Type Here to Get Search Results !

பீமா சுகம் டிஜிட்டல் மேடை / BHIMA SUGAM DIGITAL PLATFORM

TAMIL 

  • பாலிசிகள் வாங்குவது உள்ளிட்ட காப்பீடு தொடர்பான அனைத்து வசதிகளை அணுகுவதையும் எளிதாக்கும் இந்த டிஜிட்டல் மேடை 'பீமா சுகம்' எனும் பெயரில் அறிமுகம் ஆக உள்ளது. 2023 ம் ஆண்டு ஜனவரி முதல் இந்த மேடை அமலுக்கு வரும். 
ஒரே மேடை 
  • அனைத்து விதமான காப்பீடு வசதிகளுக்கான ஒரே மேடையாக 'பீமா சுகம்' திகழும். இதன் மூலம் நுகர்வோர் தாங்கள் விரும்பும் காப்பீடு நிறுவனத்திடம் இருந்து நேரடியாக பாலிசி வாங்கலாம்.
  • காப்பீடு கோரிக்கை, முகவர் மாற்றம் உள்ளிட்டவற்றையும் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
காப்பீடு நிறுவனங்கள் 
  • பீமா சுகம் மேடையில், அனைத்து காப்பீடு நிறுவனங்களும் இடம் பெற்றிருக்கும். ஆயுள், பொது மற்றும் மருத்துவ காப்பீடு திட்டங்களை அணுகலாம். 
  • முகவர்களும், காப்பீடு தொகுப்பு சேவை இணையதளங்களும் இதில் இடம்பெற்றிருக்கும். 
  • பொது காப்பீடு கவுன்சில், ஆயுள் காப்பீடு கவுன்சில், உள்ளிட்டவை இதன் பங்குதாரர்கள்.
இணைய வசதி 
  • காப்பீடு தொடர்பான அனைத்து வகையான அம்சங்களையும் இந்த டிஜிட்டல் மேடை கொண்டிருக்கும்.
  • காப்பீடு துறையில் இது பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • காப்பீடு பெறுவதை எளிதாக்குவதோடு, அதன் வீச்சை மேலும் அதிகமாக்க உதவும் என கருதப்படுகிறது.
சாதக அம்சங்கள் 
  • காப்பீடு திட்டங்களுக்கான மைய காப்பகமாக இந்த மேடை செயல்படும். 
  • நேரடியாக பாலிசிகளை வாங்கலாம் என்பதால் நுகர்வோருக்கான செலவு குறையும் வாய்ப்புள்ளது. புதுயுக நிறுவனங்கள் அளிக்கக் கூடிய புதுமையான காப்பீடு திட்டங்களை அணுகுவது எளிதாகும்.
  • நுகர்வோருக்கு வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, எல்லாவற்றையும் ஒப்பிட்டு தீர்மானிக்கலாம்.
டிமெட் வசதி
  • இந்த மேடை முற்றிலும் டிஜிட்டல்மயமாக செயல்படும். பாலிசிகளை டிஜிட்டல் வடிவில் பராமரிக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு மின் காப்பீடு கணக்கு அளிக்கப்படும். 
  • பாலிசிகள் டிஜிட்டல்மய செலவை நிறுவனங்கள் ஏற்கும். பாலிசிதாரர்கள் டிமெட் கணக்கு துவக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை.
ENGLISH
  • This digital platform has been launched under the name 'Bima Sugam' which facilitates access to all insurance related facilities including purchase of policies. This platform will come into effect from January 2023.
One platform
  • 'Bima Sugam' will be a single platform for all types of insurance facilities. Through this, consumers can purchase the policy directly from the insurance company of their choice.
  • Insurance claim, change of agent etc. can also be fulfilled.
Insurance companies
  • On the Bima Sugam platform, all the insurance companies are present. Access to life, general and medical insurance plans.
  • It includes agents and insurance package service websites.
  • Its stakeholders include General Insurance Council, Life Insurance Council, etc.
Internet facility
  • This digital platform will have all kinds of features related to insurance.
  • It is expected to bring a huge change in the insurance industry.
  • It is supposed to make getting insurance easier and help increase its coverage.
Pros
  • This platform will act as a central repository for insurance plans.
  • Costs to consumers are likely to come down as policies can be purchased directly. 
  • It is easy to access innovative insurance plans offered by innovative companies.
  • Consumers can compare everything and decide with increased opportunities.
Demet facility
  • This platform will be fully digital. Policies can be maintained digitally. Customers will be provided with an electrical insurance account.
  • Policies companies bear the cost of digitization. Policyholders are not required to open a Demet account.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel