வங்க கடலில் உருவாகிறது MANDOUS புயல்
- வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்குள் மேற்கில் இருந்து வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. டிசம்பர் 8க்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட MANDOUS என்று பெயரிடப்படும். இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஈரானில் பெண்கள் கட்டாயம் தலை, கழுத்து மற்றும் தலை முடியை மறைக்கும் வகையிலான ஹிஜாப் ஆடையை அணிய வேண்டும் என சட்டத்தை அந்நாட்டின் அறநெறி காவல்துறை கண்டிப்புடன் செயல்படுத்தியது.
- இதனை எதிர்த்து மஹ்சா அமினி என்ற இளம்பெண் போராடியதால் அவர் கைது செய்த சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஈரானில் பெண்கள், ஆண்கள் என பலரும் கட்டாய ஹிஜாப் சட்டத்தை எதிர்த்து போராட்டக் களத்தில் இறங்கினார்கள்.
- அதன்படி, பொது வெளியில் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்தும் அறநெறி காவல்துறை பிரிவை ஈரான் அரசு கலைத்திருக்கிறது. ஆனால் அவை நிரந்தரமாக கலைக்கப்பட்டதா இல்லை தற்காலிகமானதா என ஈரான் அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை.
- ஜி20 அமைப்புக்கு கடந்த டிசம்பர் 1-ம் தேதி இந்தியா தலைமை ஏற்றது. ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.
- அதற்கு முன்னதாக அடுத்த ஓராண்டில் நாட்டில் உள்ள 55 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது.
- 4 நாட்களுக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பிரதிநிதிகள், ஐ.நா., உலக வங்கி மற்றும் 9 விருந்தினர் நாடுகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்திய பிரதிநிதி அமிதாப் காந்த் இக்கூட்டத்தின் அனைத்து அமர்வுகளையும் வழிநடத்த உள்ளார்.
- தொழில்நுட்ப பரிமாற்றம், பசுமை வளர்ச்சி, நீடித்த வளர்ச்சி இலக்கு (எஸ்டிஜி) உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
- முதல் அமர்வில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தொழில்நுட்ப மாற்றம், சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
- இரண்டாவது அமர்வில் பசுமை வளர்ச்சி மற்றும் இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் (லைப்) ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
- வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1999-ல் தொடங்கப்பட்ட ஜி20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
- ஜி20 அமைப்பில் உறுப்பினராக உள்ள 20 நாடுகளில் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டில் (2023) ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.
- டெல்லியில் 2023 செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னேற்பாடு கூட்டங்களை நடத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாலை நடைபெற்றது.
- இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்றனர்.
- பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
- இக்கூட்டத்தில் ஜி20 மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வெளியுறவு அமைச்சகம் சார்பில் மாநாட்டு திட்டங்கள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
- மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முதல்வர்கள், கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளும் கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டன.
- கல்வி, கலை, அறிவியல், கலாசாரம் உள்ள நாடுகளிடையே அமைதி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ.
- தற்போது பகெட் ரொட்டி உலக பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.பகெட் என்பது மாவு, தண்ணீர், உப்பு, ஈஸ்ட் உள்ளிட்டவை கலந்து செய்யப்படும் ஒர் ரொட்டி வகை.
- இது பிரஞ்சு நாட்டின் பிரதான உணவாக உள்ளது. 1839 ஆம் ஆண்டில் வியன்னாவைச் சேர்ந்த ஒர் பேக்கரும், தொழில்முனைவோருமான ஆகஸ்ட் ஜாங் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது.
- அவர் ஒரு நீராவி அடுப்பைப் பயன்படுத்தி மென்மையான ரொட்டியின் சுவையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். இது 1920 ஆம் ஆண்டு 'பகெட்' என்கிற அதிகாரப்பூர்வ பெயரைப்பெற்றது.
- பகெட் விற்பனை சரிவு காரணமாக இந்த ரொட்டியைத் தயாரித்து விற்றுவந்த 400 பேக்கரிகள் நஷ்டத்தில் இயங்கின. இதனால் 1970 ஆம் ஆண்டிலிருந்து இவை கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டன. பிரான்ஸில் பல்பொருள் அங்காடிகளின் பெருக்கம் காரணமாக உள்ளூர் பேக்கரிகளுக்கு இந்த பாதிப்பு உண்டானது.
- நகரவாசிகள் பலர் அதிகளவில் பீட்சா, பர்கர் சாப்பிடத் துவங்க, பகெட் ரொட்டி காலப்போக்கில் அவர்களுக்கு மறந்துபோனது.
- இந்த நிலையை மாற்ற 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய உணவுப் பட்டியலில் பகெட் ரொட்டி சேர்க்கப்படவேண்டும் என்கிற கோரிக்கையை பிரான்ஸ் அரசு முன்வைத்தது. அந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளபட்டது.
- கடற்படை தினத்தன்று (2022 டிசம்பர் 04) விசாகப்பட்டினத்தில் வெளியிடப்பட்ட இந்திய கடற்படைக்கான ஜனாதிபதியின் தரநிலை மற்றும் கொடி மற்றும் இந்திய கடற்படை சின்னத்திற்கான புதிய வடிவமைப்பை அறிமுகம் செய்ய மாண்புமிகு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
- கடந்தகால காலனித்துவத்திலிருந்து விலகிச் செல்வதற்கான தேசிய முயற்சியின் எதிரொலியாக, கடற்படையின் கொடி நமது வரலாற்றிலிருந்து உத்வேகம் பெறும் புதிய வடிவமைப்பிற்கு மாற்றப்பட்டது.
- வெள்ளைக் கொடியில் சிவப்புக் கிடைமட்ட மற்றும் செங்குத்துக் கோடுகள் மாற்றப்பட்டு நீல எண்கோணத்திற்குள் தங்க நிறத்தில் தெளிவான இரட்டை நங்கூரமும் அவற்றின் மேல் தேசியச் சின்னமும், நங்கூரத்தின் கீழ் 'சத்யமேவ ஜெயதே' என்ற தேசிய வாசகமும் மேல் இடது மூலையில் தேசியக் கொடியும் என வடிவமைக்கப்பட்டுள்ளது.