ஃபிஜியின் புதிய பிரதமராகிறார் சிதிவேனி ரபுகா
- ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டு கால ஃபிராங்க் பைனிமராமாவின், ஆட்சி முடிவுக்கு வருகிறது.
- பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 28 வாக்குகளுடன் சிதிவேனி ரபுகா, 27 வாக்குகளைப்பெற்ற பைனிமராமாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஃபிஜியின் அடுத்த பிரதமராகிறார். 1992 மற்றும் 1999க்கு இடையில் ஏற்கனவே சிதிவேனி ரபுகா பிரதமராக இருந்திருக்கிறார்.
- இந்தியா, வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புஜாரா 12வது ரன் எடுத்தபோது டெஸ்ட் அரங்கில் 7000 ரன்கள் கடந்த வீரர்களில் பிராட்மேனை முந்தினார்.
- பிராட்மேன் 6,996 ரன்க்ள் எடுத்துள்ளார். மேலும் 7,000 ரன்கள் கடந்த 7வது இந்திய வீரர் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது. புஜாரா இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தம் 7,008 ரன்கள் எடுத்துள்ளார்.
- ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 117 ஏக்கர் நிலத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருந்தன.
- இதைத் தொடர்ந்து இந்த இடத்தை துய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நட, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், உலக சாதனை முயற்சியாக 4மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது.
- பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உட்பட 16,500 பேர் இணைந்து ஒரே நேரத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
- நிறைவாக குறுங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைப் பூங்காவில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, மா. மதிவேந்தன் ஆகியோரும் மரக்கன்றுகள் நட்டனர்.
- பின்னர் நடந்த விழாவுக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். அப்போது 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை படைத்ததற்கான பதக்கம் மற்றும் சான்றிதழை அமெரிக்காவைச் சேர்ந்த எலைட் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவன நிர்வாக அதிகாரிகள் ரவி பால்பக்கி,நவுரா ஆகியோர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினர்.
- இதே போல், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, தமிழன் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய உலகசாதனை அங்கீகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் சான்றிதழ்களை வழங்கினர்.
- 9000 குதிரைத் திறன் கொண்ட மின்சார சரக்குவாகன என்ஜின்கள் உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கு சீமென் இந்தியா நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளது.
- தஹோட்டாவில் உள்ள ரயில்வே தொழிற்சாலையில் அதிகப்பட்ச குதிரைத் திறன் கொண்ட (9000 குதிரை திறன்) 1200 மின்சார சரக்கு என்ஜின்கள் 11 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்யப்படும்.
- இந்த எஞ்சின்களை உற்பத்தி செய்வதோடு 35 ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம் பராமரிக்கவும் செய்யும். இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பீடு (வரிகள் மற்றும் விலை மாறுபாடு நீங்கலாக) ரூ. 26,000 கோடி (சுமார் 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் சீமென் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்த என்ஜின்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விநியோகிக்கப்படும். இவற்றைத் தயாரிப்பதற்காகவே தஹோட்டா பிரிவு கட்டப்பட்டுள்ளது.
- இந்த என்ஜின்களை பராமரிப்பதற்காக விசாகப்பட்டினம், ராய்ப்பூர், கரக்பூர், புனே ஆகிய இடங்களில் பணி மணிகள் இருக்கும் ரயில்வேயின் மனித சக்தியைப் பயன்படுத்தி 35 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணியை சீமென் இந்தியா நிறுவனம் மேற்கொள்ளும்.
- இது இந்தியாவில் உற்பத்தி என்ற முன் முயற்சி அடிப்படையிலான திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் தஹோட்டா பகுதி மேம்பாட்டுக்கு வழிவகுக்கப்படுவதுடன் வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.