தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு தண்டனை - டெல்லி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
- தீவிரவாதத்துக்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வகை செய்யும் 3-வது அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் தொடங்கியது. தீவிரவாதத்துக்கு நிதி இல்லை என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
- 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க நாளான நேற்றைய நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
- இந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் 'விக்ரம்-எஸ்' (Vikram-S) நவம்பர் 18-ம் தேதி விண்வெளிக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. இந்தப்பணிக்கு 'பிரரம்ப்' என பெயரிடப்பட்டு உள்ளது.
- அதன்படி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, முழுமையாக தனியார் தயாரித்த ராக்கெட்டை நவ. 18, காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவியது.
- இந்த ராக்கெட் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டாகும். 83 கிலோ எடையை தூக்கி செல்லும் இந்த ராக்கெட் 2 இந்திய செயற்கைகோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைகோள்கள் உள்பட 3 செயற்கைகோள்களை சுமந்து சென்றது.
- ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது. 7 டன் உந்து சக்தியை கொண்டது.
- இந்த 3 செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 கி.மீ. உயரத்தில் 300 வினாடிகளில் கொண்டு சென்று நிலை நிறுத்தப்படுகிறது.
வ.உ.சி. 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு - இணைய பக்கத்தையும் தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
- வ.உ.சி.யின் 150-வது பிறந்த ஆண்டு சிறப்பு மலரை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், வ.உ.சி. எழுதிய 11 நூல்கள், 7 பதிப்புகள், உரை எழுதிய 3 நூல்கள், மொழியாக்கம் செய்யப்பட்ட 4 நூல்கள், வ.உ.சி. பற்றிய 20 வரலாற்று நூல்கள், 6 நூற்றாண்டுப் பதிவுகள், 2 மலர்கள், அவர் குறித்த கட்டுரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு, 5 ஆய்வு நூல்கள் மற்றும் 6 பிற நூல்கள், வ.உ.சி. தொடர்பான 7 கையெழுத்துப் பிரதிகள், 17 ஒளிப்படங்கள், ஒளி-ஒலி ஆவணங்கள், 38 பிற ஆவணங்கள் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவை மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
- இவற்றை உள்ளடக்கி தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மின்நூலக இணையதளத்தில், சிறப்பு இணையப் பக்கம் (https://www.tamildigitallibrary.in/voc) உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்த இணைய பக்கத்தை பொது மக்கள் மற்றும் ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
பழைய ஓய்வூதிய திட்டம் - பஞ்சாப்பில் ஒப்புதல்
- பஞ்சாப்பில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்தது.
- இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மேலும், வேளாண் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் உயிரிழந்த 624 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- பழைய திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. புதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை ஓய்வூதிய நிதிக்கு வழங்குகிறார்கள்.
- அதனடிப்படையில் அவர்கள் ஓய்வு பெறும்போது, ஒரு மொத்த தொகையை பெற உரிமையுடையவர்களாக கருதப்படுவர். ஏற்கனவே, ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. கடந்த 2004ம் ஆண்டில் பழைய பென்சன் திட்டம் நிறுத்தப்பட்டது.
பருவநிலை மாநாடு வளரும் நாடுகளுக்கு நிதியுதவி - ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
- பருவநிலை மாற்றத்தால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காக, அந்த நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க எகிப்தில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஐரோப்பிய யூனியன் ஒப்புக்கொண்டுள்ளது.
- இது குறித்து நடைபெற்ற தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனின் அரசியல் மற்றும் நிதி விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவா் ஃபிரன்ஸ் டிம்மா்மன்ஸ் பருவநிலை மாற்றம் காரணமாக தோன்றும் இயற்கைப் பேரிடா்களால் தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடு செய்வதற்காக, வளா்ச்சியடைந்த நாடுகள் தங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ஜி77 நாடுகள் (வளரும் நாடுகளின் கூட்டமைப்பு) வலியுறுத்தி வருகின்றன.
- இதுவரை அத்தகைய நிதியை உருவாக்குவதில் நாங்கள் தயக்கம் காட்டி வந்தோம். ஏற்கெனவே இதுபோன்ற இயற்கைப் பேரிடா்களில் நிவாரணம் அளிப்பதற்கான நிதியுதவிக் கட்டமைப்பு உள்ளது.
ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப் 2022
- தென் கொரியாவில் நடைபெற்ற 15-ஆவது ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 25 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்கள் வென்று அசத்தியது.
- கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஜூனியா் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மானு பாக்கா்/சமரத் ராணா கூட்டணி 17-3 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா சயித்குலோவா/முகாமத் கமாலோவ் ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றினா்.
- அதில் மற்றொரு இந்திய ஜோடியான சாகா் தாங்கி/ஈஷா சிங் 14-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் லீ சியுங்ஜன்/யாங் ஜின் கூட்டணியிடம் வெண்கலப் பதக்கத்தை இழந்தனா்.
- அதிலேயே சீனியா் பிரிவில் ரிதம் சங்வான்/விஜய்வீா் சித்து ஜோடி 17-3 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஸான்/இரினா யுனுஸ்மிடோவா இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
- அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்திய ஜோடியான சிவா நா்வால்/யுவிகா தோமா் வெண்கலப் பதக்கச் சுற்றில் 6-16 என்ற கணக்கில் தென் கொரிய கூட்டணியிடம் வெற்றியை இழந்தனா்.
குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருதை இந்தியா வென்றுள்ளது
- நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், அதற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விருதை இந்தியா வென்றுள்ளது.
- குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022 என்ற இந்த விருதை தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் (ஐசிஎஃப்பி) இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
- நாடுகள் பிரிவில் இந்த விருதை பெற்ற ஒரே நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் திருமணமான பெண்களின் விகிதம் 2015-16-ஆம் ஆண்டில் 66 சதவீதமாக இருந்தது. 2019-21 ஆண்டில் அது 76 சதவீதமாக அதிகரித்தது.
- உலகளவில் 2030-ஆம் ஆண்டில் இந்த சதவிகிதம் 75-ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா ஏற்கனவே அந்த இலக்கை எட்டியுள்ளது.
- பரிவார் விகாஸ் எனும் முன்னோடி திட்டம் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இதில் முன்னேற்றங்களை அடைய வழிவகுத்துள்ளது.
- ஐசிஎஃப்பி என்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணொலி வாயிலாகவும் பங்கேற்றனர்.