இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்
- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை இடம்பெயரச் செய்யும் பணிக்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எலிசபெத் ஜோன்ஸ்,74, இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் அலுவலகம் பிறப்பித்துள்ளது. எலிசபெத் விரைவில் புதுடில்லியில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்பார் எனவும், வெள்ளை மாளிகை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மாநிலத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினரின் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
- அக்குழு ஆய்வு செய்து அரசிடம் கொடுத்த அறிக்கையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவீத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று சிபாரிசு செய்தது.
- அதன்படி பெங்களூருவில் கடந்த 6ம் தேதி முதல்வர் பொம்மை தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்ததது.
- அந்த கூட்டத்தில் இடஒதுக்கீடு உயர்த்த வேண்டும் என்று அனைத்து கட்சியினரும் ஒருமித்த குரலில் கூறியதை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
- அதை ெதாடர்ந்து பெங்களூருவில் கடந்த 8ம் தேதி முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது.
- இந்திய வணிகப் போட்டி ஆணையம், கூகுள் ப்ளே ஸ்டோர் கொள்கைகளில் அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்திய கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது நடத்தைகளை மாற்றியமைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
- மொபைல் ஆப்ஸ்கள் அனைத்து பயனாளர்களையும் சென்றடைய கூகுள் ப்ளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறி விட்டது. ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ், மறைமுகமாக கூகுளின் ஆன்ட்ராய் ஓஎஸ்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஆன்ட்ராய்டு மொபைல் ஃபோன்களுக்கான ஆப் உற்பத்தியாளர்களின் முக்கிய விநியோகஸ்தராக கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளது. இது சந்தைக்கு வரும் ஆப் வசதிகளை பயனாளர்கள் பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
- அதன் அடிப்படையில், இந்தியாவில் ஸ்மார் மொபைல் ஃபோன்களுக்கான உரிமம் பெற்ற ஓஎஸ்-கள் பிறவற்றின் ஓஎஸ்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.