Type Here to Get Search Results !

2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR MEDICINE OR PHYSIOLOGY 2022

2022ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 

NOBEL PRIZE FOR MEDICINE OR PHYSIOLOGY 2022

TAMIL
  • நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்த கண்டுபிடிப்பை பங்களித்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. 
  • நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.7.35 கோடி ரொக்கப்பரிசு அடங்கியது. 
  • இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு, அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. 
  • மனிதன் எங்கிருந்து வந்தான்? நமக்கு முன்னால் தோன்றிய மனிதனுக்கும் தற்போது பரிணாம மாற்றம் அடைந்த மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்ற கோணத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்துள்ளார் ஸ்வாண்டே பாபோ.
  • ஹோமினின் என்று அழைக்கப்படும் அழிந்து போன முந்தைய காலத்து மனித இனத்தைப் பற்றி சாத்தியமற்ற கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்துள்ளார். தற்போது மனித இனத்திற்கு நெருங்கிய தொடர்புடைய நியாண்டர்தால் (Neanderthal) என்ற அழிந்துபோன இனத்தின் மரபணுவை இவர் வரிசைப்படுத்தியுள்ளார்.
  • மேலும் டெனிசோவா என்ற ஹோமினின்கள் பற்றி உலகிற்குக் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளார். இவரின் ஆராய்ச்சியில் முக்கியமாக மனித கண்டுபிடிப்பில் பெரிய அச்சாணியாகத் திகழக் கூடிய மரபணு பரிமாற்றத்தைப் பற்றிக் கண்டுபிடித்துள்ளார்.
  • அழிந்துபோன ஹோமினின்கள் முதல் தொடங்கி 70,000 ஆண்டுகள் முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த ஹோமோ சேபியன்ஸ் வரை உள்ளவற்றின் மரபணு மாற்றத்தை இவர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்துள்ளார்.
  • இவரின் இந்த ஆராய்ச்சி, அறிவியல் ஆராய்ச்சியில் புதிய வடிவத்தைத் தோற்றுவித்துள்ளது. மனித பரிமாற்றத்தில் இருக்கும் மரபணுக்கள் வேற்றுமையைக் கண்டுபிடிப்பதன் மூலம் இதர உயிரினங்களைக் காட்டிலும் மனிதன் தனித்துவம் அடைந்தவன் என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.
  • நியாண்டர்தால்கள் டிஎன்ஏ மாதிரிகளை வைத்து இவர் நடத்திய ஆராய்ச்சி மூலம் மரபணு வேறுபாடுகளைக் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆராய்ச்சி மனிதன் எங்கிருந்து தோன்றினான் என்று கேள்விக்கு ஒரு சரியான பாதையைத் தோற்றுவித்துள்ளது.
  • மேலும் 2008 ஆம் ஆண்டு ஸ்வாண்டே பாபோ, சைபீரியாவின் தெற்குப் பகுதியில் டெனிசோவா என்ற குகையில், இவர் 40,000 வருடம் பழைமை வாய்ந்த கை எலும்பில் இருந்து எடுத்து டிஎன்ஏ மூலம் அழிந்துபோன ஹோமினின்கள் என்ற இனத்தைப் பற்றி கண்டுப்பித்துள்ளார். ஹோமினின்களை டெனிசோவா என்று அழைக்கின்றனர். இது ஒரு புதிய இனத்தையே உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மனித வரலாற்றில் முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாக இவர் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு இந்த ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்தாண்டு அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டேவிட் ஜுலியஸ் மற்றும் ஆர்டம் படபூடியான் ஆகிய இருவருக்கும், வெப்பநிலை மற்றும் தொடுதல் மூலமாக உடலில் நடக்கும் மாற்றங்களை, உடலை தொடாமல் அறியும் உணரிகளைக் கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ENGLISH
  • The Nobel Prize is considered the highest prize in the world. The prize is awarded every year to those who have contributed outstanding inventions in the fields of peace, literature, physics, chemistry, economics and medicine.
  • The Nobel Prize consists of a medal, a certificate and a cash prize of Rs 7.35 crore. This year's Nobel Prize in Medicine has been awarded to Sweden's Svante Pabo for his discoveries about the genomes of extinct hominins and human evolution.
  • Where did man come from? Svante Pabo has been conducting research on the relationship between the man who appeared before us and the man who has evolved now.
  • He has made an unlikely discovery about an extinct early human species known as hominin. He has now sequenced the genome of the Neanderthal, an extinct species closely related to humans.
  • He also discovered Denisova, the hominin, to the world. His research has focused on the discovery of gene transfer, a major phenomenon in human innovation.
  • Through his research, he has discovered and introduced to the world the genetic modification of everything from extinct hominins to Homo sapiens, which migrated from Africa 70,000 years ago.
  • His research has created a new pattern in scientific research. This research is intended to reflect how humans are unique from other species by discovering genetic variation in human transmission.
  • He discovered genetic differences through his research using DNA samples from Neanderthals. This research has paved the way to the question of where did man come from.
  • And in 2008, in a cave called Denisova in Svante Babo, southern Siberia, he discovered a 40,000-year-old arm bone and DNA from an extinct species of hominin. Hominins are called Denisovans. It has introduced a new species to the world.
  • He has been awarded this year's Nobel Prize in Physiology or Medicine for his discovery of the most important scientific discovery in human history.
  • Last year, American scientists David Julius and Artum Patapoudian were awarded the Nobel Prize for inventing sensors that detect changes in the body through temperature and touch without touching the body.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel