Type Here to Get Search Results !

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி - 4.0 மாநாடு / TAMILNADU INDUSTRIAL GROWTH 4.0 CONFERENCE

TAMIL

  • தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற "நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு" எனும் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு TANSAM மற்றும் TAMCOE ஆகிய நிறுவனங்களின் சிறப்பு மையங்களைத் திறந்து வைத்து, தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-யை வெளியிட்டுள்ளார்.
  • பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் விளங்கி வருகிறது. 
  • முதலீடுகளைப் பெருமளவில் ஈர்த்து, இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிடவும், மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்திடவும், 2030-31 ஆம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்திடவும் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • அந்த வகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை, 2022-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 
  • இக்கொள்கை மூலம், மாநிலத்தில் உற்பத்தி மேற்கொள்ளும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான ஊக்கத்தொகுப்புச் சலுகை அளிக்கப்பட்டு, இத்துறையின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, இக்கொள்கை பெருமளவில் ஆதரவு வழங்கிடும். 
  • இக்கொள்கையின் மூலம் 10 ஆண்டு காலகட்டத்திற்குள் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், மாநாட்டில் டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251.54 கோடி ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைத்துள்ள "TANSAM", மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையத்தைத் திறந்துள்ளனர்.
  • வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை, மின் வாகனங்கள் (EV), தொழில் இயந்திரங்கள், கடல்சார் தொழில்நுட்பம் (Marine), பசுமை சக்தி (Green Energy) மற்றும் பெட்ரோ கெமிக்கல், உயிரியல் தொழில் நுட்பத்துறை (Biotech), தொழிற்சாலைகளின் தானியக்கம் (Industrial Automation) சார்ந்த திட்டங்களுக்கு, ரோபாடிக்ஸ் (Robotics), உற்பத்திப் பொருட்களை இணையத்துடன் இணைக்கும் வளையமைப்பு (Industry IOT), ஆக்மென்டட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி/மிக்ஸ்டு ரியாலிட்டி(AR/VR/MR), சேர்க்கை உற்பத்தி (Additive manufacturing), டிஜிட்டல் டிவின்ஸ் (Digitial Twins) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை வழங்கிடும் வகையில் TANSAM திறன்மிகு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகு திறன்மிகு மையம் நம் நாட்டில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
  • டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3D அச்சிடுதல் தொழில் நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) TAMCOE திறன்மிகு மையத்தினை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.
  • GE ஏவியேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உபயோகப்படுத்தி, சேர்க்கை உற்பத்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை செம்மைப்படுத்திக் கொள்ள TAMCOE உதவும். 
  • மேலும், குறு, சிறு நிறுவனங்கள் / புத்தொழில்கள் / பல்கலைக்கழகங்கள் போன்றவற்றிற்குச் சாத்தியக்கூறு ஆய்வுகள் / முன்மாதிரி சேர்க்கை பகுதிகள் (Prototype additive parts) போன்ற துறைகளில் ஆலோசனை சேவைகளும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
  • அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) மூலம் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் பயன்பாடுகளுக்கான உலோக 3D அச்சிடுதல், மருத்துவம் மற்றும் மோட்டார் வாகனத் துறைகளில் அதிநவீன உற்பத்தித் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அத்துறைகளுக்கு ஒரு தனித்துவம் ஏற்படுத்தித் தருவது, TAMCOE-ன் முக்கிய நோக்கமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கடந்த ஜூலை மாதம் "டஸோ (Dassault)" நிறுவனத்தின் திறன்மிகு மையங்கள் தொடங்கப்பட்டது. 
  • இந்த மையங்களில், தொழிலாளர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும், தொழிற்சாலைக்குச் செல்லாமலே, அச்சூழலுக்கு ஏற்றவாறு மெய்நிகர் பயிற்சி அளிக்கப்படும். 
  • இந்த திறன்மிகு மையங்கள், தமிழ்நாடு முதலமைச்சர் "நான் முதல்வன்" திட்ட நோக்கத்துடன் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் இந்தியரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி (IGRUA) மற்றும் DE Drone ஆகிய நிறுவனங்கள் இணைந்து, மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் நிறுவியுள்ள ரிமோட் பைலட் பயிற்சி மையங்களை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
  • தமிழக முதலமைச்சர் முன்னிலையில், தொழில்துறை, தொழில்துறை கூட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் (Accurate Forgings, Hexsor, ADROITS, AIEMA, HOSTIA, AMET, Karpagam Group, Hindustan Group of Institutions, Sriher (Sri Ramachandra), TANCAM புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, Fabheads, MaxByte, Primeam ஆகிய நிறுவனங்களுடன் TAMCOE புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டன.
  • TIDCO நிறுவனமும், GTN நிறுவனமும் இணைந்து பொது வசதி மையம் (Common Testing Facility) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில், வெப்ப சிகிச்சை (Heat treatment), மேற்பரப்பு பூச்சு (Surface coating) மற்றும் வான்வெளி உபகரணங்களின் பிந்தைய செயலாக்கம் (Post Processing) போன்றவற்றிற்கான வசதிகளை அமைக்க அதிகம் செலவாகும். 
  • இந்த பொது வசதி மையங்கள் (Common Facility Centres) அமைக்கப்படுவதன் மூலம், தொழிலகங்களுக்கான உற்பத்தி செலவினங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, உற்பத்தித் திறன் பன்மடங்கு உயர்ந்திட வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசின் டிட்கோ நிறுவனம் மற்றும் ஒன்றிய அரசின், இந்திரா காந்தி ராஷ்ட்ரிய உடான் அகாடமி (IGRUA), DE Drone நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. 
  • இப்பயிற்சி மையங்கள் மூலம் மாதம் 200 மாணவர்கள் என்ற விகிதத்தில் பயிற்சி அளிக்கப்படும். ஒரு வருடத்திற்குள் சுமார் 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வாய்ப்பு உள்ளது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ENGLISH
  • Tamil Nadu Chief Minister M.K. at the Fourth Generation Industrial Development Conference titled "Tomorrow Noki Today - Head Upright Tamil Nadu" held on behalf of Tamil Nadu Industrial Development Corporation, Government of Tamil Nadu. Stalin attended and inaugurated the Centers of Excellence of TANSAM and TAMCOE and unveiled the Tamil Nadu Space and Defense Policy 2022.
  • Tamil Nadu is one of the leading states in India in terms of economic and industrial development. 
  • The government is undertaking various development initiatives to attract investments, provide employment to lakhs of Tamil Nadu youth, strengthen the state economy and achieve a USD 1 trillion economic growth for Tamil Nadu by the financial year 2030-31.
  • In this regard, Chief Minister M. K. Stalin announced the Tamil Nadu Aerospace and Defense Industry Policy, 2022 in a program held today.
  • Through this policy, it has been informed that the development of the sector will be encouraged by providing a special incentive package to the aerospace and defense investors engaged in manufacturing in the state.
  • In particular, the policy will provide massive support to micro, small and medium enterprises and industrial enterprises.
  • Through this policy, a target of investment of 75 thousand crore rupees in the aerospace and defense sector and providing employment to 1 lakh people has been set within a period of 10 years.
  • Also, at the conference, TIDCO and Siemens jointly inaugurated "TANSAM", a state-of-the-art center for advanced manufacturing at Tidal Park at a cost of Rs 251.54 crore.
  • Robotics for projects in Aerospace and Defense, Electric Vehicles (EV), Industrial Machinery, Marine, Green Energy and Petrochemical, Biotech, Industrial Automation TANSAM Center of Excellence has been set up to provide state-of-the-art technologies such as Industry IOT, Augmented Reality/Virtual Reality/Mixed Reality (AR/VR/MR), Additive Manufacturing, Digital Twins. The highlight of this is that such an efficient center has been set up for the first time in our country.
  • The Chief Minister inaugurated TAMCOE, a world-class Additive Manufacturing Center in 3D printing technology, jointly developed by TITCO and GE Aviation with an investment of Rs 141 crore.
  • TAMCOE will leverage GE Aviation's technical expertise to help refine additive manufacturing research and development. It is also said that consulting services in the fields of Feasibility Studies / Prototype additive parts will be provided to micro and small companies / Industries / Universities etc.
  • It has been mentioned that the main objective of TAMCOE is to introduce cutting-edge manufacturing technologies in the fields of metal 3D printing, medical and automotive sectors through Intellectual Property Rights, thereby creating a uniqueness for those sectors.
  • Dassault's centers of excellence were launched last July. In these centers, workers and entrepreneurs will be given virtual training tailored to the environment without visiting the factory.
  • It is reported that these centers of excellence will work in tandem with the Tamil Nadu Chief Minister's "Naan Muluvan" program objective.
  • Also, the Chief Minister inaugurated the Remote Pilot Training Centers established in Madurai and Coimbatore by the Tamil Nadu Government's DITCO, the Union Government's Indiara Gandhi Rashtriya Udon Academy (IGRUA) and DE Drone through a video presentation.
MoUs at Conference
  • In the presence of the Chief Minister of Tamil Nadu, MoUs were signed with industries, industry federations, hospitals and educational institutes (Accurate Forgings, Hexsor, ADROITS, AIEMA, HOSTIA, AMET, Karpagam Group, Hindustan Group of Institutions, Sriher (Sri Ramachandra), TANCAM. Subsequently, Fabheads, TAMCOE MOU with MaxByte, Primeam.
  • An MoU was signed between TIDCO and GTN to set up a Common Testing Facility. In the aerospace and defense sector, facilities for heat treatment, surface coating and post processing of aerospace equipment are costly to set up.
  • By setting up these Common Facility Centers, production costs for the industries have been greatly reduced and opportunities have been created to increase productivity manifold.
  • An MoU was also signed with TITCO, Government of Tamil Nadu and Indira Gandhi Rashtriya Udon Academy (IGRUA), DE Drone, Union Government.
  • Training will be provided at the rate of 200 students per month through these training centers. It is mentioned in the notification that there is a possibility of employment for about 2500 persons within a year.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel