நிலவில் அதிகளவு சோடியம் சந்திரயான் 2 கண்டுபிடிப்பு
- சந்திரயான்-1 விண்கலம் நிலவில் சோடியம் இருப்பதை கண்டறிந்தது. இது, தற்போது புது கண்டுபிடிப்பிற்கு வழிவகுத்து கொடுத்துள்ளது.
- இந்தியாவின் சந்திரயான் -2 விண்கலம், முதல் முறையாக நிலவில் உள்ள சோடியத்தின் அளவை கிளாஸ் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் வரைபடமாக்கி உள்ளது.
- பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் கிளாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் வடிவமைக்கப்பட்டது. இது, நிலவில் அதிகளவில் சோடியம் இருப்பதை உறுதிப்படுத்தி, படம் பிடித்து அனுப்பி இருக்கிறது.
- சந்திரயான் -2 ன் இந்த புதிய கண்டுபிடிப்பு, நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் தொடர்பு குறித்த ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த உதவும்.
- கர்நாடகாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
- அக்குழு ஆய்வு செய்து அரசிடம் கொடுத்த அறிக்கையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது.
- இந்நிலையில், பெங்களூருவில் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் என, இதுவரை இவர்களுக்காக இருந்த 18 சதவீத இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படையின் (ஐஏஃப்) வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, ஆயுத அமைப்புகள் (டபிள்யூஎஸ்) கிளை என்ற புதிய கிளையை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஆயுத அமைப்பின் கிளையை உருவாக்கியதன் நோக்கம்மே அனைத்து ஆயுத அமைப்பு நிபுணர்களையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதே ஆகும்.
- இது அனைத்து தரை, வான்வழி ஆயுத அமைப்புகளின் செயல்பாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம் மற்றும் இரட்டை விமானிகள், படையினர் பலர் பயணிக்கும் விமானம் ஆகியவற்றில் ஆயுத அமைப்பை இயக்கும் தொகுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தக் கிளை இருக்கும்.
- இந்திய விமானப் படையின் போர்த் திறனை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தக் கிளை தனது மகத்தான பங்களிப்பை வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படையின் 90வது நிறுவக நாளில் புதிய போர் சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சீருடையில் டிஜிட்டல் கேமோஃப்ளேஜ் பேட்டர்ன் மற்றும் வித்தியாசமான துணி மற்றும் வடிவமைப்பு உள்ளது. இது சண்டிகரில் நடைபெறும் விமானப்படை தின அணிவகுப்பில் விமானப்படைத் தளபதியால் வெளியிடப்பட்டது.
- புதிய சீருடை இந்த ஆண்டு ஜனவரியில் ராணுவத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டிஜிட்டல் முறையைப் போலவே இருக்கிறது. புதிய IAF சீருடையில் நிறங்கள் வழக்காமானவற்றை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது., விமானப்படையின் பணிச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இந்த சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தற்சமயம், விமானப்படையில் தரைப்படைப் பணிகளில் பயன்படுத்தப்படும் உருமறைப்பு முறை எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் இராணுவம் பயன்படுத்தியதைப் போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் (நேஷனல் கேம்ஸ்) குஜராத்தின் 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
- இந்நிலையில் சனிக்கிழமை ராஜ்கோட்டில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹரியாணா 3-0 என தமிழகத்தை வீழ்த்தியது.
- கா்நாடக அணி 11-2 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உத்தரபிரதேச அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என மேற்கு வங்கத்தை போராடி வீழ்த்தியது. அரையிறுதியில் மகாராஷ்டிரா-உ.பியும், கா்நாடகம்-ஹரியாணாவும் மோதுகின்றன.
- மகளிா் பிரிவில் ஹரியாணா-ஜாா்க்கண்ட், ம.பி.-பஞ்சாப் மோதுகின்றன. ஆடவா் ஜூடோ 81 கிலோ பிரிவில் தில்லியின் மொகித் ஷெராவத் தோள்பட்டை காயமுற்ற நிலையிலும் தங்கம் வென்றாா்.
- சைக்கிள் தனிநபா் டைம் டிரையல் பிரிவில் கா்நாடகத்தின் நவீன் ஜான் தங்கம் வென்றாா். வாட்டா் போலோவில் ஆடவா் பிரிவில் சா்வீஸகும், மகளிா் பிரிவில் மகாராஷ்டிராவும் தங்கம் வென்றனா்.
- யோகாசனத்தில் வைஷ்ணவிக்கு தங்கம்: யோகாசனம் ஆா்ட்டிஸ்டிக் பிரிவில் தமிழகத்தின் வைஷ்ணவி 134.22 புள்ளிகளுடன் தங்கமும், மகாராஷ்டிரத்தின் பன்ஸிலால் வெள்ளியும், பூா்வா கினாரே வெண்கலமும் வென்றனா்.