மெரீனாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நாட்டின் முதல் நடைபாதை திறப்பு
- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதையை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனா்.
- நிகழாண்டு சட்டப் பேரவை மானியக் கோரிக்கையில் மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பாதை நிரந்தரமாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- அதனடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மரப் பலகைகளால் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது.
- இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டா் நீளத்தில், 6 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அைக்கப்பட்டுள்ளன.
- மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டா் நீளத்தில், 5 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவா்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னா் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- ஐ.பி.எல்., 15வது சீசனுக்கான (2022, மே 29) பைனல் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது.
- மோடி மைதானத்தில் 1,10,00 பேர் அமர்ந்து போட்டியை காணும் வசதி உள்ளது. இது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை (1,00,024) விட அதிகம். ஐ.பி.எல்., பைனலை காண 1,01,566 பேர் வந்திருந்தனர்.
- இதன்மூலம் அதிகபட்ச ரசிகர்கள் வருகை தந்ததற்காக மோடி மைதானம், உலக சாதனைக்கான 'கின்னஸ்' புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷாவிடம் வழங்கப்பட்டது.
- இந்திய மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு இடையே “ஆஸ்த்ரா ஹிந்த் 22” என்ற கூட்டு பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 28, 2022 முதல் டிசம்பர் 11 வரை நடைபெற உள்ளது. இரு ராணுவங்களின் அனைத்து படைகளும் கலந்து கொள்ளும் முதல் பயிற்சி இது.
- ஆஸ்திரேலிய இராணுவத்தின் 2-வது பிரிவின் 13-வது படையைச் சேர்ந்த வீரர்கள் குழுவினர் பயிற்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்துள்ளனர்.
- இந்திய ராணுவத்தின் டோக்ரா படை, இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளது. ஆஸ்த்ரா ஹிந்த் பயிற்சி, வருடந்தோறும் ஆஸ்திரலியாவிலும் இந்தியாவிலும் மாறி மாறி நடைபெற்று வருகிறது.
- நேர்மறையான ராணுவ உறவைக் கட்டமைப்பது, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது மற்றும் இணைந்து பணியாற்றும் திறனை ஊக்குவிப்பது முதலியவை இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
- உத்திகள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை இரு ராணுவங்களும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இந்தக் கூட்டு பயிற்சி வழங்கும்.
- இரு ராணுவங்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் இயங்கு தன்மையை இந்த பயிற்சி ஊக்குவிப்பதோடு, இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும்.