Type Here to Get Search Results !

உலக வறுமை ஒழிப்பு தினம் / INTERNATIONAL DAY FOR THE ERADICTION OF POVERTY

TAMIL

 • உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
 • இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்.
 • உலகில் ஒருவர் வறுமையால் பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது' என்கிறார் பிரான்சை சேர்ந்த பாதிரியார் ஜோசப் ரெசின்கி. சிறு வயதிலேயே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்., 17ல் உருவாக்கப்பட்டது.
 • 2030ம் ஆண்டுக்குள் அனைத்து நிலைகளிலும் வறுமைக்கு தீர்வு காண ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது.எது வறுமைஅனைவருக்கும் உணவு, குடிநீர், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், உடை,இருப்பிடம் கிடைக்க வேண்டும்.
 • இவை இல்லாதவர்கள் வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகின்றனர். வறுமை, வன்முறைக்கு வழிவகுக்கிறது. உலகில் அதிக மரணங்கள் வறுமையினால் தான் ஏற்படுகிறது. 
 • எய்ட்ஸ், மலேரியா, டிபி., போன்ற நோய்களால் உயிரிழப்பவர்களை விட, வறுமையினால் உயிரிழப்பவர்கள் அதிகம்.
இடைவெளி
 • வசதி படைத்தோர் - ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. வளராத நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு.
 • உலக பணக்காரர்களில், 20 சதவீதம் பேர், உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை வைத்துள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது 14 சதவீதம் மட்டுமே.
அக்கறையின்மை
 • ஏழ்மை நிலையில் மக்கள் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமை போன்ற காரணங்கள் உள்ளன. 
 • இருப்பினும், ஏழைகளின் பசியை போக்க எந்த அரசுக்கும் அக்கறை இல்லாததே முக்கிய காரணம். ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம், இதைத் தருவோம் என தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன.
 • ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன், மக்களின் பசியைக்கூட போக்க அவை முன்வருவதில்லை.
மையக்கருத்து 2022
 • இதனை ஐ.நா., சபை அங்கீகரித்தது. 'குழந்தைகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்தை முன்னேற்றி வறுமையை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 
ENGLISH
 • Various work programs are being carried out on Poverty Eradication Day with the aim of drawing the attention of all parties to the need to help people affected by poverty in the world.
 • This day was observed for the first time in 1987 in Paris, France. 100,000 people gathered in Torquay's Human Rights and Liberation Square to honor victims of hunger, poverty, violence and fear.
 • If someone in the world suffers from poverty, his human rights are being violated,' says priest Joseph Rezinqui from France. He fought against poverty at an early age. It was through his efforts that the World Day for Eradication of Poverty was established on 17 October 1987.
 • The UN has set a goal to end poverty at all levels by 2030. Everyone should have access to food, drinking water, medicine, education, employment, health, clothing, and shelter.
 • Those without these are considered to be in poverty. Poverty leads to violence. Most deaths in the world are caused by poverty. More people die from poverty than from diseases like AIDS, Malaria, TB.
Gap
 • The gap between the rich and the poor is widening. The gross domestic product of underdeveloped countries is less than the wealth of the world's top three richest people.
 • Among the world's richest people, 20 percent own 86 percent of the world's resources. The remaining 80 percent of the population gets only 14 percent.
Apathy
 • Politicians, corruption, bribery, illiteracy, lack of job opportunities, rising prices, non-implementation of new visionary programs are the reasons that keep people in poverty.
 • However, the main reason is that no government cares to alleviate the hunger of the poor. All parties make promises during elections that if they come to power, they will give this and that. But once in power, they do not even come forward to satisfy the hunger of the people.
Theme 2022
 • This was approved by the UN Council. This year's theme is 'Working together to eradicate poverty by uplifting children, their families and communities'.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel