கொச்சியில் நகர்புற இயக்கம் 3 நாள் மாநாடு
- கேரள மாநிலம் கொச்சியில் 3 நாள்கள் நடைபெறவுள்ள 'இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு (யுஎம்ஐ) மற்றும் கண்காட்சி 2022' தொடங்கவுள்ளது.
- இந்த மாநாட்டினை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை (எச்யுஏ) அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.
- இந்த மூன்று நாள் நகர்ப்புற இயக்க மாநாட்டை மத்திய எச்யுஏ அமைச்சகமும், கேரள அரசும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
- சர்வதேச அளவிலான சிறந்த போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் சமீபத்தில் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களை நகரங்களுக்கு எடுத்துரைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம்.
- நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியால் வடிவமைக்கப்பட்ட புதிய போர் சீருடையை வெளியிட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இந்திய ராணுவம் அதன் உரிமையை நிலைநாட்ட, கொல்கத்தாவைச் சேர்ந்த கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் பேட்டண்ட்ஸ், டிசைன்ஸ் மற்றும் டிரேட்மார்க் உடன் அதன் புதிய உருமறைப்பு வடிவத்தையும் வடிவமைப்பையும் பதிவு செய்துள்ளது.
- அக்டோபர் 21 ஆம் தேதி காப்புரிமை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இதழில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது என்று இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று இராணுவ தின அணிவகுப்பின் போது இராணுவம் புதிய டிஜிட்டல் முறை போர் சீருடையை வெளியிட்டது.
- வடிவமைப்பு மற்றும் உருமறைப்பு முறையின் பிரத்தியேகமான 'அறிவுசார் சொத்துரிமைகள் (IPR)' இப்போது இந்திய இராணுவத்திடம் மட்டுமே உள்ளது.
- எனவே அவ்வாறு செய்ய அங்கீகரிக்கப்படாத எந்தவொரு விற்பனையாளரும் அதனை தயாரிப்பது சட்டவிரோதமானது மற்றும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.
- மேலும் இந்திய இராணுவ வடிவமைப்பிற்கான பிரத்யேக உரிமைகளை செயல்படுத்த முடியும் மற்றும் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தின் முன் சிவில் நடவடிக்கை மூலம் மீறல் வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
- இந்திய தலைநகர் டில்லியில் ஆசிய நாடுகளுக்கு ('கான்டினென்டல்') இடையிலான செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஓபன் பிரிவில் 92 பேர் பங்கேற்றனர். இதன் கடைசி, 9 வது சுற்று போட்டி நடந்தது.
- 8 சுற்று முடிவில் 6.5 புள்ளி எடுத்திருந்த இந்தியாவின் 17 வயது வீரர், பிரக்ஞானந்தா (தமிழகம்), சக வீரர் அதிபனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா.
- இப்போட்டி 63வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 8 சுற்றில் தலா 6.0 புள்ளிகள் பெற்றிருந்த இந்திய வீரர்கள் ஹர்ஷா, நாராயணன், ஷம்சுதீன், முரளி கார்த்திகேயன் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர்.
- இதையடுத்து 7.0 புள்ளி பெற்ற பிரக்ஞானந்தா, 'நம்பர்-1' இடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தவிர, 2023ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கவும் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.
- இந்திய வீரர்கள் ஹர்ஷா (6.5), அதிபன் (6.5) இரண்டு, மூன்றாவது இடங்களை பிடித்தனர்.
- பெண்கள் பிரிவில் 50 பேர் களமிறங்கினர். இதையடுத்து ஒரு போட்டியில் கூட தோற்காமல், 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற நந்திதா (தமிழகம்), தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
- 2023ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். அடுத்த இரு இடங்களை பிரியங்கா (6.5), திவ்யா (6.5) பெற்றனர்.
- 141 சுரங்கங்களின் மிகப்பெரிய ஏல நடைமுறையை நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். வணிக ரீதியிலான சுரங்க ஏலத்தின் ஆறாவது கட்ட நடைமுறைகளை புதுதில்லியில் அவர் தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.
- உலகளவில் எரிசக்திச் செலவு அதிகரித்து வருவதை குறிப்பிட்ட அவர், நிலக்கரி மற்றும் எரிவாயுத் துறையில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- மின்உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தற்போது 41 சதவீதமாக குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
- இந்நிகழ்ச்சியில், நிலக்கரித் துறை இணையமைச்சர் திரு ராவ் சாகிப் தன்வே, நிலக்கரித் துறை செயலாளர் திரு அம்ரித் லால் மீனா, கூடுதல் செயலாளர் திரு நாகராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கங்கா உத்சவ் என்ற பெயரில் நதிகள் திருவிழா 2022 நவம்பர் 4 ஆம் தேதி தில்லியில் கொண்டாடப்படவுள்ளது. மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் சார்பில் மேஜர் தயான்சந்த் அரங்கத்தில் இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இந்த விழாவில் காலை அமர்வில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
- இதில் மத்திய ஜல்ஜக்தி மற்றும் பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு பிஷ்வேஸ்வர் துடு-வும் கலந்துகொள்கிறார்.
- கங்கை உத்சவ் நதி திருவிழா 2022 –ன் மூலம் நதிகள் புனரமைப்பில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பை தேசிய தூய்மை கங்கை இயக்கம் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது. நதிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், நதிகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கிலும் கங்கை உத்சவ் 2022 கொண்டாடப்படுகிறது.
- கங்கை உத்சவ் 2022-ல் மத்திய –மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு செயல்பாடுகள் இடம்பெறும். கங்கை தூய்மைக்காக அதிக நிதி வழங்கியவர்கள், ஜல்சக்தித் துறை அமைச்சரால் கவுரவிக்கப்படுவார்கள்.
- நதிகள் உடனான இணைப்பை வலுப்படுத்த ஆர்த் கங்கா திட்டத்தில் கவனம் செலுத்தப்படும். கங்கை உத்சவ் நிகழ்ச்சியில் மாவட்ட கங்கை குழுக்கள் தீவிரமாக பங்கேற்பது உறுதி செய்யப்படும்.