தேசிய விளையாட்டு போட்டிகள் - தடகளத்தில் தமிழக மகளிர் அணி சாம்பியன்
- இந்தியாவின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற வருகின்றது.
- இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
- கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெற்றுள்ளன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
- இந்நிலையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் பிரிவில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது தமிழ்நாடு மகளிர் அணி. ஒட்டுமொத்தமாக 2வது இடத்தைப் பிடித்த தமிழ்நாடு, 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை தடகளத்தில் கைப்பற்றியுள்ளது. மகளிர் பிரிவில் மட்டும் தமிழக வீராங்கனைகள் 4 தங்கம் உட்பட 9 பதக்கங்களை வென்றுள்ளனர்.
- தமிழ்நாடு வீரர் வீராங்கனைகள் ஒட்டுமொத்தமாக 14 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் அர்ச்சனா சுசீந்திரன் 200 மீட்டர் தடகளப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். வித்யா ராம்ராஜ் 400 மீட்டர் தடையோட்டத்திலும், என்.அஜித் பளு தூக்குதலிலும் தேசிய சாதனை படைத்துள்ளனர்.
ராணுவத் தளவாடங்கள் (சி மற்றும் எஸ்) பிரிவின் புதிய தலைமை இயக்குனராக சஞ்சீவ் கிஷோர் பொறுப்பேற்றுக் கொண்டார்
- இந்திய ராணுவத் தளவாட தொழிற்சாலை சேவையின் 1985 ஆம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த திரு சஞ்சீவ் கிஷோர், ராணுவத் தளவாட (சி மற்றும் எஸ்) பிரிவின் தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- இந்த பதவியில் இருந்த திரு எம் கே கிராக் ஓய்வு பெற்றதை அடுத்து 01.10.2022 முதல் இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை ஏற்பதற்கு முன் திரு கிஷோர் கொல்கத்தாவில் உள்ள ராணுவத் தளவாட ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் இயக்ககத்தின் கூடுதல் தலைமை இயக்குனராக இருந்தார்.
பண்பலை வானொலி மூன்றாம் கட்ட கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது
- தனியார் பண்பலை மூன்றாம் கட்ட கொள்கை வழிகாட்டு நெறிமுறைகள் என்று குறிப்பிடப்படுகின்ற தனியார் முகமைகள் மூலம் பண்பலை வானொலி ஒலிபரப்பு சேவைகள்
- மூன்றாம் கட்டம் என்பதன் விரிவாக்கம் குறித்த கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சில அம்சங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- இந்த திசையில், உரிம காலமான 15 ஆண்டுகளில் ஒரே நிர்வாகக் குழுமத்திற்குள் பண்பலை வானொலி அனுமதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான மூன்றாண்டு பரீட்சார்த்த காலத்தை நீக்குவது என அரசு முடிவு செய்துள்ளது.
- வானொலி தொழில் துறையின் நீண்டகால நிலுவை கோரிக்கையாக உள்ள, அலைவரிசையைத் தக்கவைத்துக் கொள்வதற்கு 15 சதவீத தேசிய தகவல்கள் என்ற வரம்பு என்பதையும் நீக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
- பண்பலை வானொலி கொள்கை விதிமுறைகளில் நிதி சார்ந்த தகுதியை எளிமைப்படுத்தும் விதமாக சி மற்றும் டி வகை நகரங்களின் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் ஏலத்தொகை ஏற்கனவே இருந்த ரூ. 1.5 கோடி என்பதிலிருந்து ரூ. 1 கோடி என குறைக்கப்பட்டுள்ளது.
- இந்த மூன்று திருத்தங்களும் தனியார் பண்பலை வானொலி தொழில் துறை பொருளாதார ரீதியில் முழுமையான உத்வேகத்தைப் பெற உதவும்; நாட்டிலுள்ள மூன்றாம் கட்ட நகரங்களில் பண்பலை வானொலியையும் பொழுதுபோக்கினையும் விரிவுபடுத்த வழி வகுக்கும்.
- இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி நாட்டின் தொலைதூர மூலை முடுக்குகளில் உள்ள சாமானிய மக்களுக்கும் வானொலி வழி சுதந்திரம் என்பதற்கான வானொலி ஊடகத்திற்கு இசை மற்றும் பொழுதுபோக்கை உறுதி செய்யும்.
- நாட்டில் எளிதாக வணிகம் செய்தல் என்பதை மேம்படுத்துவதற்காக நிர்வாகத்தை மேலும் திறன் உள்ளதாகவும் பயனுடையதாகவும் மாற்றுவதற்கு தற்போதுள்ள விதிகளை எளிமைப்படுத்துதல் மற்றும் சீர்திருத்தல் என்பதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் மூலம் இதன் பயன்கள் சாமானிய மக்களை சென்றடையும்.
சிறந்த வீராங்கனை மும்தாஜ் - சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விருது
- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.ஹெச்.,) சார்பில், ஹாக்கி போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். 2021-22ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங் (சிறந்த வீரர்), ஸ்ரீஜேஷ் (சிறந்த கோல்கீப்பர்), பெண்கள் அணி கேப்டன் சவிதா (சிறந்த வீராங்கனை), வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சய், வீராங்கனை மும்தாஜ் இடம் பெற்றிருந்தனர்.
- உலகின் பல்வேறு ஹாக்கி அமைப்புகள், கேப்டன், பயிற்சியாளர்கள், வீரர்கள், ரசிகர்கள், மீடியாவை சேர்ந்தவர்கள் இணையதள வழியில் ஓட்டுப்பதிவு செய்து தேர்வு செய்தனர்.
- மொத்தம் பதிவான ஓட்டுகளில் 32.9 சதவீதம் பெற்ற இந்தியாவின் மும்தாஜ் 19, சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக ('ரைசிங் ஸ்டார்') ஆக தேர்வு செய்யப்பட்டார்.
- ஜூனியர் உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்தவர்களில் மூன்றாவது இடம் பெற்றார் மும்தாஜ் (6 போட்டி, 8 கோல்). இதனால் 'ரைசிங் ஸ்டார்' விருதை தட்டிச் சென்றார்.