ராஜஸ்தானில் பிரபலமான 'மங்கார் தாம்' தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பு
- நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்தபோது, ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கார் என்ற மலைப் பகுதியில் ஏராளமான பழங்குடியினர் வசித்தனர்.
- இந்த பகுதி தற்போது, குஜராத் - ராஜஸ்தான் மாநிலங்களின் எல்லை பகுதியில் உள்ளது. இங்கு வசித்த பழங்குடியினர் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வீரத்துடன் போரிட்டு வந்தனர்.
- கடந்த 1913 நவ., 17ல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 1,500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இந்த இடத்தில், மங்கார் தாம் என்ற பெயரில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்நிலையில், இந்த வரலாற்று சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் பன்ஸ்வாரா பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- ராஜஸ்தானில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது கொல்லப்பட்ட பழங்குடி சமூகத்தினர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள, 'மங்கார் தாம்' என்ற நினைவிடத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- இதில், பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், அண்டை மாநிலங்களான மத்திய பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத்தின் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருமானம் ரூ.1.51 லட்சம் கோடி
- கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடியாக உள்ளது. இதில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், ஒன்றிய - மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரி வருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது. இதன் மூலம், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2வது அதிகபட்ச வருவாய் ஜிஎஸ்டி வசூலான மாதமாக அக்டோபர் திகழ்கிறது.
- அதேபோல், ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வருவாய் வசூலாகி இருப்பது இது 2வது முறையாகும். உள்நாட்டு பணப் பரிமாற்றத்திலும் ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகப்பட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது.
- இதுவரை தொடர்ந்து 9வது மாதமாக ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூலாகி இருக்கிறது. அக்டோபரில் அதிக வரி வசூலித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் ரூ.9,540 கோடியும், புதுச்சேரியில் ரூ.204 கோடியும் வசூலாகி உள்ளது.
சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி - முதல் நாளில் ரூ.275 கோடி பரிமாற்றம்
- இந்தியாவில் தற்போது நோட்டுகள், சில்லரை நாணயங்கள் மூலமாக ரூபாய் பரிமாற்றம் நடக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
- அதன்படி, சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயத்தை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட்டது. முதல் கட்டமாக, அரசு சார்ந்த பங்கு பத்திரங்கள் விற்பனையில் மட்டுமே இந்த நாணயம் பயன்படுத்தப்படும்.
- இதை கையாள்வதற்கு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பரோடா பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோடக் மகிந்திரா, யெஸ் பேங்க், ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், எச்எஸ்பிசி, ஆகிய 9 வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- இந்த வங்கிகளின் மூலமாக மொத்தம் 59 பரிவர்த்தனைகள் நடந்தன. இதன்மூலம், ரூ.275 கோடி டிஜிட்டல் நாணயம் பரிமாற்றம் செய்யப்பட்டது.