உலகளவில் அதிக ஊழியர் கொண்ட அமைப்பு - இந்திய பாதுகாப்புத் துறைக்கு முதலிடம்
- ஜெர்மனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டேடிஸ்டா (Statista) நிறுவனம் அதிக ஊழியர்களைக் கொண்டிருக்கும் அமைப்புகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- இந்தப் பட்டியலில் 29.2 லட்சம் ஊழியர்களைக் கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முதல் இடத்தில் உள்ளது.
- அடுத்து 29.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை 2-வது இடத்திலும், 25.5 லட்சம் ஊழியர்களைக் கொண்டு சீனாவின் பாதுகாப்புத் துறை 3-வது இடத்திலும் உள்ளன.
- தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் 23 லட்சம் ஊழியர்களைக் கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் அமேசான் நிறுவனம் 16.1 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது.
- சென்ற ஆண்டில் உலக அளவில் 2.1 லட்சம் கோடி டாலர் ராணுவத்துக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் அதிகம் செலவிட்டுள்ளன.
ரூ. 22,000 கோடியில் திட்டம் விமானப்படை விமானம் தயாரிப்பு - குஜராத் ஆலைக்கு மோடி அடிக்கல்
- நம் விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு, 'ஆவ்ரோ 748' வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகை விமானங்கள், 1960களில் கொள்முதல் செய்யப்பட்டவை.
- இதையடுத்து, அந்த விமானங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய நவீன போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டது.
- இதற்காக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஏர்பஸ்' நிறுவனத்தின், 'சி 295' ரக விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
- மொத்தம், 21 ஆயிரத்து 935 கோடி ரூபாய் மதிப்பில், 56 விமானங்களை வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதிய சகாப்தம்இந்த ஒப்பந்தப்படி, நான்கு ஆண்டுகளுக்குள், 16 விமானங்கள் நம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.
- மீதமுள்ள 40 விமானங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக, 'ஏர்பஸ்' நிறுவனம், நம் நாட்டைச் சேர்ந்த, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இந்த விமான தயாரிப்பு தொழிற்சாலை, குஜராத்தின் வதோதராவில் உருவாகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 'டாடா சன்ஸ்' தலைவர் என்.சந்திரசேகரன், 'ஏர்பஸ்' நிறுவன தலைமை செயல் அதிகாரி குய்லாம் பவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
U23 மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி - ஸ்பெயின் சாம்பியன்
- இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டது.
- இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
- இப்போட்டியில், 3-ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா 'பெனால்டி ஷூட் அவுட்' வாய்ப்பில் ஜொமனியை வீழ்த்தியது. முன்னதாக இரு அணிகளும் மோதிய ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில், நைஜீரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.