உலக கோப்பை கால்பந்து தொடர் 2022 கோலாகலமாக தொடங்கியது
- கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன. இத்தொடருக்கான பிரமாண்ட தொடக்க விழா, அல் பேட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
- தென் கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழுவின் நட்சத்திரப் பாடகர் ஜங் குக் 'ட்ரீமர்ஸ்' என்ற பாடலை உற்சாகமாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
- அவருடன் இணைந்து கத்தார் பாடகர் பகத் அல் குபைசியும் இசை மழை பொழிந்தார். கத்தார் நாட்டின் பாரம்பரியப் பெருமைகளை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், லேசர் விளக்குகளின் ஜாலம், வாணவேடிக்கை என அசத்தலான தொடக்கவிழா பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
- இதைத் தொடர்ந்து நடந்த ஏ பிரிவு முதல் லீக் ஆட்டத்தில் கத்தார் - ஈக்வடார் அணிகள் மோதின. நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் முதல் குரூப் சுற்றுப் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது ஈக்குவேடார் அணி.
- இந்த தோல்வியின் மூலம் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் முதல்முறையாக தோல்வியை தழுவியுள்ளது தொடரை நடத்தும் அணி ஒன்று தோல்வியை தழுவி உள்ளது. இதற்கு முன்னர் தொடரை நடத்திய அணிகள் முதல் அல்லது தொடக்க ஆட்டத்தில் தோல்வியை தழுவியதில்லை என தகவல்.
- மலேசியாவில் 15-வது பொதுத்தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மலேசியாவின் 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 இடங்களில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
- மொத்தம் 220 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
- மலேசியா அரசியல் கட்சிகளில் பக்கத்தான் ஹரப்பான் 80 இடங்களில் வென்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 111 இடங்களை அந்த கூட்டணி பெறவில்லை.
- நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திய தேசிய முன்னணி கூட்டணி வெறும் 35 இடங்களில்தான் வென்றது.
- மலேசியாவின் முக்கியமான அம்னோ கட்சியும் எதிர்பார்த்த இடங்களைப் பெறவில்லை. ஆனால் பக்கத்தான் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்கள் தங்கள் வசம் இருக்கிறது என்கிறார்.
- மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர், கெடா மாநிலத்தின் லங்காவி தொகுதியில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். 1969-ம் ஆண்டு முதல் மகாதீர் வெற்றி பெற்ற இந்த தொகுதியில் தற்போது வெறும் 4,566 வாக்குகள்தான் பெற்றார். 50 ஆண்டுகளில் மகாதீர் சந்திக்கும் முதல் தேர்தல் தோல்வி இது.
- மலேசியாவில் இந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்காது; கூட்டணி ஆட்சிதான் அமையும் என்பது திட்டவட்டமாகி உள்ளது.
- மலேசியாவின் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- பெரிக்கத்தான் நேசனல், தேசிய முன்னணி, சபா மக்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என்று சரவாக் கட்சிகள் கூட்டணி தெரிவித்துள்ளது. மேலும் இந்த கூட்டணியானது பிரதமர் பதவிக்காக முஹிதின் யாசின் பெயரை பரிந்துரைத்துள்ளது.