உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் குழுவில் 5 நீதிபதிகளுக்கு பதில் 6 பேர்
- உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை, 'கொலிஜியம்' எனப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் குழு பரிந்துரைத்து நியமிக்கும். இந்த நடைமுறை 1998ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
- இந்நிலையில் கொலிஜியம் குழுவில் இருக்கும் 5 நீதிபதிகள் என்ற நடைமுறைக்கு பதிலாக 6 நீதிபதிகள் குழு நடைமுறை முதன்முதலாக அமலுக்கு வரவுள்ளது. இன்றைய நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், கொலிஜியம் குழுவின் தலைவராக உள்ளது.
- இவர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஓய்வுபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட், வரும் நவம்பர் 9ம் தேதி பதவியேற்க உள்ளார். 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி ஓய்வுபெறுவார்.
- நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட கொலிஜியம் குழுவில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப், எஸ்.ஏ.நசீர், எம்.ஆர்.ஷா ஆகிய நான்கு பேரும் உள்ளனர்.
- இவர்கள் நான்கு பேரும் டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெறுவதற்கு முன்பே ஓய்வு பெற்றுவிடுவார்கள். இவர்களில் எவரும் உச்சநீதிமன்றத்தின் அடுத்த புதிய தலைமை நீதிபதியாக முடியாது.
- அதனால், நீதிபதிகள் நியமன சட்டவிதிகளின்படி கொலிஜியத்தில் இருக்கும் நீதிபதிகளில் ஒருவர் தான், அடுத்த தலைமை நீதிபதியாக முடியும்.
- அதன்படி நீதிபதி சந்திரசூட்டுக்கு பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வருவதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தகுதி பெறுகிறார். அதனால், அவரே குழுவின் 6வது நீதிபதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
- இவரும் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதிக்கு பின்னர் தான் அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக முடியும். இவர் தலைமை நீதிபதியாகும் காலத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், கொலிஜியம் குழுவில் நீதிபதி பி.ஆர்.கவாய் இடம்பெறுவார்.
- இவர் அதற்கடுத்த தலைமை நீதிபதியாக வரவாய்ப்புள்ளது. அந்த காலகட்டத்தில் மீண்டும் கொலிஜியம் குழுவில் தற்போதுள்ள நடைமுறையின்படி 5 நீதிபதிகள் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் பிரதமர் மறைந்த ராஜிவ் பெயரில் உள்ள அறக்கட்டளை கடந்த 1991ம் ஆண்டு ஜூன் 21 ல் அமைக்கப்பட்டது.
- சோனியா தலைமையிலான இந்த அறக்கட்டளையில், மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே, அசோக் கங்குலி உள்ளிட்டோர் அறங்காவலர்களாக உள்ளனர்.
- இந்நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- அதில், வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஸ்பெயினில் நடைபெற்று வரும் 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
- இந்த போட்டியில் பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத், துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 12-4 என்ற கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.
- இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அமன் ஷெராவத் பெற்றுள்ளார்.
- 7வது ஆயுர்வேத தினம் இன்று இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பிரமாண்டமான அளவில் கொண்டாடப்பட்டது.
- இந்த ஆண்டு 7வது ஆயுர்வேத தினம் "ஹர் தின் ஹர் கர் ஆயுர்வேதம்", அதாவது ஆயுர்வேதத்தின் நன்மைகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய உறுதி ஏற்று செயல்பட வேண்டும் என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
- ஆறு வார காலமாக நடந்த கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 5, 000 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம், 26க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய அரசின் தூதரகங்கள் போன்றவைகளோடு இணைந்து ஏற்பாடு செய்து நடத்தியது.