TAMIL
- விக்ரம் எஸ் என்ற பெயர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நிறுவனர் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக வைக்கப்பட்டிருக்கிறது.
- விக்ரம் ராக்கெட் ஏவும் சீரிஸில் மூன்று வகையான ராக்கெட்டுகள் உள்ளன. அவை சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை வழங்குவதற்காக மேம்படுத்தப்படுகின்றன.
- முதல் வரிசையில் விக்ரம் I ரக ராக்கெட் உள்ளது. விக்ரம் II, விக்ரம் III ஆகியவற்றால் 'லோ எர்த் ஆர்பிட்டுக்கு' (தாழ்வான புவி வட்டப்பாதைக்கு) அதிக எடையுள்ள 'பேலோடை' (செயற்கைக்கோள்கள்) சுமந்து செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
- விக்ரம் எஸ் மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். அதாவது மூன்று சிறிய செயற்கைக்கோள்களை 'லோ எர்த் ஆர்பிட்டில்' கொண்டு செல்லும்.
- இதில் இரண்டு பேலோடுகள் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானவை. மூன்றாவது பேலோடு, வெளிநாட்டுக்கு சொந்தமானது.
- ராக்கெட்டின் முழுமையான பரிசோதனை 2022ஆம் ஆண்டு மே மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக 'ஸ்கைரூட்' ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், துணை வட்டப்பாதை திட்டத்துக்கு 'பிரரம்ப்' (ஆரம்பம்) என்று ஸ்கைரூட் நிறுவனம் பெயரிட்டிருக்கிறது.
- ஸ்கைரூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, விக்ரம் எஸ் ராக்கெட் நவம்பர் 12 மற்றும் 16 க்கு இடையில் நடந்திருக்க வேண்டும். இருப்பினும், சாதகமற்ற வானிலை காரணமாக அதன் ஏவுதல் திட்டம் நவம்பர் 18 க்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
- இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தனா, நாக பரத் டாக்கா ஆகியோர் இணைந்து 2018ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
- இந்த பணிக்காக ஒருங்கிணைப்பு வசதி, ஏவுதளம், தூரத் தொடர்பு, கண்காணிப்பு ஆதரவு ஆகியவை இஸ்ரோவால் தங்களுக்கு வழங்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி பவன் குமார் சந்தன் சமீபத்தில் கூறினார்.
- இதன் மூலம் தனியார் நிறுவனமான ஸ்கைரூட் அதன் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகியிருக்கிறது.
- ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் மற்றும் ஸ்பேஸ்கிட்ஸ் தவிர, கோயம்புத்தூரைச் சேர்ந்த பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் ஆகியவை சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் சில இந்திய நிறுவனங்களாகும்.
- ஸ்கைரூட் உயர்தர தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிக எண்ணிக்கையிலும் மிகவும் மலிவு விலையிலும் ராக்கெட்டுகளைத் தயாரிக்கும் என்று நம்புகிறது.
- அடுத்த தசாப்தத்தில் சுமார் 20,000 சிறிய செயற்கைக்கோள்களை தங்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்துவதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
- தமது ராக்கெட்டுகள் எந்த ஏவுதளத்திலிருந்தும் 24 மணி நேரத்திற்குள் ஒருங்கிணைக்கப்பட்டு ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கைரூட் குறிப்பிட்டுள்ளது.
- இந்திய விண்வெளி துறையில் பொது-தனியார் பங்கேற்புக்கான அடித்தளம் 2020ஆம் ஆண்டில் தொடங்கியது.
- ஜூன் 2020 இல், பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம் இந்தத் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கிய போது அது தனியார் நிறுவனங்களுக்கு வழி வகுத்தது.
- IN-SPACEe என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இஸ்ரோ மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களை இணைக்கிறது.
- 2040ஆம் ஆண்டில், உலகளாவிய விண்வெளித் தொழில் சுமார் $1 ட்ரில்லியன் அளவிற்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியா இந்த லாபம் கொழிக்கும் சந்தையில் தடம் பதிக்க ஆர்வமாக உள்ளது - தற்போது உலகின் விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 2% ஆக உள்ளது.
- இந்த இடைவெளியை நிரப்ப விண்வெளி தொழில்நுட்பத்தில் புதுமைகளை உருவாக்க தனியார் நிறுவனங்களை இந்தியா ஊக்குவிக்கிறது.
- விக்ரம் எஸ் என்பது மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும் ஒற்றை-நிலை துணை சுற்றுப்பாதை ராக்கெட் ஆகும்.
- சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகள் விண்வெளியில் எரிந்து பூமியில் விழுகின்றன. வானத்தில் எறியப்பட்ட கல்லைப் போல, இந்த ராக்கெட் பூமியில் மீண்டும் விழுவதற்கு முன்பு ஒரு பரவளைய பாதையாக வரும். இந்த ராக்கெட்டுகள் 10 முதல் 30 நிமிடங்களில் கீழே விழுந்துவிடும். இந்த ராக்கெட்டுகள் சவுண்டிங் ராக்கெட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- நாட்டிகல் மொழியில், ஒலி என்றால் அளவிடுவது என்று பொருள். இந்த ராக்கெட்டுகள் வளிமண்டல அளவை ஒத்து பயணிக்கும்," என்று அவர் மேலும் கூறினார். வட்டப்பாதை மற்றும் துணை சுற்றுப்பாதை ராக்கெட்டுகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் வேகம்.
- ஒரு ராக்கெட் வட்டப்பாதையில் சுற்றுப்பாதை வேகத்தை எட்ட வேண்டுமானால் அவை மணிக்கு 28,000 கிமீ வேகத்தில் செல்ல வேண்டும். இல்லையெனில் அது பூமியில் விழுந்துவிடும்.
- ஆனால் சப்ஆர்பிட்டல் ராக்கெட்டுகளில் அப்படி இருக்காது. அவற்றுக்கு இத்தனை வேகம் தேவையில்லை. அவை தங்கள் வேகத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு பறந்து, இயந்திரங்கள் செயலிழந்த பிறகு கீழே விழும். உதாரணமாக, இந்த ராக்கெட்டுகளுக்கு மணிக்கு 6,000 கிமீ வேகமே போதுமானதாக இருக்கும்.
- வரலாற்றில், 1942ஆம் ஆண்டில் நாஜி விண்வெளி பொறியாளர்களால் முதன்முதலில் துணை சுற்றுப்பாதை ராக்கெட் V-2 பயன்படுத்தப்பட்டது.
- அதன் மூலம், தங்கள் கூட்டாளிகளுக்கு ஆயுதங்களை நாஜிக்கள் வழங்கினர். அந்த ராக்கெட்டின் வேகம் காரணமாக எதிரிகளால் அதை தடுக்க முடியவில்லை.
- The name Vikram S is named after the founder of the Indian Space Research Organization (ISRO), Dr. Vikram Sarabhai.
- There are three types of rockets in the Vikram Rocket Avum series. They are being developed to deliver smaller satellites.
- First in line is the Vikram I rocket. Vikram II and Vikram III are said to be capable of carrying heavier 'payload' (satellites) to 'Low Earth Orbit'.
- Vikram S will carry three payloads. It will carry three small satellites into 'Low Earth Orbit'.
- Two of these payloads belong to Indian customers. Third payload, foreign owned.
- Skyroot had already announced that the complete test of the rocket was successfully conducted in May 2022. At this stage, Skyroute has named the sub-orbital project as 'Prarump' (beginning).
- According to a press release issued by Skyroot, the Vikram S rocket should have taken place between November 12 and 16. However, the company said its launch schedule has been shifted to November 18 due to unfavorable weather conditions.
- Former ISRO scientists Pawan Kumar Chandana and Naga Bharat Dhaka jointly started Skyroot Aerospace in 2018.
- Its CEO Pawan Kumar Chandan said recently that ISRO is providing them with coordination facility, launch pad, remote communication and tracking support for the mission.
- With this, private firm Skyroot has become the first startup to sign an MoU with ISRO to launch its rockets.
- Apart from Skyroot Aerospace, Chennai-based Agnicool Cosmos and SpaceKids, Coimbatore-based Bellatrix Aerospace are some of the Indian companies launching small satellites into space.
- Skyroot hopes to manufacture rockets in large numbers and at very affordable prices with the help of high-end technology.
- The company aims to launch about 20,000 small satellites on its rockets over the next decade.
- Skyroot also mentioned that its rockets are designed to be coordinated and launched from any launch site within 24 hours.
- The foundation for public-private participation in the Indian space sector began in 2020. In June 2020, Prime Minister Narendra Modi's government initiated reforms in the sector that paved the way for private companies.
- A new system called IN-SPACEe was created. It connects ISRO and private space agencies. By 2040, the global aerospace industry is estimated to grow to around $1 trillion.
- India is keen to tap into this lucrative market – India currently accounts for 2% of the world's space economy. India encourages private companies to innovate in space technology to fill this gap.
- Vikram S is a single-stage suborbital rocket carrying three payloads.
- Suborbital rockets burn up in space and fall to Earth. Like a stone thrown into the sky, the rocket follows a parabolic trajectory before falling back to earth. These rockets will fall in 10 to 30 minutes. These rockets are also called sounding rockets.
- In nautical terms, to sound means to measure. These rockets will travel at atmospheric level," he added. The main difference between orbital and sub-orbital rockets is their speed.
- In order for a rocket to reach orbital speed in a circular orbit, they must travel at a speed of 28,000 km/h. Otherwise it will fall to earth.
- But not so with suborbital rockets. They don't need that much speed. They fly to a certain height according to their speed and fall down after the engines stop. For example, a speed of 6,000 km per hour is sufficient for these rockets.
- In history, the V-2 sub-orbital rocket was first used by Nazi space engineers in 1942.
- In doing so, the Nazis supplied weapons to their allies. Due to the speed of the rocket, the enemy could not stop it.