Type Here to Get Search Results !

பீமா சுகம் / BIMA SUGAM

 

TAMIL
  • பீமா சுகம் என்பது இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானைப் போன்ற ஒரு ஆன்லைன் தளமாகும். 
  • அமேசானில் அனைத்து பொருட்களும் ஒரு தளத்தின் கீழ் கிடைப்பது போல், பீமா சுகம் (Bima Sugam) தளத்திலும் அனைத்து ஆயுள் மற்றும் பொது காப்பீட்டுக் பாலிசிகளும் விற்பனைக்கு கிடைக்கும். 
  • அதாவது இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கான மையப்படுத்தப்பட்ட சந்தையாக இந்த தளம் செயல்படும். 
  • இங்கு லைப் இன்சூரன்ஸ், மோட்டார் வாகனம், பொதுக்காப்பீடு என அனைத்து வகையான பாலிசிகளையும் விற்பனை செய்வதோடு, க்ளெய்ம் செட்டில்மென்ட், ஏஜென்ட் போர்ட்டபிளிட்டி, பாலிசி போர்ட்டபிளிட்டி போன்ற சேவைகளையும் பெற முடியும்.
பீமா சுகம் யாருக்கு கிடைக்கும்?
  • இந்த தளத்தில், இடைத்தரகர்கள், தரகர்கள், வங்கிகள், காப்பீட்டு முகவர்கள், பாலிசிபஜார் போன்ற ஒருங்கிணைப்பாளர்கள் இன்சூரன்ஸ் பாலிசிகளை மக்களுக்கு விற்பனை செய்ய முடியும். 
  • இந்த தளத்திலிருந்து மக்கள் நேரடியாக ஆயுள், மோட்டார் மற்றும் உடல்நலக் காப்பீட்டு போன்ற இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கலாம். 
  • பீமா சுகம் மூலம் வாங்கப்படும் அனைத்து இன்சூரன்ஸ் பாலிசிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும். பீமா சுகம் மூலம் பாலிசிதாரர்கள் பல நன்மைகளும் வழங்கப்படுகிறது.
பங்குதாரர்கள் யார்?
  • பீமா சுகம் எக்ஸ்சேஞ்ச் ஐஆர்டிஏ மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த பீமா சுகம் தளத்திற்கு ஆரம்ப மூலதனமாக சுமார் ரூ.85 கோடி தேவைப்படுகிறது. 
  • எனவே ஆயுள் காப்பீட்டு கவுன்சில் 30 சதவீதமும் (ரூ.25 கோடி), ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் 30 சதவீதமும் (ரூ.25 கோடி), ஆன்லைன் பொதுத்துறை வங்கிகள் 35 சடஹ்வீதமும் (ரூ.30) கோடி), தரகர்கள் சங்கம் 5 சதவீதமும் (ரூ. 3 கோடி) நிதி வழங்கியுள்ளன. 
  • காப்பீட்டு நடவடிக்கைகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், அதிக காப்பீட்டு நிறுவனங்கள் முதலீட்டாளர்களாக இணைக்கப்பட உள்ளன.
பீமா சுகம் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
  • இடைத்தரகர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால், அவர்கள் காப்பீட்டு செலவை குறைக்க முடியும். மேலும், இதன் மூலம், கமிஷனாக செலுத்தப்படும் ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் தொகையை, சுமார் 30% முதல் 5% வரை குறைக்க முடியும் என கூறப்படுகிறது.
  • இன்சூரன்ஸ் பாலிசி சம்பந்தமான சேவைகளை பெறுவதில் இன்சூரன்ஸ் கம்பெனியுடன் சிக்கலை அனுபவிக்கும் பயனர்கள் பீமா சுகம் தளத்தில் உள்ள ஏஜென்ட் போர்டபிலிட்டி மூலமாக எளிதாக ஏஜெண்ட்டை மாற்றிக்கொள்ள முடியும். இதன் மூலம் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை பெற முடியும்.
  • பீமா சுகம் தளத்தில் E-BIMA அல்லது E-IA கணக்குகள் டிமேட் அக்கவுண்ட் வடிவத்தில் கிடைக்கும். இந்த டிமேட் அக்கவுண்ட்டில் ஒரிஜினல் ஆவணங்களை நிர்வாகிக்கத் தேவையில்லை என்பதால், இன்சூரன்ஸ் சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும். அதேபோல் பீமா சுகம் தளத்தில் இன்சூரன்ஸ் பாலிசிகளை புதுப்பிக்கும் போது எந்தவிதமான ஆவணங்களையும் சேமிக்க வேண்டிய அவசியமில்லை.
  • இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது, க்ளைம் செட்டில்மென்ட், ஏஜென்ட் போர்டபிலிட்டி, பாலிசி போர்ட்டபிலிட்டி போன்ற அனைத்து சேவைகளுக்கும் ஒரே இடத்தில் இருக்கும் இடமாக மாறும் பீமா சுகம், எதிர்காலத்தில் காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ENGLISH
  • Bhima Sugam is an online platform similar to e-commerce giant Amazon. Just as Amazon has all the products under one platform, Bima Sugam also has all the life and general insurance policies available for sale. This means that the platform will act as a centralized marketplace for insurance policies.
  • Here, apart from selling all types of policies like life insurance, motor vehicle, general insurance, you can also get services like claim settlement, agent portability, policy portability.
Who will get Bhima Sukham?
  • On this platform, aggregators like intermediaries, brokers, banks, insurance agents, policybazaars can sell insurance policies to people.
  • People can buy insurance policies like life, motor and health insurance directly from this platform.
  • All insurance policies purchased through Bima Sugam will be digitized. Bima Sugam also provides many benefits to the policyholders.
Who are the stakeholders?
  • Bhima Sugam Exchange is monitored by IRDA. This Bhima Sugam site requires an initial capital of around Rs.85 crore.
  • Therefore, Life Insurance Council has contributed 30 percent (Rs. 25 crore), General Insurance Council has contributed 30 percent (Rs. 25 crore), Online Public Sector Banks have contributed 35 percent (Rs. 30) crore, and Brokers' Association has contributed 5 percent (Rs. 3 crore). .
  • As insurance operations require more funds, more insurance companies are joining as investors.
What are the benefits of Bhima Sugam?
  • There is no need to pay commission to intermediaries. Thus, they can reduce the cost of insurance. Also, through this, it is said that the amount of life insurance premium paid as commission can be reduced from around 30% to 5%.
  • Users who experience problems with insurance companies in availing insurance policy related services can easily switch agents through Agent Portability on Bhima Sugam platform. By doing this, you can get a better customer experience.
  • E-BIMA or E-IA accounts are available in demat account form on Bima Sugam platform. As there is no need to manage original documents in this demat account, all insurance related documents are preserved digitally. Likewise, there is no need to save any documents while renewing insurance policies on the Bima Sugam site.
  • Bima Sugam, which will become a one-stop destination for all services like purchase of insurance policies, claim settlement, agent portability, policy portability, is expected to be the biggest reform in the insurance industry in the near future.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel