TAMIL
- எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். உலகில் 77 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர்.
- இதில் பெரும்பாலானோர் பெண்கள். ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம்.
- உலகில் பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் 1967 முதல் செப்., 8ல் உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.
- எழுத்தறிவு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும்.
- எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இதயம் போன்றது. கல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழ்கிறது.
- எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும்.
- 'எழுத்தறிவு மற்றும் பன்மொழி பேசுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
- Only through literacy can rights be upheld in a democracy. 77 crore people in the world are illiterate. Most of them are women. Literacy is essential for one's social and economic development.
- World Literacy Day has been observed on September 8 since 1967 by the United Nations with the aim of making everyone literate in the world without discrimination. A person who can speak and write a language correctly with understanding is literate.
- There is no prescribed level of education up to a particular grade to be considered literate. Literacy is a basic human right. Only through literacy can rights be upheld in a democracy.
- Literacy is the heart of basic education. Education is more than knowledge development, it is a symbol of world unity.
- By acquiring literacy, major problems such as poverty, child marriage, population growth, unemployment, gender inequality can be prevented.
- This year's theme is 'Literacy and Multilingualism'.