Type Here to Get Search Results !

TNPSC 4th SEPTEMBER 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பிரமாண்ட தொலைநோக்கியில் அதிசயம், சுற்றுலா பயணிகளை ஈர்க்க இரவு வான் சரணாலயம் - லடாக்கில் ஒன்றிய அரசு திட்டம்

  • இயற்கை அழகு கொள்ளை கொள்ளையாக கொட்டிக் கிடைக்கும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் , சுற்றுலாவை ஊக்குவிக்க பல முயற்சிகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. 
  • உலகின் உயரமான ரயில் பாதை, நீண்ட மலை சுரங்கப் பாதை, அழகிய நீண்ட தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றை அமைத்து, சர்வதேச அளவில் மக்களை கவர்ந்து வருகிறது. இதன் மற்றொரு அம்சமாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் 'இரவு வான் சரணாலயம்' அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த புதிய 'இரவு வான் சரணாலயம்', லடாக்கில் உள்ள சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக, ஹான்லேயில் அமைக்கப்படுகிறது.
  • இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்க அது உதவியாக இருக்கும். இங்கு வானில் நடக்கும் அதிசயங்களை கண்டு களிப்பதற்காக, ஆப்டிகல், புறஊதாக் கதிர் மற்றும் காமா கதிர்வீச்சு கொண்ட பிரமாண்ட தொலைநோக்கிகள் அமைக்கப்பட உள்ளது. 
  • ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில், முதல் முறையாக இதுபோன்ற முயற்சி செய்யப்படுகிறது. அடுத்த 3 மாதங்களில் இந்த சரணாலயம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

2029ல் ஜெர்மனி, ஜப்பானை முந்தும் இந்தியா - எஸ்.பி.ஐ கணிப்பு

  • தற்போதைய பொருளாதார வளர்ச்சி தொடரும்பட்சத்தில், 2027ல் ஜெர்மனியையும், 2029ல் ஜப்பானையும் முந்தி, உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குமென எஸ்.பி.ஐ பொருளாதார ஆய்வறிக்கை குழு கணித்துள்ளது.
  • கடந்த 2014ம் ஆண்டில் உலகளவில் இந்தியா, 10வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்தது. அதில் இருந்து தற்போது, பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. 
  • 2014 முதல் கணக்கிடுகையில், 7 இடங்கள் முன்னேறுவது என்பது குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்குமென எஸ்.பி.ஐ தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தலைமையிலான குழுவினரின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
  • 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி 13.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் நடப்பு நிதியாண்டில் இந்தியா, மிக வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இருக்கும்.

ஆளுநர் ஒப்புதலின்றி கைதிகளை விடுவிக்கலாமா? - அரசியல் சாசன அமர்வை அமைத்தார் தலைமை நீதிபதி யு.யு.லலித்

  • அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் ஆளுநரிடம் பதிவுகளை சமர்பிக்காமல், மாநில அரசுகளே கைதிகளை மன்னித்து, முன்கூட்டி விடுவிப்பது சாத்தியமா என்பது குறித்து விவாதிக்க, நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் அரசியல் சாசன அமர்வை தலைமை நீதிபதி யு.யு.லலித் அமைத்தார்.
  • நீதிபதிகள் எம்.எம். சுந்தரரேஷ், சூரியகாந்தி, ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel