தேசிய சட்ட ஆணைய செயல் தலைவராக நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தேர்வு
- தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக நீதிபதி சந்திரசூட்டின் பெயரை அண்மையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரைத்திருந்தார்.
- இதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
- முன்னதாக, தேசிய சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவராக தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சமீபத்தில் பொறுப்பேற்றார்.
- இதையடுத்தே சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவராக சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் 5-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா
- 2021-ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்ததாகவும், இதனால் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா இந்தப் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தது.
- சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்ட தகவலின்படி, 2014-ம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தி 3 டிரில்லியன் டாலராகவும் இருந்தது.
- மேலும், 2022-ல் இந்தியாவின் ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலராகவும், பிரிட்டனின் ஜிடிபி 3.4 டிரில்லியன் டாலராகவும் உள்ளது. அதேசமயம், 2027-ல் இந்தியாவின் ஜிடிபி 5.5 டிரில்லியன் டாலராக இருக்கும். ஆனால், அந்த சமயத்தில் பிரிட்டனின் ஜிடிபி 4.6 டிரில்லியன் டாலராகவே இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.
தென்மண்டல கவுன்சில் கூட்டம் 2022
- மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மாநில காவல் துறை தலைவர்கள் பங்கேற்ற, 30-வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகேயுள்ள கோவளத்தில் நடை பெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இக்கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
- இந்தக் கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
tnpsc-3rd-september-2022-current
மெக்சிகோவில் விவேகானந்தர் சிலை - ஓம்பிர்லா திறந்து வைத்தார்
- பாராளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமயிலான பார்லி., குழு, நட்பு முறை பயணமாக லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோ சென்றுள்ளது.
- அங்குள்ள ஹிடால்கோ நகரில் மெக்சிகோ பல்கலை. வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தர் சிலையை சபாநாயகர் ஓம்பிர்லா திறந்து வைத்தார்.
- பின்னர் மெக்சிகோ நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாடுகளிடையே பொருளாதாரம், வணிகம் மற்றும் கலாச்சாரம் குறித்து பேசினார்.
- இது குறித்து ஓம்பிர்லா டுவிட்டரில் கூறியது, சுவாமி விவேகானந்தரின் போதனைகள் எல்லை கடந்து செல்லும். இச் சிலை இளைஞர்களுக்கு உத்வேகத்தைத் தோற்றுவிக்கும். நான் இங்குத் சிலையை திறந்து வைப்பதை மிகவும் கௌரவமாக கருதுகிறேன்.
தூத்துக்குடியில் அகழ்வாராய்ச்சியை துவக்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு
- தூத்துக்குடி புதிய துறைமுகத்தில், சங்க கால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடல்சார் முன் கள ஆய்வுப் பணியை தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்துள்ளார்.
- 2022ம் ஆண்டு முதல் தமிழகத்தில், தமிழக தொல்லியல் துறை சார்பில் ஏழு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இந்திய கடலாய்வு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்திற்கு எதிரில் கடல்சார் சங்க கால கொற்கை துறைமுகத்தின் தொல்லியல் வளத்தினை கண்டறிய கடல் சார் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
- பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச் சிறந்த துறைமுகமாக செயல்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டு கொற்கையில் தமிழக அரசு தொல்லியல் துறை, அகழாய்வு மேற்கொண்டுள்ளது.
- முதல் அகழாய்வில் கொற்கையின் காலம் பொ.ஆ.மு 785 என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கொற்கையில் அகழாய்வு நடைபெற்றுள்ளது.
- 2 அகழாய்வின்படி கிமு 8ம் நூற்றாண்டிற்கு முன்னரே கொற்கை மிக முக்கிய துறைமுகமாக செயல்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
- இவ்வாய்வில் கொற்கை துறைமுகத்தின் தொன்மையைக் கண்டறிவதற்காக பல்வேறு அறிவியல் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.