தேசிய விளையாட்டில் 74 பதக்கங்களுடன் தமிழகத்துக்கு 5வது இடம்
- 36-வது தேசிய விளையாட்டு போட்டிகுஜராத்தில் உள்ள 6 நகரங்களில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. இதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
- மொத்தம் 36 விளையாட்டு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. 14 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு திருவிழா முடிவடைந்தது. இதில் பதக்கப் பட்டியலில் சர்வீசஸ்அணி 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என 128 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது.
- மகாராஷ்டிரா 39 தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலம் என 140 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஹரியாணா 38 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலத்துடன் 116 பதக்கங்களை பெற்று 3-வது இடமும் பிடித்தன.
- கர்நாடகா 27 தங்கம், 23 வெள்ளி, 38 வெண்கலப் பதக்கம் என 88 பதக்கங்களுடன் 4-வது இடம் பெற்றது. தமிழகம் 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலத்துடன் 74 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 5-வது இடம் பிடித்தது.
- கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முறையே 6 முதல் 10 இடங்களை பிடித்தன. 37-வதுதேசிய விளையாட்டு போட்டி கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
- இதில் அடுத்த 4 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.6,600 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. 2022-23-ம் நிதியாண்டு முதல் 2025-26-ம் நிதியாண்டு வரை இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும்.
- பிரதமரின் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு முயற்சி (பிஎம்-டிஇவிஐஎன்இ) திட்டத்தின்கீழ் இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும். இந்தத் திட்டங்களுக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்யும்.
- இந்த நிதியின் கீழ் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, தொழிலகங்களுக்கு ஆதரவு, சமூக வளர்ச்சித் திட்டங்களை அமல் செய்தல், இளைஞர், பெண்கள் வாழ்வாதாரத்துக்கு வாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
- வடகிழக்கு கவுன்சில் அல்லது மத்திய அமைச்சகங்கள், ஏஜென்சிகள் மூலம் திட்டங்களை மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை அமல்படுத்தும்.
- 2022-23-ம் நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது பிஎம்-டிஇவிஐஎன்இ திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே தற்போது திட்டத்துக்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் எரிசக்தி மற்றும் மருத்துவ தொழில்நுட்ப துறைகளைச் சாா்ந்த 35 மிகப் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் மூத்த நிா்வாகிகளுடன் மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மேற்கொண்ட ஆலோசனையின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சோந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கிடையே இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
- அமெரிக்க அதிகாரிகளுடன் தூய்மை எரிசக்தி தொடா்பான ஆலோசனையை மேற்கொள்வதற்காக அமெரிக்க பயணத்தை மத்திய அமைச்சா் புரி மேற்கொண்டுள்ளாா்.
- இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க-இந்திய கூட்டுறவு அமைப்பு (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) மற்றும் ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இணைந்து அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தன.
- இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும், எரிவாயு நொதிப்பு தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைச் சோந்த உயிரிதொழில்நுட்ப நிறுவனமான லான்ஸா டெக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின், 'குட்டி காவலர்' என்ற மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
- சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 5,000 மாணவர்கள் கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக மையத்திலும், 4.50 லட்சம் மாணவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அந்தந்த பள்ளி வளாகத்திலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- அதனைத் தொடர்ந்து, 'குட்டி காவலர்' திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சி கையேட்டினையும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்.
- இந்த நிகழ்ச்சி, ஆசிய சாதனை புத்தகமான ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அதற்கான சான்றிதழ் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.
- வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 (மத்திய சட்டம் 53 இன் 1972) பிரிவு 26(A) (1) (1)ன் கீழ் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக "கடவூர் தேவாங்கு சரணாலயம்" அமைத்து தமிழக அரசு அறிவிக்கை செய்துள்ளது.
- தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, அக்.12, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் நிலத்தை இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அறிவிக்கை செய்துள்ளது.
- 3 பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் வழங்குவது என்ற பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் யோசனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்திய எண்ணெய்க் கழகம் (ஐஓசிஎல்), பாரத பெட்ரோலியக் கழகம் (பிபிசிஎல்), இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகம் (ஹெச்பிசிஎல்) ஆகியவற்றுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
- வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாமல் நடப்பதை உறுதி செய்து, இந்தியாவில் உற்பத்திச் செய்யப்படும் பொருட்களின் கொள்முதலுக்கு ஆதரவு தந்து தற்சார்பு இந்தியா திட்டத்திற்கான உறுதிப்பாட்டை தொடர இந்த ஒப்புதல் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு உதவும்.
- ஐஓசிஎல், பிபிசிஎல், ஹெச்பிசிஎல் ஆகிய பொதுத்துறை எண்ணெய் விநியோக நிறுவனங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன.
- 2021-22 ஆம் நிதியாண்டில் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு இணையான உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் முன்தேதியிட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் பூஜை விடுமுறை நாட்களுக்கு முன் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த போனஸ் வழங்கப்படும்.
- இந்த ஆண்டும் 11.27 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையாக உற்பத்தியுடன் இணைந்த போனஸ் தொகை வழங்கப்பட்டது.
- தண்டவாள பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், ரயில் வண்டி பாதுகாப்பாளர்கள் (கார்டுகள்), நிலைய அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள், சமிக்ஞை இயக்குவோர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் சி-பிரிவு ஊழியர்கள் போன்றோருக்கு போனஸ் தொகை வழங்கப்பட்டது.
- அரசு – தனியார் –பங்கேற்பு முறையின் கீழ், கட்டுதல், செயல்படுத்துதல், மாற்றுதல் அடிப்படையில் தீன் தயாள் துறைமுகத்தின் துனா – தெக்ரா சரக்கு பெட்டக முனையத்தை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
- சலுகை உரிமையின் ஒரு பகுதியாக இதன் மதிப்பீட்டுச் செலவு ரூ.4243.64 கோடியாக இருக்கும். பொதுப் பயன்பாட்டு வசதிகள் மேம்பாட்டுக்கான செலவு ரூ.296.20 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது சரக்கு பெட்டக போக்குவரத்தின் எதிர்கால வளர்ச்சியை அதிகரிக்கும்.
- துனா – தெக்ராவின் அதிநவீன சரக்கு பெட்டக முனையத்தின் மேம்பாடு காரணமாக 2025 முதல் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள சரக்கு பெட்டக முனையங்களிலிருந்து 1.88 மில்லியன் சிறு சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் உருவாகும். மேலும், கண்ட்லாவின் வர்த்தக திறனை அதிகரிப்பதோடு பொருளாதாரத்தை ஊக்குவித்து வேலைவாய்ப்பையும் இந்த திட்டம் அதிகரிக்கும்.