நாசி வழியே செலுத்தும் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்
- ஒருவரிடம் இருந்து மற்றொரு நபருக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும். இந்நிலையில், நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
- இதன்படி, அந்நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தி கொள்வதற்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் இன்று வழங்கியுள்ளது.
- நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்தும் முறையை மேற்கொள்ளும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.
பிஎம் ஸ்ரீ பள்ளிகள் வளர்ச்சிக்கு ரூ.27 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
- நாடு முழுவதும் 14,500க்கும் அதிகமான பள்ளிகளில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மேம்படுத்தும். இந்தப் பள்ளிகளுக்கு மொத்தச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும்.
- இதில் 2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும்.
- அதே போல் கேரள மாநிலம், கொச்சியில் உள்ள காக்கநாடு வழியாக ஜேஎல்என் மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிக்கும் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்
- பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு அமலாக்கத்திற்காக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை நீண்டகால குத்தகைக்கு அளிப்பதற்கான கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இதன்மூலம், ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும். அதன் மூலம் தொழில்துறையின் சரக்கு போக்குவரத்திற்கான செலவு குறையும்.
- ரயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்கும். மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம், தொலைதொடர்பு கேபிள், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பொதுப்பணிகள், வளர்ச்சியடையும்.
- இக்கொள்கையின் மூலம் 1.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 300 சரக்கு போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படும்.
- நிலத்தின் சந்தை மதிப்பில், ஆண்டுக்கு 1.5 சதவீத வட்டியில், 35 ஆண்டுகள் வரை சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக ரயில்வே நிலங்கள் நீண்ட கால குத்தகைக்கு அளிக்கப்பட உள்ளது.
கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம் கட்டப் பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, காக்கநாடு வழியாக ஜேஎல்என் மைதானம் முதல் தகவல் பூங்கா வரையிலான கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இதற்காக 11 நிலையங்கள் வழியாக 11.17 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.1,957.05 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- அலுவா முதல் பேட்டா வரை 22 நிலையங்களில் 25.6 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.5,181.79 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
- கொச்சி மெட்ரோ முதல் கட்ட 'பி' திட்டத்தின் கீழ் எஸ்என் நிலையம் முதல் திரிபுனித்துரா முனையம் வரை 1.20 கிலோ மீட்டர் தொலைவிற்கு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
TNPSC தேர்வில் பெண்களுக்கான ஒதுக்கீடு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- சதீஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
- அதாவது, 100 சதவிகித இடங்களை மெரிட் மற்றும் சமூக ஒதுக்கீடுகளின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும்போது, ஏற்கனவே 30 சதவிகிதம் அல்லது அதற்கு மேலோ பெண்கள் இருந்துவிட்டால், தனியாக 30 சதவிகிதம் ஒதுக்க அவசியமில்லை என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 சதவிகிதத்திற்கும் கீழ், பெண்களின் பிரதிந்தித்துவம் இருக்கும்பட்சத்தில் 30% ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீட்டை மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- தற்போதுள்ள நடைமுறைப்படி, நியமனத்தின்போது முதலில் பெண்களுக்கான 30 சதவிகிதம் இடங்கள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு, அதன் பிறகு உள்ள 70 சதவிகித இடங்கள் இருபாலருக்கும் ஒதுக்கப்படுகின்றன.
- Horizontal இடஒதுக்கீடு முறையான பெண்களுக்கான ஒதுக்கீடு, Vertical இடஒதுக்கீடு முறையான சமூக ஒதுக்கீடு போல் ஒதுக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
- அரசியலமைப்புச் சட்ட விதிகளிலும், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இனிவரும் பணி நியமனங்களில் நீதிமன்ற அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு நியமனம் செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து இடையே கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இந்தியா மற்றும் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து இடையே 25.04.2022 அன்று கல்வித்தகுதிகளை அங்கீகரிப்பது தொடர்பாக பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- தங்கள் நாட்டின் ஒரு வருட முதுநிலைப் பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் அளிக்குமாறு இந்தியாவிடம், இங்கிலாந்து கேட்டுக் கொண்டது. பின்னர் இது குறித்து புதுதில்லியில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி நடைபெற்ற இருநாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், இது குறித்து பரிசீலிக்க கூட்டு நடவடிக்கைக் குழு, அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.
- இதன் முதலாவது கூட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வரைவுசெய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது.
- இந்தியா – இங்கிலாந்து இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பொறியியல், மருத்துவம், செவிலியர் படிப்பு, துணை மருத்துவ படிப்பு, மருந்தியல், சட்டம், கட்டடக்கலை உள்ளிட்ட தொழில்படிப்புகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், கூட்டு அல்லது இரட்டை பட்டப்படிப்பு படிப்பதற்கான வசதிகள் ஏற்படும்.
இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே கல்வித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, கல்வித்துறை ஒத்துழைப்பில், இந்திய அரசின் கல்வி அமைச்சகம், ஐக்கிய அரபு அரசின் கல்வி அமைச்சகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது.
- கல்வியில், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகமிடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இந்திய அரசின் ஈடுபாட்டை விரிவுப்படுத்துவதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
- கல்வித்துறையில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் 2015-ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018-ஆம் ஆண்டில் காலாவதியானது. தொடர்ந்து, 2019-ல், இருநாடுகளிடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்மொழியப்பட்டது.
- இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய கல்வித்துறையில், தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை உள்ளடக்கியது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தகவல் பரிமாற்றம், தொழில் நுட்பம், தொழில் கல்வி மற்றும் பயிற்சி, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு, இருநாட்டு உயர் கல்வி நிறுவனங்களிடையே, கூட்டு மற்றும் இரட்டைப் பட்டப் படிப்பை வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
- இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி ஒத்துழைப்பை அதிகரித்து, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையே கல்விக்கான இயக்கத்தை அதிகரிக்கும். இந்த பரஸ்பர தகுதிகளை அங்கீகரிக்கும் வகையில் தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கும்.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் இருதரப்பினரின் ஒப்புதலுடன் தானாகவே புதுப்பிக்கப்படும். இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் 2015-ல் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கையெழுத்திட்ட முந்தைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லாததாக்கும். பின்னர் அது செயல்படாது.
இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் – மாலத்தீவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையே பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் – மாலத்தீவு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இடையே பேரிடர் மேலாண்மை துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக ஆகஸ்ட் 2, 2022 அன்று மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே பேரிடர் மேலாண்மைத் துறையில் தயார் நிலை, நடவடிக்கை, திறன் மேம்பாடு. ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு உதவும்.
- இதன் மூலம் ஒரு நாட்டின் பேரிடரின் போது அந்நாட்டின் வேண்டுகோளுக்கு இணங்க அவசரகால மீட்பு , நடவடிக்கை, மனித நேய உதவி ஆகியவற்றுக்கு மற்ற நாடு உதவும்.
- பேரிடர் நடவடிக்கை, திட்டமிடல், தயார் நிலை ஆகியவற்றில் தங்களது அனுபவங்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும்.