வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - 3 ராக்கெட்
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது.
- முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் சுமார் 640 டன் எடை கொண்டது. இது திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் 3-நிலைகளை கொண்ட ராக்கெட்.
- வணிக ஏவுதல் மூலம் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து செல்கிறது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது.
- ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், இந்த ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
- மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவளம் தொடர்பாக பிரதமர் மோடிகடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டார். அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
- இதையடுத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள காலி பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் `ரோஜ்கார் மேளா'வை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
- நாட்டின் பல்வேறு நகரங்களில், ஒரே நேரத்தில் காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்கட்டமாக 75,226 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
- மத்திய அமைச்சர்கள் 50 பேர், சுமார் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாக பணி நியமன ஆணைகளை வழங்கினர். மற்றவர்களுக்கு அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
- இவர்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), எஸ்எஸ்சி மற்றும் ரயில்வே பணியாளர் வாரியம் (ஆர்ஆர்பி) உள்ளிட்டவை மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
- மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' 2012ல் ஒரு பரிந்துரை அளித்திருந்தது. இதில் அரசுகள், தனியார் துறையுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அரசுகளால் நிதி அளிக்கப்படும் நிறுவனங்களை, தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுஇருந்தது.
- மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் அது தொடர்பான சேவை வினியோகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது.
- இதுவரை அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால், வரும் டிச., 31க்குள் அந்த நடவடிக்கையிலிருந்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
- ஒளிபரப்பு நடவடிக்கைஏற்கனவே இதுபோன்ற ஒளிபரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், இனிமேல் அவை, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.
- மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய சில ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாக, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுஉள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் 246-வது பிரிவின்படி, மத்திய அரசு மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் சட்டம் இயற்ற முடியும்.
- கடந்த 2019, ஜன.27ல் மதுரை எய்ம்ஸ்க்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது செப்டம்பர் 2022க்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த காலகட்டமும் கடந்து விட்டது.
- தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமனம் செய்து ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- டாக்டர் நாகராஜன் வெங்கட்ராமன் மதுரையைச் சேர்ந்தவர். தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக்குழு தலைவராக உள்ளார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுடன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. இந்த நிர்வாகக் குழுவானது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும்.
- பொருளாதார நிபுணரான மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6வது செயல் இயக்குநர் எரிக்.எஸ்.சோல்ஹிம்.
- நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் இந்நிர்வாக குழுவின் சிறப்பு உறுப்பினர்களாவர்.
- ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-ஆவது கூட்டம் தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த வாரம் தொடங்கியது.
- ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராகத் தொடா்வதற்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று அப்போதே எதிா்பாா்க்கப்பட்டது. ஏற்கெனவே, சீனாவின் அதிபராக ஜின்பிங் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறாா்.
- அவரது 10 ஆண்டு பதவிக் காலம் நிறைவு பெறும் நிலையில், மூன்றாவது முறையாக அவரது பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில், கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திவாய்ந்த மத்தியக் குழுவுக்கு அவா் தோந்தெடுக்கப்பட்டாா்.
- 25 உறுப்பினா்களைக் கொண்ட அந்தக் குழுஞாயிற்றுக்கிழமை (அக். 23) கூடி, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக் கொள்வதற்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிலைக் குழு உறுப்பினா்களைத் தோந்தெடுக்கும்.
- அந்த நிலைக் குழு, நாட்டின் அடுத்த அதிபராகக் கூடிய கட்சித் தலைவரைத் தோந்தெடுக்கும். அந்தப் பொறுப்புக்கு ஷி ஜின்பிங்கைத் தோந்தெடுப்பதற்கான முதல்கட்டமாக, மத்தியக் குழுவுக்கு அவா் தற்போது தோந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- சீன வரலாற்றில் ஓா் அதிபா் 3-ஆவது முறையாக பதவி நீட்டிப்பு பெறவிருப்பது இதுவே முதல்முறையாகும்.