TAMIL
- ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அகில இந்திய ஆயுர்வேதக் கழகம், ஆயுர்வேதம் தினம் 2022 நிகழ்ச்சியை தொடங்கியது.
- 12 செப்டம்பர் முதல் 23 அக்டோபர் வரையிலான ஆறு வார நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்தை காணொலி காட்சி வாயிலாக தொடங்கப்பட்டது.
- "ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டிலும் ஆயுர்வேதம்" என்ற தலைப்பில் ஆயுர்வேத தினம் கொண்டாடப்படவுள்ளது.
- தன்வந்திரி ஜெயந்தி அன்று ஆண்டுதோறும் ஆயுர்வேத தினத்தை ஆயுஷ் அமைச்சகம் கொண்டாடுகிறது. இந்த ஆண்டு 23 அக்டோபர் அன்று கொண்டாடப்பட உள்ளது.
- மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து இந்த ஆண்டு அமைச்சகம் கொண்டாடுகிறது. அதனால், பாரம்பரிய மருத்துவ முறை குறித்து நாட்டில் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
கருப்பொருள் 2022
- இந்த ஆண்டு 7வது ஆயுர்வேத தினம் "ஹர் தின் ஹர் கர் ஆயுர்வேதம்", அதாவது ஆயுர்வேதத்தின் நன்மைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய உறுதி ஏற்று செயல்பட வேண்டும் என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
- All India Ayurveda Kazhagam under Ministry of AYUSH launched Ayurveda Day 2022 program today. A preview of the six-week program from 12 September to 23 October was launched via video screening.
- Ayurveda Day will be celebrated under the theme “Ayurveda in every home every day”.
- Ayush Ministry celebrates Ayurveda Day every year on Dhanvantri Jayanti. This year it will be celebrated on 23 October.
- The Ministry is celebrating this year along with all the Ministries and Departments of the Central Government. Therefore, everyone in the country is made aware about traditional medicine.
- This year the 7th Ayurveda Day was celebrated with the theme "Har Din Har Kar Ayurveda", i.e. Commitment to reach the benefits of Ayurveda to all people.