Type Here to Get Search Results !

சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகள் 2022 / SANGEETHA NADAKA AKADEMI AMIRTHA AWARDS 2022

TAMIL

  • 75 ஆண்டு இந்திய விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் கீழ், 75 கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகளை சங்கீத நாடக அகாடமி அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை தேசிய அளவிலான விருதுகளைப் பெறாத கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில், இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. 
  • கடந்த 6 முதல் 8ஆம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற்ற சங்கீத நாடக அகாடமியின் பொதுக்குழு கூட்டத்தில் இந்தக் கலைஞர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
  • இந்த விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும், தாமிரப்பத்திரமும், அங்கவஸ்திரமும் வழங்கப்படும்.
  • இந்த விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சாள்புரம் சின்னத்தம்பி (நாதஸ்வரம்), புருசை சுப்பிரமணியம் (தெருக்கூத்து), சுந்தரேசன் ராமமூர்த்தி (நாடக நடிகர்), வி.ஏ.கே.ரங்காராவ் (நடன இசை), பி.ரமணி (வீணை இசை) ஆகிய கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  • புதுச்சேரியைச் சேர்ந்த நாடக இசைக் கலைஞர் கே.எம்.சுப்பையா, பொம்மலாட்டக் கலைஞர் வீராசாமி சீனிவாசன் ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
ENGLISH
  • Sangeetha Natak Akademi has announced Sangeetha Natak Akademi Amrita Awards to 75 artistes under the Amrita celebrations of 75 years of Indian Independence. These awards will be given to artists above 75 years of age from various states of India who have not received national level awards before.
  • These artistes were unanimously selected in the Sangeetha Natak Akademi general body meeting held in New Delhi from 6th to 8th. Those selected for this award will receive Rs. A cash prize of 1 lakh, a copper plate and an angavastra will be given.
  • This award is given to artists from Tamil Nadu namely Achalpuram Chinnathambi (Nathswaram), Purusai Subramaniam (Terukuthu), Sundaresan Ramamurthy (Drama Actor), V.A.K.Ranga Rao (Dance Music) and B.Ramani (Veena Music).
  • Puducherry-based theater musician KM Subpaiah and puppeteer Veerasamy Srinivasan have also been selected for this award.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel