TAMIL
- மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட 21 காவல்நிலையங்கள் மற்றும் 4 மகளிர் காவல்நிலையங்கள் என 25 காவல் நிலையங்களில் எழுத்தர் அறை பகுதியில் கணிணியுடன் கூடிய வரவேற்பு அறை பகுதி உருவாக்கப்பட்டு அதற்கான வரவேற்பாளரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
- இவர்கள் காவல்நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு நபரின் வருகைக்கான காரணம் குறித்த பெயர், தேதி, நேரம், மொபைல் எண், புகார் வகை, ஆதார் எண், காவல்நிலைய அதிகாரி உள்ளிட்டவற்றை வரவேற்பாளரிடம் கூறியவுடன் அதனை GREAT இணைய தளத்தில் பதிவிடப்படும்.
- இந்த காவல்நிலைய வரவேற்பு அறை முன்பாக 360டிகிரியுடன், ஆடியோ பதிவுடன் கூடிய சிசிடிவி கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த 25 கேமிராக்கள் முழுவதுமாக காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் கண்காணிக்கப்படும்.
- மேலும் அங்குள்ள வரவேற்பாளர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் அவர்களது தொலைபேசிக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள GREAT திட்ட காவலர்கள் புகார்தராரை தொடர்புகொண்டு புகார் தன்மை குறித்தும், வரவேற்பாளர்கள் மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அதனை பதிவுசெய்வார்கள்.
- இதனுடைய நிலைகள் குறித்து ஆணையருக்கு தெரிவிக்கப்படும் யாரேனும் மனுவை பெறுவதில் தாமதம் ஏற்படுத்தினாலோ, புகார்தாரரிடம் அத்துமீறி நடந்துகொண்டாலோ அந்த காவல்துறையினரின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மீதான பொதுமக்களின் புகார் குறித்து விசாரணை நடத்தப்படும்
- இதன் மூலமாக பொதுமக்கள் நல்லமுறையில் நடத்தபடுவதை உறுதிசெய்யவும், அவர்களது குறைகளை விரைவாக தீர்க்கவும், பொதுமக்கள் காவல் நிலையத்தில் வெகு நேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், இவற்றை கண்காணிக்கவும் காவல்நிலையத்தின் மீதான அச்சத்தையும் போக்கும். பொதுமக்கள் இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்பினால் 0452-2520760 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
- மதுரை மாநகர காவல்துறையின் இந்த திட்டமானது காவல்நிலையங்களின் செயல்பாடுகளை முழுவதுமாக கண்காணிக்கும் பிக்பாஸ் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்பதே நிதர்சனம்.
- 21 police stations and 4 women's police stations under the Madurai Metropolitan Police Commissioner's Office have created a reception room with a computer in the clerk's room area and a receptionist has also been appointed.
- Once they tell the receptionist the name, date, time, mobile number, type of complaint, Aadhaar number, police officer, etc., the reason for each person coming to the police station, it will be posted on the GREAT website.
- A 360 degree CCTV camera with audio recording is installed in front of this police station reception hall. All of these 25 cameras will be monitored in the surveillance room at the Police Commissioner's office.
- Also, based on the information given by the receptionists there, the GREAT project constables in the Office of the Superintendent of Police will contact the complainant on their phone and ask about the nature of the complaint and the actions taken by the receptionists and the police and record it.
- The names of those police officers who delay in receiving the petition or misbehave with the complainant will be selected and the public complaint against them will be investigated.
- This will ensure that the public is treated well, get their grievances resolved quickly, avoid long waits at the police station and monitor them and remove the fear of the police station. If the public wants to provide information in this regard, they can file a complaint on the number 0452-2520760.
- This project of Madurai Metropolitan Police is the reality that Bigg Boss can no longer run and shine to monitor the operations of police stations.