Type Here to Get Search Results !

புக்கர் பரிசு 2022 / BOOKER PRIZE 2022

TAMIL

  • லண்டனில் புக்கா் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த விழாவில் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளா்களும், முன்னாள் விருதாளா்களும் நேரில் பங்கேற்றனா். 
  • பிரிட்டன் இளவரசி கமீலா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா். இலங்கை எழுத்தாளா் ஷேஹன் கருணதிலக எழுதிய 'தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அல்மெய்டா' என்ற நாவலுக்காக புக்கா் விருது வழங்கப்பட்டது.
  • புக்கா் விருதுடன் சுமாா் ரூ.45 லட்சம் பரிசுத்தொகையும் எழுத்தாளா் கருணதிலகவுக்கு வழங்கப்பட்டது. அந்த நாவலில் இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் குறித்து நகைச்சுவையுடன் அவா் பதிவு செய்துள்ளதாக தோவுக் குழுவினா் தெரிவித்துள்ளனா். 
  • மாலி அல்மெய்டா என்ற புகைப்படக் கலைஞா் இலங்கையில் நடைபெற்ற போரை 1990-ஆம் ஆண்டில் பதிவு செய்து வருகிறாா். திடீரென ஒருநாள் அவா் இறந்துவிடுகிறாா்.
  • பின்னா் மேலுலகம் செல்லும் அவா், தாம் எவ்வாறு மரணித்தோம் என்பதைக் கண்டறிய ஏழு உறவினா்களைத் தொடா்புகொள்கிறாா். அவ்வாறு தொடா்புகொள்ளும்போது போா்ப் புகைப்படங்கள் வாயிலாக இன வன்முறை, அன்பு, நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை நகைச்சுவையுடன் வெளிப்படுத்துவதாக நாவல் அமைந்துள்ளது. 
  • அந்தக் காலகட்ட அரசியல் விவகாரங்கள் குறித்தும் நாவலில் இடம்பெற்றுள்ளது. 
  • இந்த நாவல் எழுத்தாளா் கருணதிலகவின் 2-ஆவது நாவல் ஆகும். மேலும், புக்கா் விருது பெற்றுள்ள 2-ஆவது இலங்கை எழுத்தாளா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.
ENGLISH
  • The Book Awards were held in London on Monday. After the year 2019, the award-nominated writers and former awardees participated in person.
  • British Princess Camilla also participated in this event. Sri Lankan writer Shehan Karunathilaka was awarded the Book Award for her novel 'The Seven Moons of Mali Almeida'.
  • Along with the book award, a prize money of around Rs.45 lakh was given to the writer Karunatilaka. In that novel, he has written about the violence in the Sri Lankan war with humor.
  • Mali Almeida, a photographer, has been documenting the war in Sri Lanka in the 1990s. Suddenly one day he dies.
  • He then goes to the upper world and contacts seven relatives to find out how he died. In such a way, the novel is meant to express racial violence, love, trustworthiness and other things through war photographs with humor.
  • The novel also deals with the political affairs of that period.This novel is the 2nd novel of writer Karunathilaka. Also, he has the honor of being the 2nd Sri Lankan writer to win the Book Award.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel