மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு
- மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் 24 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமது சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.
- குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி 82 தொகுதிகள், முகைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி 73 இடங்களை கைப்பற்றி உள்ளன.
- இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராகிமுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கருதி அவரை புதிய பிரதமராக மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமத் ஷா அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் 10வது பிரதமராக அன்வர் பதவியேற்று கொண்டார்.
- ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை அடக்குவதற்காக அந்த நாட்டு அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு வருவதைக் ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை அடக்குவதற்காக அந்த நாட்டு அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாண்டு வருவதைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வியாழக்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது.
- ஜொமனி, ஐஸ்லாந்து நாடுகளால் கொண்டு வரப்பட்டு, 25 நாடுகளால் வழிமொழியப்பட்ட அந்தத் தீா்மானத்தில், போராட்டத்தின்போது போலீஸாரின் அத்துமீறல் தொடா்பாக நடுநிலையான விசாரணையை நடத்தக் கூடிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
- தலையை மறைக்கும் ஹிஜாப் அணியாததற்காக ஈரானின் சா்ச்சைக்குரிய கலாசாரக் காவலா்களால் கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்யப்பட்ட இளம்பெண் மாஷா அமீனி (22), காவலில் உயிரிழந்தாா்.
- அதையடுத்து, அரசின் ஆடைக் கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் வெடித்தது. இதில் 51 சிறாா் உள்பட 416 பலியானதாகக் கூறப்படுகிறது.
- நடப்பு உலக கோப்பை தொடரில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது.
- இப்போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 65வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
- இதன்மூலம் 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.
- பாகிஸ்தானில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இருந்தாலும், ராணுவமே முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்நிலையில், மற்றொரு பணி நீட்டிப்புக்கு ஜெனரல் பஜ்வா மறுத்துள்ளார்.
- இதையடுத்து அடுத்த ராணுவ தளபதியை தேர்வு செய்ய, ஆறு மூத்த அதிகாரிகள் பட்டியலை, அரசுக்கு ராணுவம் அனுப்பியது. இதில், லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர், புதிய ராணுவ தளபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- இவர், பாகிஸ்தானின் இரண்டு முக்கிய உளவு அமைப்புகளான ஐ.எஸ்.ஐ., மற்றும் ராணுவ புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்துள்ளார்.
- இவர் தவிர, கூட்டுப் படைகளின் தளபதியாக, லெப்டினன்ட் ஜெனரல் ஷாஹிர் ஷம்ஷத் மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அதனால், இந்தப் பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இருவருக்கும் நான்கு ஸ்டார் ஜெனரல் நிலைக்கு பதவி உயர்வு வழங்கவும், அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பரிந்துரைத்துள்ளார். அதிபர் ஆரிப் ஆலம் ஒப்புதல் அளித்தபின், இவர்கள் பதவியேற்பர்.
- நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி அக்டோபர் 2022 –ல் 448 மில்லியன் டன் அளவை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தின் உற்பத்தியைவிட 18% அதிகமாகும்.
- இந்திய நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியும் 17% அதிகரித்துள்ளது. நவம்பர் 2022 இறுதிக்குள் மத்திய நிலக்கரி அமைச்சகம் 30 மில்லியன் டன் அளவு நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க திட்டமிட்டுள்ளது.
- மார்ச் 31, 2023-க்குள் அனல் மின் நிலையங்களில் 45 மில்லியன் டன் நிலக்கரியை கையிருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளது. இது மேலும் சுரங்கத்தின் அருகில் நிலக்கரி கையிருப்பை வைக்க திட்டமிட்டுள்ளது.
- இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நிலக்கரியை ஏற்றிச் செல்வதில் 9% வளர்ச்சி இருந்தது. இது மின் உற்பத்தி நிலையங்களில் கையிருப்பை அதிகரிக்க உதவியது. ரயில் மற்றும் சாலை வழியாக நிலக்கரியை கொண்டு செல்ல மின்சார அமைச்சகமும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
- தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மற்றும் பூபாளப்பட்டினம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு வழி சாலையை, ரூ.136 கோடி செலவில் மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- இதேபோல், தெலங்கானா மாநிலத்தின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே தனித்துவம் வாய்ந்த பாலம் அமைத்தல், நெடுஞ்சாலையை (என்எச்-167கே) மறுசீரமைத்து தரம் உயர்த்துவது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.436 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம், ஹைதராபாத் முதல் திருப்பதி, நந்தியாலா, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் 80 கிலோ மீட்டர் அளவுக்கு குறையும்.