TAMIL
- மத்திய உள்துறை அமைச்சகம், சமீபத்தில் ஜார்கண்டில் 18 வயதுக்குக் கீழான சிறுமிகள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தியதில், பெண் குழந்தை திருமணம் அங்கு அதிகளவில் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கணக்கெடுப்பில், வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளின் சதவிகிதம் 5.8 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அளவில், குழந்தைத் திருமணம் கேரளாவில் 0.00 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த கணக்கெடுப்பில், ஜார்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை கிராமப்புறங்களில் குழந்தைத் திருமணங்கள் 7.3 சதவிகிதம் நடைபெறுவதாகவும், அதே சமயம் நகர்ப்புறங்களில் 3 சதவிகிதமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாதிரிப் பதிவு அமைப்பு (SRS) 8.4 மில்லியன் மக்களிடம் நடத்திய இந்தக் கணக்கெடுப்பின்படி , கருவுறுதல் மற்றும் இறப்பு சார்ந்து இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
- இந்த கணக்கெடுப்பு, 2020-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த மாதம்தான் வெளியிடப்பட்டன. இந்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 50 சதவிகிதத்துக்கும் மேல், 21 வயதுக்குக் கீழான பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.
- மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் திருமணம் செய்து வைக்கப்படும் 21 வயதுக்குக் கீழான பெண்களின் சதவிகிதம், 54.9; ஜார்கண்ட்டில் 54.6 சதவிகிதம். இந்திய அளவில், இது 29.5 சதவிகிதம் என்கிறது கணக்கெடுப்பு.
- தேசிய குற்றவியல் அறிக்கைகள் காப்பகத்தின்படி (NCRB) ஜார்கண்டில் மாந்திரீகங்கள் காரணமாக நடக்கும் கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- தரவுகளின்படி 2015-இல் 32 சதவிகிதம் ஆகவும், 2016-இல் 27 சதவிகிதம் ஆகவும், 2017-இல் 19 சதவிகிதம் ஆகவும், 2018-இல் 18 சதவிகிதம் ஆகவும், 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் 15 சதவிகிதம் ஆகவும் அது இருந்துள்ளது.
- மேலும் இங்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. பெண்களுக்கு எதிரான அமில வீச்சு, பாலியல் குற்றங்கள், திருமணத்தின் பெயரில் பாலியல் வன்முறைகள், கொலைகள் அதிகரித்துள்ளன.
- The Union Home Ministry recently conducted a survey of girls below the age of 18 in Jharkhand and found that child marriage is rampant there.
- In this survey, the percentage of girls who are married before puberty has increased to 5.8 shockingly. It is noteworthy that at the Indian level, child marriage is 0.00 in Kerala.
- In this survey, for the state of Jharkhand, the rate of child marriage is 7.3 percent in rural areas, while it is 3 percent in urban areas. The Sample Registration System (SRS) has released these statistics based on fertility and mortality based on a survey of 8.4 million people.
- This survey was conducted in the year 2020. The results were released last month. According to this survey, more than 50 percent of women under the age of 21 are married in the Indian states of Jharkhand and West Bengal.
- For West Bengal the percentage of girls below 21 years of age who are married is 54.9; 54.6 percent in Jharkhand. At the Indian level, it is 29.5 percent, according to the survey.
- According to the National Crime Records Bureau (NCRB), killings due to witchcraft continue to occur in Jharkhand. According to the data, it was 32 percent in 2015, 27 percent in 2016, 19 percent in 2017, 18 percent in 2018, and 15 percent in 2019 and 2020.
- And reports say that crimes against women are high here. Acid attacks against women, sexual crimes, sexual violence and murders in the name of marriage have increased.