Type Here to Get Search Results !

தாய்மையுடன் நாம் செயலி / THAYMAIYUTAN NAAM APP


TAMIL
  • மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட 'தாய்மையுடன் நாம்' என்ற செயலியை அமைச்சர் சுப்ரமணியன் தொடங்கி வைத்தார் 
  • 'டெல்லியில் செயல்பட்டு வருவது போன்ற நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழ்நாடு முழுவதும் 708 நகரங்களில் தொடங்கப்பட உள்ளன. 
  • இந்த மையங்களில் மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவியாளர் என நான்கு பேர் பணியாற்றுவார்கள். இதற்காக 21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. நாமக்கல் நகராட்சியில் 7 மையங்கள் அமைக்கப்படும். 
  • மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'தாய்மையுடன் நாம்' என்ற செயலி, கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான தொடர் கண்காணிப்பு செயலியாகும். 
  • ஒரு பெண் கர்ப்பிணியானது முதல் அவருக்கு குழந்தை பிறந்த பிறகும் மொத்தம் 1000 நாட்களுக்கு இந்த செயலி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். 
  • இந்த செயலியில் கர்ப்பிணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படும். தற்போதைய நிலையில், ஒரு கர்ப்பிணியின் சிகிச்சை விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள பல்வேறு பதிவேடுகளை பார்வையிட வேண்டிய நிலை உள்ளது. 
  • இந்த புதிய செயலி மூலம் இனி மாவட்டத்தின் எந்த ஒரு அரசு மருத்துவரும் கர்ப்பிணியின் சிகிச்சை விவரங்களை அறிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகளை வழங்க முடியும். 
  • இதன் மூலம் பிரசவ காலங்களில் ஏற்படும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணங்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவு குறைக்கப்படும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்மாதிரி திட்டம் ஆகும். 
ENGLISH
  • Minister Subramanian launched an app called 'Thaimaiyoon Naam' developed by the district administration for the welfare of pregnant women. Urban health centers like the one in Delhi are to be started in 708 cities across Tamil Nadu.
  • These centers will be staffed by four people namely doctor, nurse, health inspector and assistant. For this, 708 urban welfare centers are to be set up in 21 Municipal Corporations and 63 Municipalities. 7 centers will be set up in Namakkal Municipality.
  • The app 'Thaimaiyut Naam' developed by the district administration is a continuous monitoring app for pregnant mothers and babies. A woman is continuously monitored through this app for a total of 1000 days from the time she is pregnant to after the birth of her child.
  • Details of pregnant women will be recorded in this app. At present, it is necessary to visit various registries to know the complete details of a pregnant woman's treatment.
  • Through this new app, any government doctor of the district can know the treatment details of the pregnant woman. Appropriate medical assistance can be provided to them.
  • This will greatly reduce maternal deaths and infant mortality during childbirth. It is a model project not only for Tamil Nadu but for entire India.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel