Type Here to Get Search Results !

3 ஆண்டுகளில் பிரதமரின் கிசான் திட்ட பயனாளிகள் 67% சரிவு / 67% DECLINE IN PM KISAN'S SCHEME BENEFICIRIES IN 3 YEARS

 

TAMIL
  • பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டின் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை தலா ரூ 2,000 வீதம் என, மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி வழங்கப்படுகிறது. 
  • பிப்ரவரி 2019ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது.
  • இந்நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் (PM-KISAN) கீழ், 11வது தவணை பெற்றவர்கள் எண்ணிக்கை 67% சரிந்துள்ளதாக தெரிகிறது. 
  • பிஎம் கிசான் திட்டத்தின் 11வது தவணையை 3.87 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர். மே 2022 முதல் ஜூன் 2022 வரையிலான காலகட்டத்தில் இது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. 
  • இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட 2019ல் பயனாளிகள் எண்ணிக்கை 11.84 கோடியாக இருந்தது. இது 2019 மக்களவை தேர்தலுக்கு முந்தைய நிலவரம். அண்மையில் வழங்கப்பட்ட 12வது தவணையில் பயனாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் சரிந்துள்ளது.
  • இந்த சரிவு 6வது தவணையில் இருந்து ஆரம்பித்துள்ளது. 6வது தவணையை 9.87 கோடி விவசாயிகள் பெற்றனர். அதன் பின்னர் 7, 8, 9, 10வது தவணைகளை முறையே 9.30, 8.59, 7.66 மற்றும் 6.34 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர்.
  • புள்ளிவிவரங்களின்படி ஆந்திரப் பிரதேசத்தில் பயனாளிகள் எண்ணிக்கை 55.68 லட்சத்தில் இருந்து 28.2 லட்சமாகக் குறைந்துள்ளது. பிஹாரில் பயனாளிகள் எண்ணிக்கை 83 லட்சமாக இருந்த எண்ணிக்கை 7 லட்சமாகக் குறைந்துள்ளது. 
  • சத்தீஸ்கரில் 11வது தவணையை 2 லட்சம் விவசாயிகள் பெற்றுள்ளனர். ஆனால் முதல் தவணையை 37 லட்சம் பேர் பெற்றனர்.
  • தேர்தலை சந்திக்கவுள்ள குஜராத்தில் 63.13 லட்சம் விவசாயிகள் 2019லும், 2022ல் 28.41 லட்ச விவசாயிகளும் பெற்றனர். ஹரியாணாவில் 19.73 லட்சம் விவசாயிகள் முதல் தவணையில் பயனடைந்தனர். 11வது தவணையை 11.59 லட்ச விவசாயிகள் பெற்றனர்.
  • கடந்த அக்டோபரில் வழங்கப்பட்ட தவணையைப் பொறுத்தவரை மகாராஷ்டிராவில் 1.09 கோடி விவசாயிகள் மட்டுமே பெற்றனர். இது 2019ல் 37.51 லட்சமாக இருந்தது. மத்தியப் பிரதேசத்தில் 88.63 லட்சம் விவசாயிகள் 2019ல் பயனடைந்த நிலையில் தற்போது 12.05 லட்சம் பேர் மட்டுமே பெற்றுள்ளனர். 
  • பஞ்சாப்பில் 23.34 லட்சமாக இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை 2022ல் 11.31 லட்சமாக சரிந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 2.6 கோடி விவசாயிகள் பயனடைந்த நிலையில் இந்த ஆண்டு 1.26 கோடியாக குறைந்துள்ளது. 
  • மேற்குவங்கத்தில் 2019ல் 45.63 லட்சம் விவசாயிகள் பயனடைந்த நிலையில். 2022ஆம் ஆண்டுக்கான தவணை அம்மாநில விவசாயிகளுக்கு இதுவரை விடுவிக்கப்படவில்லை.
  • தமிழ்நாட்டில் 2019ல் 46.8 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். இந்நிலையில் இந்த அக்டோபரில் 23.04 லட்சம் விவசாயிகளே பயனடைந்துள்ளனர்.
ENGLISH
  • Under the Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN), eligible farmers are given a fund of Rs 6,000 annually in three installments of Rs 2,000 each once every four months of the year.
  • Launched in February 2019, the funds provided through this scheme are transferred directly to the bank accounts of the beneficiaries.
  • In this case, under Pradhan Mantri Kisan Samman Nithi (PM-KISAN), the number of 11th term recipients has dropped by 67%.
  • 3.87 crore farmers have received the 11th tranche of PM Kisan scheme. It has been directly credited to farmers' bank accounts during the period May 2022 to June 2022.
  • In 2019, when the scheme was launched, the number of beneficiaries was 11.84 crore. This is the situation before the 2019 Lok Sabha elections. In the recently released 12th installment, the number of users has dropped drastically.
  • This decline has started from the 6th term. 9.87 crore farmers received the 6th installment. Since then 9.30, 8.59, 7.66 and 6.34 crore farmers have received the 7th, 8th, 9th and 10th installments respectively.
  • According to statistics, the number of beneficiaries in Andhra Pradesh has decreased from 55.68 lakh to 28.2 lakh. In Bihar, the number of beneficiaries has come down from 83 lakh to 7 lakh.
  • 2 lakh farmers have received 11th installment in Chhattisgarh. But 37 lakh people got the first installment.
  • 63.13 lakh farmers in 2019 and 28.41 lakh farmers in 2022 in Gujarat, which is going to face elections. In Haryana, 19.73 lakh farmers benefited in the first tranche. 11.59 lakh farmers received the 11th installment.
  • As for the last October installment, only 1.09 crore farmers in Maharashtra received it. It was 37.51 lakh in 2019. While 88.63 lakh farmers in Madhya Pradesh were benefited in 2019, now only 12.05 lakh have received it.
  • In Punjab, the number of users fell from 23.34 lakh to 11.31 lakh in 2022. While 2.6 crore farmers benefited in Uttar Pradesh, it has come down to 1.26 crore this year.
  • 45.63 lakh farmers benefited in 2019 in West Bengal. The installment for the year 2022 has not yet been released to the farmers of the state.
  • 46.8 lakh farmers benefited in Tamil Nadu in 2019. In this case, only 23.04 lakh farmers have benefited this October.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel