TAMIL
- ஜேம்ஸ் வெப் எனப்படும் புதிய அதிநவீன தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற 'பில்லர்ஸ் ஆஃப் கிரியேஷனின்' இரண்டாவது படத்தை அமெரிக்க விண்வெளி அமைப்பான 'நாசா' வெளியிட்டுள்ளது.
- இந்த வாரம் MIRI (Webb's Mid-Infrared Instrument) கருவி மூலமாக செயல்பாட்டில் உள்ள நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் காட்சி நமக்கு கிடைத்தது.
- பூமியில் இருந்து சுமார் 6,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த இடத்தை கண்காணிப்பகத்தின் அருகிலுள்ள அகச்சிவப்பு கேமரா கடந்த வாரம் படம்பிடித்தது.
- மெஸ்ஸியர் 16 அல்லது ஈகிள் நெபுலா என வானியல் ஆய்வாளர்கள் குறிப்பிடும் மையத்தில் இந்தத் தூண்கள் அமைந்துள்ளன.
- இவை நீண்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஏனெனில் வாயு மற்றும் தூசுக்களாலான நெபுலாவில் புதிய நட்சத்திரங்கள் பிறப்பதால் அதன் இயற்பியல் மற்றும் வேதியியலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் வகையில் ஒவ்வொரு நவீன தொலைநோக்கியும் அவற்றின் திசையை நோக்கி உள்ளன.
- 6.5மீட்டர் அகலமான கண்ணாடி மற்றும் உயர்தர சென்சார் கொண்ட வெப் தொலைநோக்கி, காட்சிகளைப் பதிவு செய்வதற்கான சிறந்த மற்றும் பெரிய விண்வெளி கண்காணிப்பு கருவியாகும்.
- தூண்களைக் காட்ட பயன்படுத்தப்படும் அலைநீளங்களைத் தேர்வு செய்வதற்கான வசதி, புதிய MIRI படத்தில் உள்ள சிறப்பம்சமாகும்.
- ஜேம்ஸ் வெப் என்பது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடா விண்வெளி முகமைகளின் கூட்டுத் திட்டமாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.
- NASA has released the second image of the famous 'Pillars of Creation' taken by the new James Webb telescope. This week the MIRI (Webb's Mid-Infrared Instrument) instrument gave us a view of the active star formation region.
- The spot, about 6,500 light-years from Earth, was captured last week by the observatory's Near-Infrared Camera. These pillars are located in the center of what astronomers refer to as Messier 16 or the Eagle Nebula.
- These deserve a longer study. Because new stars are born in a nebula of gas and dust, every modern telescope is pointed in their direction to try to understand its physics and chemistry.
- With a 6.5m wide mirror and a high-quality sensor, the Webb Telescope is an excellent and large space observation tool for recording scenes.
- A feature of the new MIRI image is the facility to select the wavelengths used to display the pillars. JAMES WEB is a joint project of the US, European and Canadian space agencies. It was launched in December last year.