மத்திய, மாநில அரசின் பங்குகளை சேர்த்து பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.912 கோடி ஒதுக்கீடு
- பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான நிலுவை, 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் 2.89 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,564.98 கோடியில் நான்கில் ஒரு பங்கான ரூ.891.12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியுடன் தனது நிதியையும் சேர்த்து தமிழக அரசு ரூ.1,485.21 கோடி ஒதுக்கியது.
- இதையடுத்து, மத்திய அரசு தனது பங்கில் எஞ்சியுள்ள ரூ.2,673.86 கோடியில் ரூ.891.36 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியது. அடுத்தகட்டமாக ரூ.667.45 கோடியை ஒதுக்கியது.
- இதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் இதர பிரிவினருக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.547.31 கோடியுடன் (60 சதவீத பங்கு), மாநில அரசின் ரூ.364.88 கோடியையும் (40 சதவீத பங்கு) சேர்த்து ரூ.912.19 கோடி ஒதுக்குமாறு தமிழக அரசை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார்.
- இதையடுத்து, ரூ.912.19 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை உரிய கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளவும் ஊரக வளர்ச்சி ஆணையருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
- இது மட்டுமின்றி, இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்க மத்திய அரசு கூடுதலாக ரூ.200 கோடி வழங்கியுள்ளது.
- நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த லிகித் 2:16.40 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். தமிழகத்தின் எஸ்.தனுஷ் (2:18.81) வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் அணியைச் சேர்ந்த சுதேஷ் (2:20.76) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
- ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து இறுதிப் போட்டியில் தமிழக அணி 18-21 என்ற கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
- பளுதூக்குதலில் மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் ஆரோக்கிய அலிஸ் 206 கிலோ (89 117) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். உத்தரப்பிரதேசத்தின் பூனம் யாதவ் 205 கிலோ (92 113) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் ஹர்ஜிந்தர் கவுர் 204 கிலோ (89 115) எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
- ரோலர் ஸ்போர்ட்ஸில் ஆடவருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் அனந்தகுமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இன்லைன் ஃப்ரீஸ்டைல் ஸ்பீட் ஸ்லாலோம் பிரிவில் தமிழகத்தின் சர்வேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரிலேவில் தமிழகம் வெள்ளி வென்றது.
- ரோலர் ஸ்போர்ட்ஸில் மகளிருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் ஆரத்தி 1:39 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார்.
- ரிலே பிரிவில் தமிழக மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது. ஸ்கேட் போர்டிங் பார்க்கில் தமிழகத்தின் பி.கமலி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆர்டிஸ்டிக் ஸ்கேட்டிங் ஜோடி நடனத்தில் தமிழகம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
- மகளிருக்கான நீளம் தாண்டுதலில் கேரளாவின் நயனா ஜேம்ஸ் 6.33 மீட்டர் நீளம்தாண்டி தங்கம் வென்றார். உத்தரபிரதேசத்தின் ஷைலிசிங் (6.28) வெள்ளிப்பதக்கமும், கேரளாவின் ஸ்ருதி லட்சுமி (6.24) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
- பிரதமர் மோடி தூய்மை இந்தியா நகர்புற இயக்கத்தை துவக்கி வைத்தார். அதன்படி மத்திய நகர்புற வீட்டு வசதி துறை அமைச்சகம் சார்பில் 50 ஆயிரத்திற்கும் கீழ் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் தூய்மை, நகர்புற வளர்ச்சி கட்டமைப்புகளை ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நகராட்சிகளை தேர்வு செய்து விருது வழங்குகிறது.
- தூய்மை இயக்கத்தின் ஓராண்டு நிறைவு விழா சமீபத்தில் டில்லியில் நடந்தது. இதில் புனித தலமான ராமேஸ்வரம் நகராட்சியில் தூய்மை கட்டமைப்பை சிறப்பாக செய்திருந்ததால் மத்திய அரசு சிறந்த நகராட்சியாக தேர்வு செய்தது.
- அதற்கான விருதை மத்திய அமைச்சர் கவுல் கிஷோர், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கானிடம் வழங்கினார். விழாவில் நகராட்சி கமிஷனர் கண்ணன், கவுன்சிலர்கள் முகேஷ்குமார், முருகன், சத்தியமூர்த்தி பங்கேற்றனர்.
- கடந்த மாதம், இந்தியாவில் வேலையில் இருப்போர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு குறைந்து, 39.46 கோடியாக இருந்தது.
- செப்டம்பரில், வேலைவாய்ப்பு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பால், வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ.இ) இயக்குநர் மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார்.
- சி.எம்.ஐ.இ அமைப்பின் தரவுகளின்படி, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறிப்பிடும்படியாக குறைந்துள்ளது.
- கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஒரே மாதத்தில் 1.84 சதவீதம் குறைந்துள்ளது. ஆகஸ்டில் 7.68 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பரில் 5.84 சதவீதமாக குறைந்தது.
- அதேநேரத்தில், இந்தாண்டு பிப்ரவரி முதல் வேலைவாய்ப்பின்மை விகிதம் (ஜூலை தவிர) தொடர்ச்சியாக 7 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
- ஆகஸ்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம், ஓராண்டு இல்லாத அளவுக்கு உச்சபட்ட அளவாக 8.3 சதவீதமாக பதிவாகியது. கிராமங்களை போலவே, நகர்ப்புறங்களில், இதே மாதிரியான போக்கு காணப்படுகிறது.
- ஆகஸ்டில் 9.57 சதவீதமாக அதிகரித்த வேலைவாய்ப்பின்மை விகிதம், செப்டம்பரில் 7.70 சதவீதமாக சரிந்துள்ளது. கூடுதலாக, 80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக பொருளாதார நல்ல நிலையில் இருப்பதை காட்டுகிறது.
- மாநிலங்கள் வாரியாக பார்க்கையில், செப்டம்பரில், வேலைவாய்ப்பின்மை விகிதம் ராஜஸ்தானில் அதிகபட்சமாக 23.8 சதவீதமாக பதிவாகி உள்ளது.
- அதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில், 23.2 சதவீதமாகவும், திரிபுராவில் 17 சதவீதமாகவும் உள்ளது. ஹரியானாவில் 22.9 சதவீதமும், ஜார்க்கண்டில் 12.2 சதவீதமும், பீஹாரில் 11.4 சதவீதமாக உள்ளது.
- நாட்டிலேயே சட்டீஸ்கரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.1 சதவீதமாக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து அசாமில் 0.4 சதவீதமும், உத்தர்காண்டில் 0.5 சதவீதமும் பதிவாகி உள்ளன. ம.பி.,யில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 0.9 சதவீதமாக உள்ளது.
- ஒடிசாவில் 2.9 சதவீதமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் பதிவாகி உள்ளது. இந்தியாவில் ஆகஸ்டில் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்ததற்கு, மழைப்பொழிவு அதிகரித்து, விதைப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதே காரணமென கூறப்படுகிறது. இதன் தாக்கம், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மையிலும் எதிரொலித்தது.
- ஆகஸ்டில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7 சதவீதமாகவும், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 6-வது இந்திய மொபைல் காங்கிரசுடன், மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா உச்சிமாநாடும் அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்றது.
- மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவு இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர், தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான், புதுச்சேரி, ஆந்திர, பிரதேசம், அசாம், பிகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தராக்கண்ட், தெலங்கானா, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள், செயலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார்