Type Here to Get Search Results !

TNPSC 2nd OCTOBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

விமானப் படையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் அண்மையில் இணைக்கப்பட்டது. 
  • இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்தது. இதுவரை 13 ஹெலிகாப்டர்கள் இந்திய கடலோர காவல்படையில் படிப்படியாக சேர்க்கப்பட்டுள்ளன. இதில் 4 ஹெலிகாப்டர்கள் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல் படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் மேலும் ஒரு உள்நாட்டு தயாரிப்பு ஹெலிகாப்டர் இன்று விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது. இந்த ஹெலிகாப்டரில் ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்டு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. உயரமான மலைகளில் பறக்கக் கூடியதாக இந்த ஹெலிகாப்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இரவு நேரங்களில், மழை காலங்களில் அடர் காடுகளில் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். மொத்தம் 5.8 டன் எடை கொண்டது இந்த இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர். ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பொருத்தி இந்த ஹெலிகாப்டரில் இருந்து தாக்குதல் நடத்தலாம்.
  • ரூ3,887 கோடி மதிப்பிலான 15 ஹெலிகாப்டர்கள் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. விமானப் படைக்கு 0 ஹெலிகாப்டர்களும் ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்களும் வழங்கப்படும்.
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் இந்த ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப் படையில் இந்த ஹெலிகாப்டர் இணைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமான படை தளபதி சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளது
  • நாடு முழுதும் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 
  • இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, 69.14 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
  • இதற்கான விருதை, டில்லியில் நேற்று நடந்த துாய்மை பாரத விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பெற்றுக் கொண்டார். 
  • இதேபோல, ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை வாயிலாக, ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் குறித்து அளவீடு செய்யப்படுகிறது. 
  • அதன்படி, 2021- - 22ம் ஆண்டு தேசிய அளவில், ஊரக சுகாதாரத்தின் தரத்தில், தமிழகத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, ஜனாதிபதியிடம் இருந்து, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.
சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகை மார்ச் 2023 வரை நீட்டிப்பு - ஒன்றிய அரசு உத்தரவு
  • குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
  • உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். 
  • உலகளாவிய விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு ஆகியவற்றால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை கணிசமாக குறையக்கூடும்.
  • சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது தற்போதுள்ள வரி விதிப்பு 2023 மார்ச் 31 வரை எந்த மாற்றமில்லாமல் நீடிக்கும். 
  • சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள் சோயா பீன் எண்ணெய் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது பூஜ்யமாக உள்ளது. 
  • இருப்பினும் இந்த மூன்று வகையான சமையல் எண்ணெய்களுக்கு சுத்திகரிக்கப்படாத வகைகளுக்கான வேளாண் செஸ் மற்றும் சமூக நலத்திட்ட செஸ் 5.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம்
  • இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்று செயல்படுகிறது.
  • இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் பணித்துள்ளது.
  • இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பணியாற்றி வருகிறார். துணை ஆணையராக ஆர்.கே.குப்தா பணியாற்றி வந்த நிலையில், தற்போது அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஜய் பாது, கடந்த 19 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel