TAMIL
- 'கேலப்' வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல் மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வு மற்றும் குற்றம் மற்றும் பாதுகாப்பில் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவை தொடர்பாக நான்கு கேள்விகள் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,27,000 பேரிடம் கேட்கப்பட்டு அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
- சிங்கப்பூர் 96 மதிப்பெண்களுடன் அதிகபட்சமாக தரவரிசையில் உள்ளது, அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் 51 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- அதன்படி இந்த வருடத்தில் பாதுகாப்பில் குறைந்த நாடுகளாக கடைசி 5 நாடுகளில் சியரா லியோன் (59 புள்ளிகள்), காங்கோ (58 புள்ளிகள்), வெனிசுலா (55 புள்ளிகள்),காபான் (54 புள்ளிகள்), ஆப்கனிஸ்தான் (51 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளது.
- பாதுகாப்பில் சிறப்பாக உள்ள நாடுகளாக சிங்கப்பூர் (96 புள்ளிகள்), தஜிகிஸ்தான் (95), நார்வே (93), ஸ்விட்சர்லாந்து (92), இந்தோனேசியா (92 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன.
- இதில் இந்தியா 80 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் பாதுகாப்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கீழாகவே இந்தியா உள்ளது.
- அதேவேளையில் பிரிட்டன் மற்றும் வங்க தேசத்துக்கு மேலே இந்தியா இடம்பெற்றுள்ளது. தலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறைந்த நாடாக கடைசி இடத்தில் உள்ளது.
- ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3வது ஆண்டாக கடைசி இடத்தில் உள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கிழக்கு ஆசியா மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவை தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.
- The Gallup list is based on responses from 1,27,000 people in more than 120 countries to four questions about people's sense of personal safety and their personal experiences with crime and safety.
- Singapore ranks highest with 96 points, while Afghanistan is at the bottom of the list with 51 points. According to this year, the last 5 countries with the least security are Sierra Leone (59 points), Congo (58 points), Venezuela (55 points), Gabon (54 points) and Afghanistan (51 points).
- The best countries in security are Singapore (96 points), Tajikistan (95), Norway (93), Switzerland (92) and Indonesia (92 points). India has scored 80 points. However, India ranks below Pakistan and Sri Lanka in terms of security.
- Meanwhile, India ranks above Britain and Bangladesh. Afghanistan is the least secure country, which has been taken over by the Taliban.
- Afghanistan ranks last for the 3rd year in a row. East Asia is also declared to be the safest in the list. Southeast Asia is considered the safest region followed by East Asia.