Type Here to Get Search Results !

வானவில் மன்றம் திட்டம் / VAANAVIL MANRAM THITTAM

TAMIL

  • தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை மேம்படுத்துவற்கான புதிய முயற்சியாக வானவில் மன்றம் என்ற திட்டம் 13,210 பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது. 
  • அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே அறிவியல் மற்றும் கணிதக் கருத்துகள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய எல்லையற்ற ஆர்வத்தை வளர்ப்பதற்கான சூழலை உருவாக்கும் நோக்கத்தை கொண்ட STEM திட்டம் (அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல், கணிதம்) கொண்டு வரப்பட்டுள்ளது. 
  • இதன் ஒரு அங்கமாக தற்போது வானவில் மன்றம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். 
  • இந்த திட்டத்தில், மேற்கண்ட ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து செய்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டுவார்கள். அதற்கான கருவிகளை அவர்களே கொண்டு வருவார்கள். 
  • அதன் மூலம் கற்றல் திறனை மேம்படுத்தி 'செய்து கற்கும்' அனுபவத்தை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருப்பார்கள். இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.1200 நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • அதன்படி தமிழகத்தில் 38 மாவட்டங்களில் செயல்படும் 3095 உயர்நிலைப் பள்ளிகள், 3123 மேனிலைப் பள்ளிகள், 6992 நடுநிலைப் பள்ளிகள் என 13210 பள்ளிகளுக்கு ரூ.15 கோடியே 85 லட்சத்து 2 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகள் மேற்கொள்வார்கள். இந்த திட்டம் தமிழகம் முழுவதும் மேற்கண்ட 13,210 பள்ளிகளில் தொடங்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, திருச்சியில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 
  • இந்த மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி கருத்தாளர்கள் நேரடியாக பள்ளிகளுக்கே சென்று அறிவியல் செய்முறைகளை மாணவர்களுக்கு செய்து காட்டுவார்கள். 
  • தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் 'எங்கும் அறிவியல், யாவும் கணிதம்' என்பதாகும். 
  • அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இம்மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • As a new initiative to improve the scientific thinking of students studying in classes 6 to 8 in government schools under the Tamil Nadu School Education Department, a project called Vanavil Manram is being launched today in 13,210 schools.
  • The STEM program (Science, Technology, Engineering, Mathematics) has been introduced with the aim of creating an environment among government school students to develop unbridled curiosity along with thinking skills in science and mathematics concepts.
  • As part of this, the Vanavil Manram is currently being launched. Tamil Nadu government has allocated Rs.25 crores for this purpose. About 12 thousand teachers are involved in this project.
  • In this project, the above teachers come directly to the schools and demonstrate the recipes to the students. They will bring the tools themselves.
  • By doing so, students will be able to improve their learning skills and improve their 'learning by doing' experience. A fund of Rs.1200 per school has been allocated for this purpose.
  • Accordingly, 13210 schools including 3095 high schools, 3123 main schools, 6992 middle schools operating in 38 districts of Tamil Nadu have been allocated Rs.15 crore 85 lakh 2 thousand funds.
  • Teachers and students will conduct a couple of simple experiments to begin the Vanavil Manram. This program should be started in the above 13,210 schools across Tamil Nadu, the Integrated School Education State Program E Yakkunar has ordered. According to this, Tamil Nadu Chief Minister M.K.Stalin will inaugurate this project in Trichy.
  • Using these motorcycles, the experts will go directly to the schools and demonstrate the scientific procedures to the students.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel