TAMIL
- முப்படைகளில், இந்திய வான்வெளியைப் பாதுகாக்கும் இந்திய விமானப் படையானது, இயற்கைப் பேரிடர்களின் போது மீட்புப் பணிகளை மேற்கொண்டு மிகவும் முக்கிய பணியாற்றுகிறது.
- தேசத்தை காக்கும் இந்திய விமானப்படையின் (IAF) விமான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அக்டோபர் 8அம் நாள் அனுசரிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 8, 1932 இல் இந்திய விமானப்படை நிறுவப்பட்டது.
- அந்த தினத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும், இந்திய விமானப்படை தினம் அக்டோபர் எட்டாம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு IAF இன் 90-வது ஆண்டு விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும், இந்த தினம் ஒரு பெருமைக்குரிய விஷயமாக கொண்டாடப்படுகிறது, இது மக்களிடையே தேசபக்தியை தூண்டுகிறது.
- Among the tri-services, the Indian Air Force plays an important role in protecting the Indian airspace and carrying out rescue operations during natural calamities.
- 8th October is observed as a day to pay tribute to the Airmen of the Indian Air Force (IAF) who protect the nation. The Indian Air Force was officially established on October 8, 1932.
- To mark the day, Indian Air Force Day is observed on October 8th every year. This year marks the 90th anniversary of the IAF. Every year, this day is celebrated as a matter of pride and it inspires patriotism among the people.