TAMIL
- சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் மக்களுக்கு ஏற்படும் அன்றாட பயன்பாடுகள் சார்ந்த குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை உடனடியாக தீர்த்து வைக்க ஏற்படுத்தப்பட்டது தான் ``நம்ம சென்னை செயலி''.
- இந்த செயலியின் மூலம் சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற குறைபாடுகளை தெரியப்படுத்தினாலோ, புகைப்படம் எடுத்து அனுப்பினாலோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.
- இந்த நம்ம சென்னை செயலியில் 94 வகையான புகார்கள் 12 குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 1,21,838 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
- அதுமட்டுமில்லாமல் இடர்கால மேலாண்மை, சொத்துவரி, பொதுச் சுகாதாரம், தேர்தல் கால தகவல்களையும் இச்செயலி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இதுவரையில் 1.2 லட்சத்துக்கும் அதிகமானோர் இச்செயலியை உபயோகித்து வருகின்றனர்.
- இந்நிலையில் செயலியில் கூடுதல் அம்சங்களாக வர்த்தக உரிமம் புதுப்பித்தல், நிறுவன வரி செலுத்துதல், கட்டிடத் திட்ட விண்ணப்ப நிலையை அறிதல் போன்ற சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது.
- சென்னை வாழ் மக்கள் சென்னை மாநகராட்சியின் 9499933644 என்ற வாட்ஸ் அப் எண்ணைப் பயன்படுத்தியும் இச்சேவைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Namma Chennai App was created by the Chennai Corporation officials to find out the complaints related to the daily utilities of the people in Chennai and to solve them immediately.
- Through this app, the concerned authorities will take immediate action if the defects like road, drinking water, electricity etc. are reported or photos are sent.
- This Namma Chennai App has 94 types of complaints categorized into 12 groups. Of these, 1,21,838 complaints have been received and redressed so far.
- Apart from that, the system is designed to provide information on risk management, property tax, public health and election period.
- So far more than 1.2 lakh people are using this app. In this case, services such as business license renewal, company tax payment, and knowing the status of building project applications have been added to the app as additional features.
- It has been informed that the residents of Chennai can avail these services by using the WhatsApp number of Chennai Corporation 9499933644.