சிறப்பாக சேவை புரிந்ததற்கான பதக்கத்தை ஓய்வு பெற்ற அட்மிரல் சுனில் லன்பாவுக்கு சிங்கப்பூர் அரசு வழங்கியது
- சிறப்பாக சேவை புரிந்ததற்கான பதக்கத்தை முன்னாள் இந்திய கடற்படை தலைமை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல் சுனில் லன்பாவுக்கு சிங்கப்பூர் அரசு வழங்கியது.
- சிங்கப்பூர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்கப்பூர் அதிபர் எச் இ அலிமா யாக்கூப்புக்கு பதிலாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் டாக்டர் என்ஜி எங் ஹென், விருது வழங்கினார்.
- இந்தியா – சிங்கப்பூர் இடையே பாதுகாப்புத்துறை மற்றும் கடற்படையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மேற்கொண்ட பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது.
- அட்மிரல் சுனில் லம்பா இந்திய கடற்படை தலைமை தளபதியாக இருந்த போது சிங்கப்பூர் – இந்தியா இடையே இருதரப்பு கடல்சார் கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய கடற்படை மூலம் நடைபெற்றது. இவரது தலைமையின் கீழ், இருநாட்டு கடற்படைகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
- இவ்விருதைப் பெறுவதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள ஓய்வு பெற்ற அட்மிரல் சுனில் லம்பா, அந்நாட்டு ராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் மெல்வின் ஓங்க், கடற்படை தளபதி ஆரோன் பெங்க் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
டி.ஆர்.டி.ஓ, இந்திய ராணுவத்தின் துரிதமாக செயலாற்றும் தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையின் ஆறு சோதனைகள் வெற்றி
- இந்தியாவின் துரிதமாக செயலாற்றும் தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணையின் (QRSAM) ஆறு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ-வும், இந்திய ராணுவமும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளன.
- இந்திய ராணுவத்தின் மதிப்பீட்டு சோதனையின் ஒரு பகுதியாக, ஒடிசா கடற்கரைக்கு அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது.
- இந்த சோதனைகளின் போது அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகளுடன் ஆயுதங்களை துல்லியமாக தாக்கும் நோக்கம் பூர்த்தி செய்யப்பட்டது.
- ஏவுகணை சோதனையின் வெற்றியை அடுத்து டி.ஆர்.டி.ஓ-விற்கும், இந்திய ராணுவத்திற்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுகாதாரம், பராமரிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ்நாட்டிலேயே சிறந்த சிறைகளின் பட்டியல்
- சுகாதாரம், பராமரிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ்நாட்டிலேயே சிறந்த சிறையாக, தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3வது இடமும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தையும் பிடித்துள்ளது.
- இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலை, சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த சிறைகளுக்கு தேர்வு செய்தனர்.
- இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3 வது இடத்தை பிடித்துள்ளது. இது, இந்தியாவின் பழமையான சிறைகளுள் ஒன்று. இது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது.
- இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஆந்திராவில் உள்ள மத்திய சிறை 2-வது இடமும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளது.
- இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் பராக்ரம் திவாஸ் அன்று (ஜனவரி 23) நேதாஜியின் ஹாலோகிராம் சிலை திறக்கப்பட்ட அதே இடத்தில், பிரதமரால் திறக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்படும்.
- நேதாஜியின் பிரமாண்ட சிலை 280 மெட்ரிக் டன் எடையுள்ள கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது.
- பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் நவீன கருவிகளைப் பயன்படுத்தி இந்த சிலை முற்றிலும் கையால் செதுக்கப்பட்டுள்ளது. அருண் யோகிராஜ் தலைமையில் சிலை அமைக்கும் சிற்பிகள் குழு அமைக்கப்பட்டது.
- நேதாஜி சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து ட்ரோன்கள் வானில் பறந்து ஒளிரூட்டும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய தலைநகரில் அமைந்துள்ள இந்த பாதை, டெல்லியின் தனி அடையாளமாக உள்ளது. அதே சமயம், இந்த பாதையில் உருவாகி வரும் கட்டடங்களுக்காக ஒதுக்கப்படும் 'செலவினம்' சர்ச்சை நிறைந்ததாகவும் உள்ளது.
- 'கர்தவ்ய பாதை' என அழைக்கப்படும் புதுப்பிக்கப்பட்ட சென்ட்ரல் விஸ்டா அவென்யூ உள்ள பாதையை பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை இரவு திறந்து வைத்தார்.
- சென்ட்ரல் விஸ்டா அவென்யூ - குடியரசு தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பு உட்பட பல முக்கிய நிகழ்வுகள் இந்த இரு முக்கிய கட்டடங்களை இணைக்கும் பாதையில்தான் நடக்கும்.