TAMIL
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
- இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ஆசிய பசிபிக் தேங்காய் சமூகம் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது.
- தென்னை பெரும்பாலும் வெப்ப மண்டல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் உலக அளவில் ஒட்டுமொத்த தேங்காய் உற்பத்தியில் 34 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்தது.
- பெரும்பாலும் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- World Coconut Day is celebrated on 2nd September every year. Especially, this day is considered important in Asia, which is the largest producer of coconuts in the world.
- World Coconut Day is celebrated to create awareness about the benefits of coconuts and to celebrate the diversity of coconuts.
- World Coconut Day is celebrated annually on September 2 to commemorate the creation of the Asia Pacific Coconut Community, an integrated government organization of major coconut producing countries including India.
- Coconut is mostly cultivated in tropical regions. India is the largest producer of coconut in the world. In 2021, India accounted for 34 percent of the total global coconut production.
- Coconut is mostly produced in the southern states of Kerala, Tamil Nadu, Andhra Pradesh and Karnataka.