குஜராத்தில் உள்ள மோதேரா நாட்டின் முதல் சூரிய மின்சார கிராமம் - பிரதமர் மோடி அறிவிப்பு
- குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27ல் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க வந்தார்.
- மேஹ்சானாவில் உள்ள மோதேராவுக்கு வந்த அவர், அந்த கிராமத்தில் சூரிய ஒளி திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது மோதேரா கிராமம் இந்தியாவின் முதல் சூரிய ஒளி கிராமம் என்பதை அறிவித்தார்.
- மோதேராவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம், 24 மணி நேரமும் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்படும் நாட்டின் முதல் கிராமம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
பார்முலா 1 கார் பந்தயம் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மீண்டும் சாம்பியன்
- 2022 சீசனின் கடைசி பந்தயமான ஜப்பான் கிராண்ட் பிரீ தொடரில் அபாரமாக வென்ற மேக்ஸ் (3:01.44) மொத்தம் 366 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து கோப்பையை தக்கவைத்துக் கொண்டார்.
- மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்த பந்தயத்தின் முடிவு சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிப் பட்டியலில் மற்ற வீரர்களை விட 100க்கும் அதிகமான புள்ளிகள் முன்னிலை பெற்ற வெர்ஸ்டாப்பன் 2வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- சக ரெட் புல் வீரர் செர்ஜியோ பெரஸ் (253 புள்ளி) 2வது இடமும், பெராரி அணி வீரர் சார்லஸ் லெக்ளர்க் (252) 3வது இடமும் பிடித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெர்சிடிஸ் நட்சத்திரம் லூயிஸ் ஹாமில்டன் 180 புள்ளிகள் மட்டுமே பெற்று 6வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் பன்முக -கலாச்சார இணைப்புகளைக் கண்டறிதல்-எனும் வானிலை குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை ஏஎஸ்ஐ நடத்தியது
- மழைக்காலக் காற்று மற்றும் பிற காலநிலை காரணிகள் மற்றும் இந்த இயற்கை கூறுகள் தாக்கத்தை ஏற்படுத்திய விதங்கள், வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, 2014 ல் கத்தாரின் தோஹாவில், நடைபெற்ற யுனெஸ்கோவின் 38வது உலகப் பாரம்பரியக் குழுக் கூட்டத்தில் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் 'மௌசம் - வானிலை ' திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் (ஏஎஸ்ஐ) நிர்வகிக்கப்படுகிறது.
- மேலும், ஆராய்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் இந்த விஷயத்தைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்துதல் நோக்கத்துடன், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் புது தில்லியில் உள்ள இந்திய ஹாபிடேட் சென்டரில் இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் இரண்டு நாள் தேசிய மாநாட்டை ஏஎஸ்ஐ ஏற்பாடு செய்தது.
- "ஜலதிபுரயாத்ரா: பன்முக -கலாச்சார இணைப்புகளை ஆராய்தல் ”, மாநாடு கடல்சார் பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல்களின் பன்மடங்கு அம்சங்களை உள்ளடக்கியது.
- மாநாட்டின் தொடக்க அமர்வை கலாச்சாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திருமதி. மீனாஷி லேகி, கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் தற்போது தில்லியில் உள்ள பல இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தூதர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
அக்டோபர் 8, 2022 வரையில் நிதியாண்டு 2022-23க்கான நேரடி வரி வசூல், ரூ. 8.98 லட்சம் கோடி
- அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 23.8% அதிகம்.
- நேரடி வரி வசூல், மொத்த ரீஃபண்டுகள் ரூ. 7.45 லட்சம் கோடியாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3% அதிகமாக பதிவாகியுள்ளது. 2022-23 நிதி ஆண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் இந்த வசூல் 52.46% ஆகும்.
- மொத்த வருவாய் வசூலில் பெருநிறுவன வருமான வரி (சி.ஐ.டி) மற்றும் தனிநபர் வருமான வரியின் (பி.ஐ.டி) வளர்ச்சியைப் பொறுத்தவரையில் சி.ஐ.டி 16.73%, பி.ஐ.டி 32.30% வளர்ச்சி அடைந்துள்ளன.
- ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8, 2022 வரை ரூ. 1.53 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய வருடத்தின் இதே காலகட்டத்தில் அளிக்கப்பட்ட தொகையை விட 81.0% அதிகம்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் வடகிழக்கு கவுன்சிலின் 70வது முழுமையான குழுக் கூட்டம் நடைபெற்றது
- அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று வடகிழக்கு கவுன்சிலின் 70வது முழுமையான குழுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.
- வடகிழக்கு பிராந்தியத்தின் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர், திரு ஜி. கிஷன் ரெட்டி மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் இணை அமைச்சர், திரு பி.எல்.வர்மா, வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதலமைச்சர்கள், மத்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச்சேர்ந்த பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி - 7வது நாள்
- குஜராத்தில் நடைபெறும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 2 விளையாட்டுகளில் தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
- சைக்கிளிங் விளையாட்டில் ஆடவருக்கான 119 கி.மீ. மாஸ்டு ஸ்டாா்ட் பிரிவில் தமிழகத்தின் ஸ்ரீநாத் லக்ஷ்மிகாந்த் 3-ஆம் இடம் பிடித்தாா். பஞ்சாபின் ஹா்ஷ்வீா் சிங் ஷெகோன், உத்தர பிரதேசத்தின் அரவிந்த் பன்வா் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தனா். மகளிருக்கான டிரையத்லானில் எஸ்.
- ஆா்த்தி 1 மணி நேரம் 13.17 நிமிஷங்களில் 3-ஆவதாக இலக்கை எட்டி வெண்கலம் பெற்றாா். குஜராத்தின் பிரக்ஞா மோகன் (1:7.32) தங்கமும், மகாராஷ்டிரத்தின் மான்சி மோஹிதே (1:13.10) வெள்ளியும் வென்றனா்.
- ராஜ்கோட்டில் உள்ள சர்தார் படேல் அக்வாட்டிக்ஸ் வளாகத்தில் நடந்த ஆடவருக்கான 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் இறுதிப் போட்டியில் ஆறாவது தங்கப் பதக்கத்தை வென்று, தேசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் ஒலிம்பியன் ஸ்ரீஹரி நடராஜ் (கர்நாடகா) தனது பதக்க வேட்டையை முடித்துக் கொண்டார்.
- அவர் 50.41 வினாடிகளில் பெற்ற வெற்றியானது, தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிய சாதனையாகும்.
- ஒரு வாரகாலமாக மூத்தவீரர் சஜன் பிரகாஷ் பெற்ற (கேரளா) ஐந்து தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பார்த்த ஸ்ரீஹரி நடராஜ், இன்று (09-10-2022), அவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெற்றியைப் பெற்றார். சஜன் பிரகாஷ் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
- ஸ்ரீஹரி, இரண்டு ப்ரீஸ்டைல் ஸ்பிரிண்ட் தங்கப் பதக்கங்களைப் பெற்று, இரண்டு பேக் ஸ்ட்ரோக் பட்டங்களைச் சேர்த்து, பதக்கப்பட்டியலில் கர்நாடக ரிலே அணிகளுக்கு இரண்டு தங்கம் என்ற நிலைக்கு உயர்த்தினார்.
- எஸ்பி லிகித் இன்று (09-10-2022) 100 மீட்டர் போட்டியில் வென்றதன் மூலம் மூன்று ஆண்களுக்கான பிரெஸ்ட் ஸ்ட்ரோக் போட்டிகளை க்ளீன் ஸ்வீப் செய்து, பதக்கப்பட்டியலில் தங்கம் 44 ஆக அதிகரிக்க வழி வகுத்தார். பதக்கப்பட்டியலில் 30 தங்கத்துடன் இரண்டாவது இடத்தில் ஹரியானா உள்ளது.
- 4x100 மீட்டர் மெட்லே தொடர் ஓட்டப் போட்டியில் கர்நாடகாவை வீழ்த்திய தமிழ்நாடு, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
- அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரிவர்ஃபிரண்ட் விளையாட்டு வளாகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு எதிரான சாஃப்ட் டென்னிஸ் இறுதிப் போட்டியில் குஜராத் ஆடவர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகளை நடத்தும் குஜராத் மாநிலம் இதுவரை இல்லாத வகையில் 11 தங்கப் பதக்கங்களை வென்றது.
- தமிழ்நாடு வீராங்கனை எஸ் வைஷ்ணவி 134.22 புள்ளிகளுடன் பெண்களுக்கான கலை யோகாசனத்தில் தங்கம் வென்றார், மகாராஷ்டிரா ஜோடியான சாகுலி பன்சிலால் செலோகர் (127.68) மற்றும் பூர்வா ஸ்ரீராம் கினாரே (126.68) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றனர்.
- ராஜ்கோட்டில் உள்ள மேஜர் தயான் சந்த் ஸ்டேடியத்தில் நடந்த ஆடவர் ஹாக்கியில், கர்நாடகா 11-2 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அரையிறுதியில் ஹரியானா அணியை வீழ்த்தியது.
- வழக்கமான ஆட்டத்தில் த்ரில்லர் 1-1 என முடிவடைந்த பிறகு, பெனால்டி ஷூட் அவுட் மூலம் உத்தரபிரதேசம் மேற்கு வங்கத்தை வென்றது. கடைசி கால் இறுதியில் ஜார்கண்ட் அணியை வீழ்த்திய மகாராஷ்டிராயுடன் உத்தரபிரதேச அணி மோதுகிறது.
- போட்டியின் பதக்கப்பட்டியலில் தமிழகம் 22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என 67 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்தில் நிலைத்திருக்கிறது.
- சா்வீசஸ் அணியினா் 51 தங்கம், 33 வெள்ளி, 29 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனா்.
- ஹரியாணா 95 பதக்கங்களுடன் (31/29/35) இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரம் 119 பதக்கங்களுடன் (30/33/56) மூன்றாவது இடத்திலும் உள்ளன.