், சமூக அடிப்படையில் கணக்கிட்டு 10 முதல் 12 இலக்கத்திலான 'மக்கள் ஐ.டி.' எண் வழங்கப்பட உள்ளது.
  • நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கும் வகையிலும், சேவைகளை ஒருங்கிணைத்து ஒரே வழியில் வழங்கும் நோக்கிலும், தேசிய அளவில் பிரத்யேக தனி அடையாள எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.
  • இதற்கிடையில், கடந்த 2013-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், ஆளுநர் உரையிலும், அதைத் தொடர்ந்து பட்ஜெட்டிலும் 'மக்கள் ஐ.டி.' குறித்த அறிவிப்பு வெளியானது.
  • அதாவது, மாநில குடும்ப தரவு தளம் (எஸ்ஆர்டிஎச்) உருவாக்கப்பட்டு, அதில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து விவரங்களை பெற்று, பயோ மெட்ரிக் தரவுகளை பயன்படுத்தி, அனைத்து துறைகளின் சேவைகளையும் வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தகவல் தொழில்நுட்பத் துறையால் அதற்கான அரசாணையும் 2013 நவ.29-ம் தேதி வெளியிடப்பட்டது.
  • இதற்காக 'மக்கள்' என்ற பெயரில் ஒரு செயலி உருவாக்கப்பட்டு அனைத்து மக்களின் ஆதார் விவரங்களையும் ஒருங்கிணைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம், மாநில அளவில் குடும்பங்களின் தரவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
  • இத்திட்டத்தின்கீழ், பொது விநியோக திட்டம், முதியோர் ஓய்வூதியம், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வரும் 100 நாள் வேலை, முதல்வரின் பசுமை வீடு, சுகாதாரத் துறையின் மருத்துவக் காப்பீடு, தொழிலாளர் நலத் துறையின் நலவாரிய உதவித் தொகைகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும்பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான உதவித் தொகை மற்றும் சமூகநலத்துறை, வருவாய், பதிவுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆகிய துறைகளின் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
  • இதற்கான பணிகள் தமிழ்நாடு மின்ஆளுமை முகமையிடம் ஒப்படைக்கப்பட்டு, அடிப்படை பணிகள் நடந்து வந்தன. இதற்கான அங்கீகாரம் பெற்ற பயனர் முகமையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, ஆதார் அமைப்பிடம் பதிவு செய்தது. 
  • தொடர்ந்து, 'உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' (KYC) என்பதன் அடிப்படையில், முகவரி, குடும்ப உறுப்பினரின் பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை பெறுவதற்கான அடிப்படை பணிகளும் தொடங்கப்பட்டன.
  • அதன்பிறகு, 6 ஆண்டுகளாக இதற்கான பணிகள் நடந்த நிலையில், கடந்த 2019-ல் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை அப்போதைய முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.
  • 'பிறப்பு முதல் இறப்பு வரை அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சேவைகளையும் விண்ணப்பம் ஏதும் இல்லாமல் தாமாகவே முன்வந்து மக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 
  • அதற்கேற்ப, சான்றிதழ்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வழங்க பயன்படுத்தப்படும் மென்பொருளை தகுந்த முறையில் மாற்றியமைக்க தமிழ்நாடு மின்ஆளுமை முகமை முடிவு செய்துள்ளது.
குடிமகன் பெட்டகம்
  • தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களுக்கும் தனித்துவமான எண் வழங்குவதற்காக 'குடிமகன் பெட்டகம்' என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • சம்பந்தப்பட்ட நபருக்குரிய அனைத்து ஆவணங்களும் தனித்துவ மக்கள் எண் வாயிலாக மின்னணு முறையில் இந்த பெட்டகத்தை சென்றடையும். அனைவரும் அதில் இருந்து தங்களது சான்றிதழ்கள், ஆவணங்களை பெறலாம்.
மக்கள் ஐ.டி
  • அதேபோல, குடிமக்கள் எண்ணை பெற தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இணையதளத்தில் நமது அடிப்படை விவரங்களை பதிவு செய்து, கைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல்லை (ஓடிபி) பயன்படுத்தி மக்கள்எண் எனப்படும் 'மக்கள் ஐ.டி.'யை பெறலாம்' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • இந்நிலையில், 'மக்கள் ஐ.டி.'யை பெறுவதற்கான அடிப்படை மென்பொருள் தயாரிப்புக்கான ஒப்பந்தப் பணியை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தற்போது தொடங்கியுள்ளது.
  • நிறுவனங்களுக்கு அழைப்பு: மின் ஆளுமை முகமை மூலம் உருவாக்கப்படும் மாநில குடும்ப தரவுதளம் மூலம், தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கத்திலான 'மக்கள் ஐ.டி.' அளிக்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் மக்களை வயது, பாலினம், சமூக அடிப்படையில் கணக்கிட்டு இந்த எண் வழங்கப்பட உள்ளது.
  • கடந்த 2019-ம் ஆண்டிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த, ஒப்பந்தம் கோரப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல், ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழக மின் ஆளுமை முகமை ஒப்பந்தம் கோரியுள்ளது. 
  • தரவுகளை சேகரித்து இதற்கான தளத்தை நிர்வகிக்க திறமையும், அனுபவமும் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
  • தமிழக அரசை பொருத்தவரை, ஐஎப்எச்ஆர்எம்எஸ் எனப்படும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் மூலம், ஆன்லைன் வாயிலாக பயனாளிகளுக்கு அவர்கள் வங்கிக் கணக்குக்கே தொகைகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இது, கருவூலம் மற்றும் கணக்கு துறை வாயிலாக நடைபெற்று வருகிறது. 
  • இதில் அனைத்து திட்ட பயனாளிகளையும் இணைத்து, பயனாளிகள் தங்களுக்கான சேவைகளை பெற ஏற்கெனவே ஆதார் எண்ணை கட்டாயமாக்கி அறிவித்துள்ளது. இந்நிலையில் 'மக்கள் ஐ.டி.' திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ENGLISH
  • With a view to providing Tamil Nadu government services to the beneficiaries quickly and easily, 'Makkal ID' for the public with a unique identification number. The Tamil Nadu government has requested a contract to provide.
  • Like the national level Aadhaar card, the 10 to 12 digit 'People ID' is calculated based on age, gender and social status of the people living in Tamil Nadu. Number to be provided.
  • In order to provide various services to the public across the country and to provide services in a single manner, Aadhaar card with a unique unique identification number is issued at the national level and is currently in practice.
  • Meanwhile, during the AIADMK rule in 2013, the governor's speech and the subsequent budget mentioned 'People's ID'. The announcement was made.
  • Namely, it was announced that steps would be taken to create a State Family Data Base (SRTH) in which details from the National Population Register would be obtained and biometric data would be used to provide services to all departments. Following this, an order was issued by the IT Department on November 29, 2013.
  • For this purpose, an app called 'Makkal' was created and it was decided to integrate the Aadhaar details of all the people. Through this, the data of families will be digitized and protected at the state level.
  • Under this scheme, public distribution scheme, old age pension, 100 days job under rural development department, chief minister's green house, medical insurance of health department, welfare grants of labor welfare department, Adi Dravidian, tribal, backward and backward students and social welfare, revenue, registration It was also informed that the programs of the Department, School Education Department, Treasury and Accounts Department will be consolidated.
  • The work for this has been handed over to the Tamil Nadu E-Governance Agency and the basic work is underway. The Tamil Nadu E-Governance Agency has registered with the Aadhaar system as the authorized user agency for this.
  • Subsequently, the basic work of obtaining details including address, date of birth of family member, gender on the basis of 'Know Your Customer' (KYC) was also started.
  • After that, while the work was going on for 6 years, the then Chief Minister Palaniswami issued a notification under Rule 110 in the Legislative Assembly in 2019.
  • 'The scheme is going to be implemented to provide all the services to be provided by the government from birth to death to the people voluntarily without any application.
  • Accordingly, the Tamil Nadu E-governance Agency has decided to modify the software used for issuing certificates and documents accordingly.
Citizen Vault
  • A facility called 'Citizen Vault' has been set up to provide a unique number to 7 crore people in Tamil Nadu.
  • All documents pertaining to the concerned person will reach this vault electronically through a unique population number. Everyone can get their certificates and documents from it.
Makkal IT
  • Similarly, Tamil Nadu e-Governance Agency has provided facility to get citizen number. It said that by registering our basic details on the website and using the One Time Password (OTP) sent to the mobile phone, we can get a 'Maklak ID' called MakkalN.
  • In this case, the Tamil Nadu e-Governance Agency has now started the contract work for basic software development to get 'People ID'.
  • Call to Companies: 10 to 12 digit 'People ID' for residents of Tamil Nadu through state family database to be developed by e-Governance Agency will be provided. This number is calculated based on age, gender and social status of people living in Tamil Nadu.
  • A contract was sought to implement this project in 2019 itself. However, the contract was not finalized and was cancelled. In this case, Tamil Nadu Electricity Governance Agency has again requested the contract.
  • Companies having the skills and experience to collect data and manage the site can apply, the notification said.
  • As far as the Government of Tamil Nadu is concerned, through the Integrated Financial and Human Resource Management Scheme known as IFHRMS, the amounts are being released to the beneficiaries through online channels in their bank accounts. This is being done through Treasury and Accounts Department.
  • In this, it has announced that Aadhaar number has already been made mandatory for all the scheme beneficiaries to get the services for them. In this case, 'People IT' It is noteworthy that an agreement has been sought for implementation of the project.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel