TAMIL
- ஆன்மிகம், இசை, கலை, கலாசாரம் ஆகிய பின்புலத்தில் உள்ள தமிழகத்திற்கும், வெளிநாட்டு பயணியர் அதிகம் வருகின்றனர். கடந்த 2015 முதல் உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் வருகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.
- இந்தாண்டு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கடந்த 27ல் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில், 'இந்திய சுற்றுலா புள்ளி விபரங்கள்- - 2022' அறிக்கையை, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டார்.
- கடந்த 2021- - 22ம் ஆண்டில் உள்நாட்டுப் பயணியர், 15 கோடி பேர் சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளனர். இதில், தமிழக முதலிடம் வகிக்கிறது.
- வெளிநாட்டு பயணியர், 12.3 லட்சம் பேர், இந்தியா சுற்றுலா தலங்களுக்கு வருகை தந்துள்ளனர்.
- இதில், தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.குறிப்பாக மாமல்லபுரம் சிற்பங்களை, 1.4 லட்சம் வெளிநாட்டு பயணியர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
- உள்நாட்டு பயணியரால் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக தாஜ்மஹால் முதலிடத்தை பிடித்துள்ளது.
- 2021- - 22ம் நிதியாண்டில், 30.29 லட்சம் உள்நாட்டு பயணியர் வருகை தாஜ்மஹாலை பார்வையிட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக வெளிநாட்டு பயணியர் குறைவாக இருந்துள்ளது
- இந்திய சுற்றுலா தலங்களில், தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.இந்தியாவில் சுற்றுலா தலங்களுக்கு ஆண்டிற்கு, 50 லட்சம் வெளிநாட்டினர், 5.5 கோடி உள்நாட்டு பயணியரும் வருகை தருகின்றனர்.
- Tamil Nadu, which has a background of spirituality, music, art and culture, is visited by many foreign tourists. Since 2015, Tamil Nadu has been consistently at the top in terms of domestic and foreign tourist arrivals.
- On the occasion of this year's World Tourism Day, Vice President Jagadeep Dhankar released the 'Indian Tourism Statistics - 2022' report on behalf of the Union Ministry of Tourism at a program held in New Delhi on the 27th.
- In the last year 2021-22, domestic tourists, 15 crore people have visited tourist places. In this, Tamil Nadu ranks first. Foreign tourists, 12.3 lakh, have visited India's tourist destinations.
- In this, Tamil Nadu has taken the second place. Especially Mamallapuram sculptures have been visited by 1.4 lakh foreign tourists. The Taj Mahal ranks first as the most visited destination by domestic tourists.
- In FY 2021-22, 30.29 lakh domestic tourist arrivals visited the Taj Mahal. Due to the corona virus, foreign travelers are less
- Tamil Nadu continues to be the top tourist destination in India. 50 lakh foreigners and 5.5 crore domestic tourists visit tourist destinations in India every year.