Type Here to Get Search Results !

TNPSC 16th OCTOBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்
  • நாட்டிலேயே முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மொழியில் இடம் பெற்றுள்ள மருத்துவ உயிர் வேதியியல், மருத்துவ உடற்கூறியல், மருத்துவ உடலியல் ஆகிய பாடங்களுக்கான புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.
  • நிகழ்ச்சியில், மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  • போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 97 நிபுணர்கள் இந்த இந்தி எம்பிபிஎஸ் பாடப்படிப் புக்கான புத்தகங்களை உருவாக்கியுள்ளனர். 
  • ஆங்கிலத்தில் இருந்து இந்தியில் பாடப்புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்கு 232 நாட்கள் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
75 டிஜிட்டல் வங்கிக் கிளை தொடங்கி வைப்பு - பிரதமர் மோடி
  • சாமானிய மக்கள் வாழ்க்கையை எளிமையாக்க 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டிஜிட்டல் வங்கிக் கிளைகளை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி இதுகுறித்து மேலும் கூறியதாவது:
  • நாடு சுதந்திரமடைந்து 75-வது ஆண்டை குறிக்கும் விதமாக 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் தற்போது தொடங்கி வைக்கப் பட்டுள்ளன. இதில், காஷ்மீர் வங்கியின் இரண்டு டிஜிட்டல் வங்கிக் கிளைகளும் அடக்கம்.
  • பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த வங்கிகள் இணைந்து நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இந்த டிஜிட்டல் கிளைகளை அமைத்துள்ளன. 
  • டிஜிட்டல் வங்கிக் கிளை தொடக்க நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டிலேயே முதலாவதாக உத்தரகாண்டில் புதிய தேசிய கல்வி கொள்கை அறிமுகம்
  • உத்தரகாண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இங்கு அங்கன்வாடியுடன் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளில் நாட்டிலேயே முதல் முறையாக தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் இதனை அறிமுகப்படுத்தினர்.
காந்திநகரில் 12-வது பாதுகாப்புக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தைக் கூட்டம்
  • குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற உள்ள 12-வது பாதுகாப்புக் கண்காட்சியின் ஒரு பகுதியாக அக்டோபர் 18-ஆம் தேதி இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு பேச்சுவார்த்தை சந்திப்பின்போது ஆப்பிரிக்க நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார். 
  • ‘இந்திய ஆப்பிரிக்கா: ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து, வலுப்படுத்துவதற்கான உத்தியைக் கையாளுதல்' என்பது இந்தக் கூட்டத்தின் கருப்பொருளாகும்.
  • இந்தியாவும், ஆப்பிரிக்காவும் நெருங்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவைக் கொண்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட கம்பாலா கோட்பாடுகளால் ஆப்பிரிக்கா குறித்த இந்தியாவின் அணுகுமுறை வழி நடத்தப்படுகிறது. 
  • 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சியின் போது உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் முதன் முதலில் இந்திய- ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சிமாநாடு நடைபெற்றது, குறிப்பிடத்தக்கது.
மிசோரமில் தேசிய பட்டியல் இன- பட்டியல் பழங்குடி மாநாடு
  • தேசிய பட்டியல் இன- பட்டியல் பழங்குடி மைய மாநாட்டை அக்டோபர் 15-ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் நடத்தியது. 
  • தேசிய பட்டியல் இன- பட்டியல் பழங்குடி மையம் உள்ளிட்ட அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தொழில்முனைவு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதும் இந்த மாநாட்டின் நோக்கமாகும். 
  • மிசோரம் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டாக்டர் ஆர். லால்தாங்லியானா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விழாவில், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமிகு மெர்சி எப்பாவோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 300 தொழில்முனைவோர் இதில் பங்கேற்றனர்.
  • இந்திய உணவுக் கழகம், எரிசக்தி தொகுப்பு நிறுவனம், வடகிழக்கு மின்சார எரிசக்தி கழகம் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுடன் தொழில்முனைவோர் கலந்துரையாடும் தளமாகவும் இந்த விழா அமைந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel