ஒரே நாடு, ஒரே காவல் சீருடை மாநிலங்களுக்கு பிரதமர் மோடி யோசனை
- உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம், ஹரியாணா மாநிலம் சூரஜ்கண்ட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
- காவல் துறையை நவீனமயமாக்குவது, சைபர் குற்ற மேலாண்மை, குற்ற நீதி முறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, எல்லை மேலாண்மை, கடலோரப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தலை முறியடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
- இந்தக் கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதத் தொடர்புகளை ஒழிப்பதில் அனைத்து மாநில அரசுகளும் பொறுப்புடன் செயல்பட்டுள்ளன. தீவிரவாதத்தை ஒழிப்பதில் நமது படைகளை, ஒருங்கிணைத் துக் கையாள வேண்டும்.
- முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், தானியங்கி முறையில் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் சிசிடிவி தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- மாநிலங்கள் புதிய விஷயங்களைக் கற்று, நாட்டுக்காக இணைந்து செயல்பட முடியும். நாடு முழுவதும் போலீஸாரின் அடையாளம் ஒரே மாதிரியாக இருந்தால், அது சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன்.
- இதற்கு, நாடு முழுவதும் போலீஸாருக்கு ஒரே மாதிரிான சீருடையைக் கொண்டுவரலாம். இது ஒரு யோசனைதான். இதை மாநிலங்களிடம் திணிக்க நான் முயற்சிக்கவில்லை. இன்னும் 5, 50 அல்லது 100 ஆண்டுகளில் இது சாத்தியமாகலாம். இதுகுறித்து சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ட்விட்டா் உரிமையாளரானாா் எலான் மஸ்க்
- சா்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கும் ஒப்பந்தத்தை டெஸ்லா நிறுவன உரிமையாளா் எலான் மஸ்க் இறுதி செய்துள்ளாா்.
- ட்விட்டா் உரிமையாளரான முதல் நாளிலேயே, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) பராக் அக்ரவால் உள்ளிட்ட 4 மூத்த அதிகாரிகளைப் பணியில் இருந்து எலான் மஸ்க் நீக்கியுள்ளாா்.
நாட்டின் முதல் 4.2 மெகாவாட் காற்றாலை சோதனை ஓட்டம்
- இந்தியாவில் முதன் முறையாக நிறுவப்பட்ட, 4.2 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி சோதனை ஓட்டம் நடந்தது.
- திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே வடவிளையில் பிரேசில் நாட்டின் வெக் நிறுவனம், 4.2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின்சார காற்றாலையை, 88 கோடி ரூபாயில் நிறுவியுள்ளது.
- கன்னியாகுமரி ஆரல்வாய்மொழி கணவாய் பகுதியில் தற்போது அதிகபட்சம், 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளே உள்ளன.
கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
- நெல்லை மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட வளாகம் அமைந்துள்ளது.
- இங்கு ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை செய்யப்பட்டது.
- இந்த சோதனை 28 விநாடிகள் நீடித்தது. இது வெற்றிகரமாக நடந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19% ஆக அதிகரித்த மத்திய அரசு
- விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
- தொடர் மழை காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவு 17 சதவீதத்துக்கு மேல் இருந்ததால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
- இந்நிலையில், நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 17 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.