TAMIL
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாக இருக்குமென சர்வதேச தர நிர்ணய அமைப்பான மூடிஸ் கணித்துள்ளது.
- அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட தர நிர்ணய அமைப்பான மூடிஸ், ஆசிய-பசிபிக் (APAC) பிராந்தியத்தின் பொருளாதாரம் குறித்த தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
- கடந்த ஆகஸ்ட் மாதத்தில், மூடிஸ் இந்தியாவின் ஜி.டி.பி.,வளர்ச்சி 2022ல் 8 சதவீதமாகவும், 2021ல் 8.5 சதவீதமாகவும், 2023ல் 5 சதவீதமாகவும் குறையும் என்று கணித்துள்ளது.
- அடுத்த ஆண்டு ஆசிய பசுபிக் பிராந்தியம் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. எனினும் அதிக வட்டி விகிதம், பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவு போன்றவை பெரும் தலைவலியாக இருக்க கூடும்.
- தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை சார்ந்த உள்முதலீடு மற்றும் உற்பத்தி, இந்தியாவில் வளர்ச்சியை விரைவுபடுத்தலாம்.பணவீக்கம் தொடர்ந்தால், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6 சதவீதத்துக்கு மேல் உயர்த்தும்.
- இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும். உலகப் பொருளாதாரத்தில் சீனா மட்டும் பலவீனமானதாக இல்லை. இந்தியாவின் அக்டோபர் மாத ஏற்றுமதி மதிப்பு, கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் சரிவை சந்தித்துள்ளது.
- இருப்பினும், வளர்ச்சிக்கான வாய்ப்பாக இந்தியா, சீனாவை விட ஏற்றுமதியை குறைவாகவே நம்பியுள்ளது.
- கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப், சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2021ல் 6 சதவீதத்தில் இருந்து, 2022ல் 3.2 சதவீதமாகவும், 2023ல் 2.7 சதவீதமாகவும் குறையுமென கணித்துள்ளது.
- உலகளவில் பல நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியா பிரகாசமான நாடாக உருவெடுக்குமென ஐ.எம்.எஃப் தலைமைப் பொருளாதார நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.
- Moody's, an international rating agency, has predicted that India's economic growth will slow. Moody's, the US-based rating agency, has released its report on the economy of the Asia-Pacific (APAC) region.
- Last August, Moody's forecast India's GDP growth to slow to 8 percent in 2022, 8.5 percent in 2021 and 5 percent in 2023. The Asia Pacific region is unlikely to face a recession next year. However, high interest rates and slow economic growth can be a major headache.
- Technology and agriculture-based investment and manufacturing could accelerate growth in India. If inflation continues, the Reserve Bank of India will raise the repo rate above 6 percent.
- This will reduce the GDP. China is not the only weak spot in the global economy. India's October export value has declined compared to last year.
- However, India is less dependent on exports than China as an opportunity for growth. Last month, the International Monetary Fund (IMF) forecast global economic growth to slow from 6 percent in 2021 to 3.2 percent in 2022 and 2.7 percent in 2023.
- The IMF Chief Economist has said that India will emerge as a bright spot at a time when many countries around the world are facing economic recession.